Published:Updated:

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்!

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்!

தொழில்நுட்பம் துரை.நாகராஜன், படங்கள்: இ.பாலவெங்கடேஷ்

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்!

தொழில்நுட்பம் துரை.நாகராஜன், படங்கள்: இ.பாலவெங்கடேஷ்

Published:Updated:
நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்!

ம்மாழ்வார் என்ற ஆலமரத்திலிருந்து உருவாகியுள்ள ஆயிரக்கணக்கான விழுதுகள் நாடெங்கிலும் பரவி நம்மாழ்வாரின் கொள்கைகளையும் தொழில்நுட்பங்களையும் பரப்பிவருகின்றன. அப்படி ஒரு

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!

விழுதுதான், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு. நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சுப்புவைச் சந்தித்துப் பேசினோம். “ரசாயனத்தால் கெட்டுப்போன மண்ணை மாற்ற வேண்டும், தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார் நம்மாழ்வார் ஐயா. பஞ்சகவ்யா, அசோலா போன்ற இயற்கை பொருள்களைப் பயன்படுத்தித் தற்சார்பு விவசாயம் செய்ய முடியும் என உறுதிப்படச் சொல்லி அவற்றைத் தயாரிக்கும் முறைகளையும் கற்றுக்கொடுத்து வந்தார். அவர் சொல்லிக்கொடுத்த மண்புழு உரம், அசோலா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்...போன்ற இடுபொருள்களின் தயாரிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான் நான் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறேன். மற்ற விவசாயிகளுக்கும் இதைக் கற்றும் கொடுக்கிறேன்” என்ற சுப்பு தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேசினார்.

“காய்ந்த தென்னை மட்டைகளை இரண்டு அடித்  துண்டுகளாக வெட்டி, இலை தழைகளோட கலந்து 12 அடி நீளம், 2 அடி அகலத்துல மேட்டுப்பாத்தி மாதிரி பரப்புவேன். சாணம், மாட்டுச் சிறுநீர் ரெண்டையும் கலந்து, அந்தக் கலவைமேல தெளிச்சுவிடுவேன். அதன்மீது திரும்பவும் மட்டைகள், தழைகளை அடுக்கடுக்காகப் போடுவேன். இப்படிப் போட்டு வெச்சுட்டா அதுல இருந்து நிறைய மண்புழு உரம் கிடைக்கும். அதைச் சலிச்சு பயிருக்குப் பயன்படுத்திட்டிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!

 மட்கவைத்த இலைதழை உரத்துடன் சுப்பு...

அசோலா வளர்க்கிறதுக்கு 12 அடி நீளம், 6 அடி அகலம் ஒன்றரை அடி ஆழம் இருக்கிற மாதிரி குழிகளை வெட்டி, பாலீத்தீன் ஷீட்டை விரிச்சு வெச்சுக்கணும். சம அளவு செம்மண், வயல்மண் ரெண்டையும் கலந்து குழியில் அரை அடி உயரத்துக்கு நிரப்பிவிட்டு 10 கிலோ பாறைத்தூளைப் போடணும். அடுத்து 15 கிலோ சாணத்தை 10 லிட்டர் தண்ணீர்ல கலந்து ஊத்தி விதை அசோலாவைப் போடணும். இப்படிச் செய்ததுல அசோலா கிடைச்சிட்டே இருக்குது. அப்பப்போ சாணம் மட்டும் போட்டுட்டு இருந்தா போதுமானது. தேவைப்பட்டா மண்ணை மாத்திக்கலாம். அசோலா ஆடு மாடுகளுக்கு நல்ல தீவனம்.

பூச்சிகளை விரட்டுறதுக்கு இஞ்சி, பூண்டு கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி ரெண்டையும் பயன்படுத்துறேன். சம அளவு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூணையும் எடுத்து, தனித்தனியா தண்ணீர்விட்டு அரைச்சு, அதை மாட்டுச் சிறுநீர்ல கலந்து வெச்சிடுவேன். ஒரு வாரம் கழித்து, இதுல இருந்து 500 மில்லியைப் பத்து லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சி பூச்சிகளை விரட்டலாம்.

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!
நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!

அதேபோல, ஊமத்தை, வேம்பு, துளசி, எருக்கு, நொச்சி, தும்பையோட இலைகள்ல ஒவ்வொண்ணுலயும் 6 கிலோ அளவு எடுத்து, 6 லிட்டர் மாட்டுச் சிறுநீர்ல ஒரு வாரம் ஊற வெச்சு வடிகட்டினா மூலிகைப் பூச்சிவிரட்டி தயாராகிடும். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் பூச்சிவிரட்டினு கலந்து பயன்படுத்தலாம்” என்ற சுப்பு நிறைவாக,

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!

“இது எல்லாமே நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த விஷயங்கள்தான். இந்த எளிமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும். அதுக்கு நானே நல்ல உதாரணம். காஞ்சிபுரம் மாவட்டத்துல விஞ்ஞானி அரு. சோலையப்பன், ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன்... போன்ற இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து, இயற்கை விவசாய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளையும் நம்மாழ்வார் வழியில நடத்துறோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,
செல்போன்: 96006 12649.

வாழ்ந்து காட்டினார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன் நம்மாழ்வார் குறித்த சில விஷயங்களை நம்மிடம் சொன்னார்.

நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த  நல் தொழில்நுட்பம்!

“1997-ம் வருஷத்துலதான் நம்மாழ்வார் ஐயா எனக்கு அறிமுகம். நாங்க ரெண்டு பேரும் நிறைய கிராமத்துக்குப் போய் இயற்கை விவசாயக் கூட்டங்கள் நடத்தியிருக்கோம். அந்தக்காலத்துல ஒரு கூட்டத்துக்கு 20 பேர் வந்தாலே பெரிய விஷயம். ஆனா இப்போ, அவர் படத்தை மட்டுமே வெச்சுக்கிட்டு நடத்துற கூட்டத்துக்கு வருகிற மக்களோட எண்ணிக்கையைப் பார்க்கிறப்போ பிரமிப்பா இருக்கு. இன்னிக்கு இயற்கை விவசாயம் இந்த அளவுக்குப் பரவியிருக்கிறதுக்கு நம்மாழ்வார் ஐயாவோட அயராத உழைப்புதான் காரணம். விவசாயிகள்கிட்ட அறிவியல் விஷயங்களைக்கூட எளிமையா, புரியுற மாதிரி எடுத்துச் சொல்வார். அதுதான் அவருடைய பலம். ரசாயன உரங்களை நிறுத்துறது மட்டும் இயற்கை விவசாயம் இல்லை. இயற்கையோடு சேர்ந்து வாழ்வதுதான் இயற்கை விவசாயம்னு வாழ்ந்து காட்டினவர்” என்றார்.

அமுதக்கரைசல்

அமுதக்கரைசல்... இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். நோய்த் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளர உதவும். பொதுவாக 15 நாள்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாகக் காணப்பட்டால், வாரம் ஒருமுறைகூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

தயாரிப்பு முறை...

ஒரு தடவை போட்ட மாட்டின் சாணம் (எந்த வகை மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), சிறுநீர் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீரைச் சேர்க்கவேண்டும். இதை 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைத்தால் அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஓர் ஏக்கருக்குப் பத்து டேங்க் (1 டேங்க்-10 லிட்டர்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். பாசன நீரிலும் கலந்துவிடலாம்.

'பலே’ பஞ்சகவ்யா!

பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களை மட்டும் பயன்படுத்திப் பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது. 5 கிலோ பசுமாட்டுச் சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கி, 30-50 லிட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்முக்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாள்கள் சாணம், நெய் கலவை டிரம்முக்குள் இருக்கும். நான்காவது நாள் மூடியைத் திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம் ஆகிய நான்கு பொருள்களைச் சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்க வேண்டும்.

3 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ நாட்டுச் சர்க்கரையைக் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி டிரம்முக்குள் ஊற்றவேண்டும். நாட்டுச் சர்க்கரையை நேரடியாகச் சேர்க்கக்கூடாது. தொடர்ந்து 10 நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் டிரம்முக்குள் இருக்கும் கரைசலைத் திறந்து, கடிகார முள் சுழலும் திசையில் கலக்கி விடவேண்டும். இந்தக் கரைசலைக் கலக்க பிரத்யேகமாக ஒரு ராட்டையை (கலக்கி) தயார் பண்ணி வெச்சிருக்கேன். இதுமூலமாத்தான் பஞ்சகவ்யாவைக் கலக்கிறேன். கலக்கிய பின் மூடிவைக்க வேண்டியது முக்கியம். 11-வது நாளில் கள்ளை டிரம்மில் உள்ள கரைசலுக்குள் ஊற்றி, தொடர்ந்து 7 நாள்கள் இருவேளை கலக்கி வர வேண்டும். 19-வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதைப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism