Published:Updated:

காற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!

காற்றில் கார்பனைக் குறைக்கும்  இயற்கை விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!

நாட்டுநடப்புத.ஜெயகுமார்

காற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!

நாட்டுநடப்புத.ஜெயகுமார்

Published:Updated:
காற்றில் கார்பனைக் குறைக்கும்  இயற்கை விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!

னைத்து வகையான தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் (National Bio-Diversity Authority) மற்றும்
எம்.எஸ்.சுவாமிநாதன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து பத்திரிகையாளர் களுக்கான பயிற்சி வகுப்பை நடத்தின. இந்த வகுப்பு கடந்த நவம்பர் 29-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பல்லுயிர் பெருக்கப் பகுதியான கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், புத்தூர்வயலில் இந்தப் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் தென்னிந்திய ஊடகங்களிலிருந்து வந்திருந்த பலர் கலந்துகொண்டனர்.

தொடக்க நாளில் பேசிய தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் செயலாளர் ரபிகுமார், “உலக அளவில் 20 லட்சம் தாவர, விலங்கினங்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 92 ஆயிரம் இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவ்வளவுக்கும் உலகப் புவியியல் பரப்பில் இந்தியாவின் பகுதி 7-8 சதவிகிதம் மட்டுமே. இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலை பல்லுயிரினங்கள் வாழ்வதற்கு முக்கியப் பகுதியாக இருந்துவருகிறது. அடுத்துதான் இமயமலை உள்ளது.

காற்றில் கார்பனைக் குறைக்கும்  இயற்கை விவசாயம்!

 பயிற்சியில் ரபிகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மால் ஒரு சிறு உயிரியைக்கூட உருவாக்க முடியாது. அதனால், இருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற வேண்டியது அவசியம். உலக மக்கள் தொகை 7 பில்லியன் (700 கோடி). ஓர் ஆண்டுக்கு ஒரு நபர் 35 கிலோ பாலித்தீன் கழிவுகளை வெளியேற்றுகிறார். முடிந்த அளவு பாலீத்தீன் கழிவுகள் இல்லாத பகுதியாக உருவாக்கி, மற்ற உயிர்களும் இந்தப் பூமியில் வாழ வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த முனைவர் அனில்குமார் பேசும்போது, “மரபு ரீதியாகப் பாரம்பர்ய விதைகள்தான் பல்லுயிரினப்பெருக்கத்தை உள்ளடக்கியவை. இந்தியாவில் 10 ஆயிரம் வகையான பாரம்பர்ய நெல் விதைகள், பல வகையான மிளகு ரகங்கள் இருந்தன. இப்போது மிகவும் குறைவான நெல் ரகங்கள்தான் இருக்கின்றன. குறிப்பாக, சிவப்பரிசி நெல் வகைகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வளர்கின்றன.  இங்கே, வயநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் இருந்தன. அவற்றில் 7 ரகங்களை மீட்டுப் பழங்குடிகள்மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கந்தகசாலா, சோமலா, நவரா உள்ளிட்ட ரகங்கள் முக்கியமானது. இதில் சில ரகங்கள் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. 

காற்றில் கார்பனைக் குறைக்கும்  இயற்கை விவசாயம்!

வயநாட்டில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்து இந்தியாவில் ‘கார்பன் சமநிலை’ (Carbon Neutral) கொண்ட பஞ்சாயத்தாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2020-க்குள் 100% கார்பன் இல்லாத பஞ்சாயத்தாக உருவாக்கப்படும். இதற்கு, இங்கு மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாயமும் ஒரு காரணம். இயற்கை விவசாயத்தால் பல வகையான தாவரங்கள் வளர்கின்றன. மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுகிறது. வாகனங்கள், பசுமைக் குடில் மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டுக் காற்றில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு குறைந்திருப்பது இங்கு நிரூபிக்கப்பட்டு வருகிறது.

 இங்கு, கிராம மக்களை ஒருங்கிணைத்து பி.எம்.சி எனப்படும் பல்லுயிர்பெருக்க இயக்கக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பல்லுயிரினப் பெருக்கத்தைப் பற்றிய புரிதலும் உருவாக்கப் பட்டுள்ளது” என்றார்.  சுற்றுச்சூழலியலாளர் குன்னி கிருஷ்ணகுமார் பேசும்போது, “உலகிலேயே மிகச் சிறந்த மிளகு, பட்டை மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் கிடைக்கிறது. இந்த மிளகு மீது மையல்கொண்டுதான் ஆங்கிலேயேர்களே இந்தியாவுக்கு வந்தார்கள். ஒரு வரலாற்றையே உருவாக்கிய சிறப்பு மிளகுக்கு உண்டு”  என்றார்.

மதுரா சுவாமிநாதன் பேசும்போது, “பருவநிலை மாற்றம் விவசாயத்தையும் பெரியளவில் பாதித்து வருகிறது. ஒரு வருஷம் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டால், அது பருவநிலை மாற்றம் கிடையாது. 30 ஆண்டுகளின் சராசரி மழை அளவு, வெப்பநிலை, வறட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து கணக்கிட்டு, அதன்மூலம் வரும் முடிவுகளை வைத்துத்தான் பருவநிலை மாற்றத்தைக் கணக்கிட வேண்டும். அப்படிக் கணக்கிட்டு, கர்நாடக மாநிலத்தில் ஒரு பகுதியில் ஆராய்ந்தறிந்துதான் பருவநிலை மாற்றம் உண்மையெனக் கண்டறிந்தோம்” என்றார்.

காற்றில் கார்பனைக் குறைக்கும்  இயற்கை விவசாயம்!

முனைவர் சலீம் கான் பேசும்போது, “பருவநிலைமாற்றத்தால் கடல் மட்டம் உயர்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இந்தக் கடல்நீர்மட்டம் உயர்ந்தால், கடல்நீர் விவசாய நிலங்களுக்குள் புகும். அப்படிக் கடல்நீர் உள்ளே வரும்போது அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. அதனால், பருவநிலை மாற்றம் குறித்து விவசாயிகளும் அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்றார்.

மூன்று நாள்களும் பல்லுயிர்பெருக்கத்தைப் பற்றி நிபுணர்களின் பேச்சு, கலந்துரையாடல்களுடன் பழங்குடிகள் மேற்கொண்டு வரும் விவசாயம், பலவித தாவரங்கள் அடங்கிய சோலைக்காடுகள் பார்வையிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism