Published:Updated:

விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!

விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!
பிரீமியம் ஸ்டோரி
விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!

நாட்டு நடப்புபசுமைக்குழுபடங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார்

விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!

நாட்டு நடப்புபசுமைக்குழுபடங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார்

Published:Updated:
விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!
பிரீமியம் ஸ்டோரி
விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!

நாணயம் விகடன் இதழ் சார்பாக, நிதி-தொழில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி (Finance & Business Conclave and Expo) கடந்த டிசம்பர் 16-17 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன், “நாணயம் என்றால் நேர்மை, நாணயம் என்றால் பணம். பணத்தை நேர்மையான முறையில் சம்பாதிக்கவும் முதலீடு செய்யவும் நாணயம் விகடன் வழிகாட்டியாக இருக்கிறது. ஒரு டஜன் ஆண்டுகளைக் கடந்து 13-ம் ஆண்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. தனி மனிதனின் வருமானத்தைக்கூட்ட, சரியான முதலீடுகளைச்செய்ய, தேவையான காப்பீடுகளைச்செய்ய, அதிகப்படியான வரிச்சலுகைகளைப் பயன்படுத்தி வரி இழப்புகளைக் குறைத்து, தனி மனிதனின் நிதி மேலாண்மையைச் செம்மைப்படுத்தும் பணியில் நாணயம் விகடன் செயல்படுகிறது” என்றார்.

விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியகுமார் பேசும்போது, “ஒரு பத்திரிகையால், நாட்டில் என்ன மாற்றம் ஏற்படுத்த முடியும்? என்பதை நேரடியாக அறிந்துகொண்டேன்.

அண்மையில் காரைக்குடி அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள விவசாயிகளுடன் பேசும்போது.... ‘நாங்கள் பசுமை விகடன் மூலமாக இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளோம். அதன்மூலம் பயன்பெற்று வருகிறோம்...’ என்று அந்த விவசாயிகள் சொன்னபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாற்றம் உண்மையிலேயே மகத்தானது. இந்தத் தகவலை, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநருடனும் விகடன் வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 

தமிழ்நாட்டில் பரவலாகச் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதை அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கிகள், அதை நிர்வகித்து வருகின்றன. இந்தப் பயிற்சி மையங்களில் விவசாயம், கைத்தொழில் உள்ளிட்டவை குறித்து முழுமையான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. பயிற்சியை முடித்தவர்களுக்கு வங்கிகள்மூலம் கடனுதவி பெறவும், இந்தச் சுய வேலைவாய்ப்பு மையங்கள் வழிகாட்டி வருகின்றன. இந்த மையங்களில் வழங்கப்படும் பயிற்சியை முடித்தவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகி வருகின்றனர்’’ என்றார்.

ஆட்டோமேஷன் மற்றும் ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் சவால்கள் (Automation and AI - The Biggest Challenge) குறித்துச் சென்னை ஐ.ஐ.டி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வி.காமகோடி பேசும்போது,

“செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நுட்பத்தை விவசாயத்துக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பயன்படுத்த முடியும். கும்பகோணம் அருகில் உள்ள விஷ்ணுபுரத்தில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு இயற்கை விவசாயம் செய்துவருகிறேன். இயற்கை விவசாயத்தின் உன்னதத்தை என் நிலத்தில்தான் உணர்ந்தேன். நவரா என்கிற பாரம்பர்ய நெல்லைப் பயிரிட்டிருந்தேன். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட குருவிகள் நெல்லைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அருகிலுள்ள ரசாயன நிலங்களில் உள்ள நெல்லைக் குருவிகள் சாப்பிடவில்லை. குருவிகளுக்கே தெரிகிறது எது ரசாயனம், எது இயற்கை என்று” என்றவர், ‘‘என் நிலத்தில் நாற்பது அடி உயரத்தில் தென்னை மரங்கள் உள்ளன. இவ்வளவு உயரமான மரத்திலிருந்து தேங்காய் பறிக்க ஆள் கிடைப்பதில்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், மரத்திலிருந்து அவர் கீழே இறங்கும் வரை மனம் பதைத்துக் கொண்டே இருக்கும். உயரமான மரத்தில் ஏறியவருக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டிருப்பேன். ஆனால், இப்படி ஆபத்தான வேலைகளை, செயற்கை நுண்ணறிவுமூலம் சுலபமாகச் செய்ய முடியும். அதாவது, தென்னை மரம் ஏற, எளிமையாக ரோபோவை வடிவமைக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’!

அந்த ரோபோவுக்கு எது இளநீர், எது முற்றிய தேங்காய் என்பதை அறிந்துகொள்ள அல்ட்ரா சவுண்டு நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஒரு மொபைல்போன் மூலமாக, கீழே இருந்தே இந்த ரோபோவை இயக்கி, தேங்காய் பறிக்க முடியும். இந்தப் பணியினை ஏற்கெனவே, தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்தவரே செய்ய முடியும். ஆபத்தான வேலைகளைச் செயற்கை நுண்ணறிவுமூலம், எளிமையாகச்செய்துவிட முடியும். இதன்மூலம் மனிதர்களின் ஆற்றலை, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும். இதை ஓர் உதாரணத்துக்குத்தான் சொன்னேன். இதைப்போல, ஏராளமான பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை, விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியும்’’ என்றார். இரண்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ஜி.எஸ்.டி வரி... போன்றவை குறித்து வல்லுநர்கள், பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினார்கள். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு, தங்களின் எதிர்கால இலக்கை வகுத்துக்கொள்ள வழிகாட்டியாக அமைந்தது இந்த நிகழ்வு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism