Published:Updated:

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!
பிரீமியம் ஸ்டோரி
அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

குறுந்தொடர்-5பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

குறுந்தொடர்-5பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

Published:Updated:
அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!
பிரீமியம் ஸ்டோரி
அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

ந்தமான்... தண்ணீருக்கு நடுவே குடியிருப்புகள், அடர்ந்த வனங்கள், தொல்குடிகளான வனமகன்கள், வகைதொகையில்லா உயிரினங்கள்... எனப் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக நடைபெறும் தீவுக்கூட்டம் இது. இந்தத் தண்ணீர் தேசத்திலும் தளராமல் விவசாயம் செய்கிறார்கள், அத்தீவுகளில் வசிக்கும் விவசாயிகள். ஒரு காலத்தில் சாபமாக இருந்த தண்ணீரைச் சில தொழில்நுட்பங்கள் மூலமாக வரமாக மாற்றிக்கொண்டவர்கள் இவர்கள்.

விவசாயிகளுக்கு இத்தொழில்நுட்பத்தை அளித்ததில் போர்ட் பிளேயரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பங்கு முக்கியமானது.

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

கடந்த 2004-ம் ஆண்டு வீறுகொண்டு வந்த ஆழிப் பேரலையால்(சுனாமி) அந்தமான் சிதிலமானபோது, அதை மீட்டெடுத்ததில், மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு நிகராக ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவை. உவர் நிலமான மண்ணை, விளைநிலமாக மாற்ற நம்மாழ்வார் சொன்ன உத்திகள், இயற்கை வேளாண்மை தொடர்பாக அந்தமான் விவசாயிகளுக்கு அவர் கொடுத்த பயிற்சிகள், அங்கே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்தமான் தீவுகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், நம்மாழ்வாரை இன்றைக்கும் தேவதூதனாகவேதான் கருதி வருகிறார்கள்.

நம்மாழ்வாரை அந்தமானுக்கு அழைத்து, அங்கு இயற்கைக் கொடியைப் பறக்கவிடும் பணியைத் தொடங்கி வைத்தவர் முனைவர் வேல்முருகன். மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

“கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம், நம்மாழ்வார் ஐயாவோடு செல்போனில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஐயா நீங்கள் அந்தமான் வரவேண்டும். இங்கும் இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசவேண்டும்’ என வேண்டுகோள் வைத்தேன். ‘அதுக்கென்னய்யா வந்துட்டா போச்சு. அங்க வந்து பேசுறது மட்டுமில்ல, செயல்லயே செஞ்சி காட்டிடுவோம். அந்தமான் விவசாயிகளைச் சந்திக்கணும்னு எனக்கும் ஆவலாத்தான் இருக்கு’ என்றவர், அடுத்த இரண்டே வாரங்களில் பசுமை சிகரம் யோகநாதன் குழுவினரோடு அந்தமான் வந்து சேர்ந்தார். ஒரு வாரகாலம் தங்கியிருந்து, இங்கிருக்கும் வேளாண் அறிஞர்கள், விஞ்ஞானிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தினர், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டவர், அங்கு நடந்து வந்த மீட்புப்பணிகளையும் பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் அன்பொழுகப் பேசினார். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்பதுபோல, அங்கு மொழி தடையாகவே இருக்கவில்லை. அந்தமான் விவசாயிகள் அவரை அன்போடும், பாசத்தோடும், குருவுக்கான மரியாதையோடும் பார்த்தது, இன்றைக்கும் என் கண்முன்னால் நிழலாடுகிறது.

அவர், இங்குள்ள விவசாயிகளுக்குப் பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, அமுதக்கரைசல், மீன் அமினோ அமிலம் போன்ற இயற்கை இடுபொருள்களைத் தயாரித்துப் பயன்படுத்தும் முறைகளைப் பொறுமையாகவும் விளக்கமாகவும் கற்றுக்கொடுத்துச் சென்றார்.

அவருடைய வழிகாட்டல்படி, இன்றைக்குப் பலர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். அவர் அந்தமானில் இருந்து விடைபெற்ற தினம், அவரை வழியனுப்ப விமான நிலையத்தில் பெரிய கூட்டமே கூடிவிட்டது. வழக்கமாக மழை பெய்யாத அந்த மாதத்தில், அன்றைக்கு வானம் மழையை அடித்து ஊற்றியது. அந்தமானுக்கு வந்து, தன்னுடைய அனுபவத்தை இங்கு விதைத்துச் சென்ற அந்த மகானை, அந்தமான் என்றைக்கும் மறக்காது” என்று பேசும்போது உணர்ச்சிவசப்பட்டவர். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய வேல்முருகன், அந்தமானில் உள்ள வேளாண்சார் தொழில்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“அந்தமானில் நறுமணப்பொருள்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் விளைந்த மிளகு, ஏலக்காய் போன்ற பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

தமிழகத்தில் இருந்து நறுமணப் பொருள்களை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்யலாம். இது சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இடமென்பதால், நறுமணப்பொருள்களைப் பரிசுப் பெட்டியாக (கிஃப்ட் பேக்) கொண்டுவந்தால், நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், தேயிலைத்தூளுக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது. கிரீன் டீ, இயற்கை முறையில் விளைந்த டீத்தூள் ஆகியவற்றுக்குத் தேவை அதிகம் இருக்கிறது. மஞ்சள்தூள், மளிகைப் பொருள்களுக்கும் அந்தமானில் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது.

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

அதேபோல, அந்தமானில் சில வகைத் தேங்காய்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அளவில் பெரிதாக உள்ள அந்தத் தேங்காய்களை, வாங்கிச் சென்று, தமிழ்நாட்டில் கொப்பரையாகவோ, எண்ணெய் எடுத்தோ விற்பனை செய்யலாம். அந்தமானில் பாக்கும் அதிகமாக விளைகிறது. அளவில் பெரிதான, தரமுள்ள இந்தப் பாக்கை வாங்கிச்சென்று தமிழகத்தில் வியாபாரம் செய்யலாம்” என்றார்.

மத்திய அந்தமான் வனங்களில் வசிக்கும் ஜோர்வா பழங்குடி மக்கள், உடையில்லாமல் ஆதிமனிதர்களாகவே இருக்கிறார்கள். இந்த வனத்துக்குள் செல்லும் சாலை, இவர்களுக்கு மிகப்பெரிய இடையூறு. சுற்றுலாப் பயணிகளால் இவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தற்போது சுற்றுலாப் பயணிகள் பழங்குடி மக்களிடம் பேசுவதும், பழகுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

அந்தமானில் வனவியல் விஞ்ஞானியாகப் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், “அந்தமானில் காடுகளின் பரப்பு அதிகம். விளைநிலங்களிலும் மரங்கள் அடர்ந்து வனங்களாகத்தான் இருக்கின்றன. கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனத்துக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அதனால், வனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத்தடுக்க, நிலப்பகுதியில் மரங்களுக்கு இடையே தீவனப்புல், தீவனத்துக்கான மரங்கள் போன்றவற்றை வளர்ப்பது தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மரங்களுக்கு இடையே விவசாயம் செய்ய வேளாண் காடுகள் முறை தொடர்பான ஆராய்ச்சியை, எங்கள் துறை மூலமாகச் செய்து வருகிறோம்” என்றார்.

- நிறைவுற்றது. 

இயற்கைச் சுற்றுலா!

தற்போது தெற்கு அந்தமானில் வன அதிகாரியாகப் பணியாற்றும் முரளிசங்கர், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரிடம் அந்தமான் வனங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் பற்றிப் பேசினோம். “பாராடாங் பகுதியில் ஜோர்வா பழங்குடியினர் அதிகம் வசிக்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற சுண்ணாம்புக் குகை இருக்கிறது. அதைக் காண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். சுற்றுலாப் பயணிகள், வனப்பகுதி வழியாகச் சாலை மார்க்கமாக வந்து செல்வது, ஆதிவாசி மக்களுக்கு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தியதால்... தற்போது நீர்வழிச்சாலை மார்க்கமாகப் பாராடாங் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

இப்பகுதியில் உள்ள பறவைத்தீவு (பேரட் ஐலேண்ட்) அலையாத்தி (மாங்குரோவ்)காடுகள் இயற்கையின் அற்புதங்கள். அந்தமான், சுற்றுலாப் பயணிகளுக்கான அருமையான தீவு” என்றார்.

வடக்கு அந்தமான் பகுதியில் டிகிலிப்பூர் பகுதியின் வன அதிகாரியாக இருப்பவர், ஜெபஸ்டின். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். “அந்தமானில் வனச்சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அந்தமானைப் பொறுத்தவரை ஒரு ஹெக்டேர் நிலத்தில் நான்கு சதவிகிதத்துக்கும் அதிகமான மரங்கள் இருந்தால் அது வனப்பகுதியாகக் கருதப்படும். இங்கிருந்து மரங்களை எடுத்துச்செல்வதில் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு ரங்கத் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆண்டுக்கொருமுறை ஆமைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும் நிகழ்வு நடக்கும். முட்டையில் இருந்து பொறித்த குஞ்சுகள், கடலுக்குள் செல்வதற்குள் அவை சந்திக்கும் இயற்கை எதிரிகள் ஏராளம். அதையெல்லாம் தாண்டி, கடலை அடைந்து உயிர் வாழும் ஆமைக்குஞ்சுகள் மனிதனுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் ஏராளம்” என்றார்.

அந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்!

ஆழிப்பேரலையைத் தடுக்கும் பட்ரஸ்!

அந்தமான் காடுகளில் குறிப்பாகக் கடலை ஒட்டிய பகுதிகளில் ‘பட்ரஸ்’ என்ற முப்பட்டை வடிவிலான மரங்கள் அதிகளவில் உள்ளன. இம்மரம், நெய்தல் நிலங்களுக்காகவே இயற்கை படைத்துள்ள மரம். பிரமாண்டமாக மூன்று பக்கமும் தடுப்புகள் அமைத்தது போல இருக்கும் இந்த மரங்கள் கரையோரம் இருப்பதால், பெரிய அலைகளைத் தடுத்து நிறுத்துகின்றன. அலைகளின் வேகத்தைக் குறைப்பதற்காக இயற்கை அமைத்துக் கொடுத்துள்ள இந்த அரணை, நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism