Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி
பிரீமியம் ஸ்டோரி
ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி
பிரீமியம் ஸ்டோரி
ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் வீரிய ரகப் பருத்தி, மக்காச்சோளம் போன்ற

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

பயிர்களை நம்பியே இருக்கிறார்கள். இதற்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எனப் பெருமளவில் செலவு செய்தாலும், உத்தரவாதமான வருமானம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்தான் இப்பகுதியில் அதிகம். இதில், விழிப்பு உணர்வு பெற்ற சில விவசாயிகள் இயற்கைமுறை விவசாயத்துக்கு மாறி... சிறுதானியங்கள், மலர்கள் எனச் சாகுபடிசெய்து நீடித்த, நிலைத்த வேளாண்மையில் வெற்றிகரமாகப் பயணிக்கிறார்கள். அந்தவகையில், நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றிச் சம்பங்கிச் சாகுபடிசெய்து, நல்ல லாபம் பார்த்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்.

ஒரு மதியவேளையில் மனைவி செந்தமிழ்ச்செல்வியுடன் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆறுமுகத்தைச் சந்தித்தோம். “எங்களுக்குப் பூர்வீகம் இந்தக் கிராமம்தான். ஆனா, ரொம்ப வருஷமா இலங்கையிலுள்ள கண்டியிலதான் இருந்தோம். அங்க போர்வெல் மிஷின் ஆப்ரேட்டரா வேலை செஞ்சிட்டிருந்தேன். 1980-ம் வருஷம் சொந்த ஊருக்குக் குடும்பத்தோடு வந்துட்டோம். எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்துல, என் பங்கா ஒரு ஏக்கர் நிலம் கிடைச்சது. எனக்கு விவசாயத்துல இஷ்டம் இல்லாததால, போர்வெல் மிஷின் ஓட்டுற வேலைக்கே போய்க்கிட்டுருந்தேன். என் சகோதரர்கள்தான் என்னோட நிலத்துலயும் விவசாயம் செஞ்சிட்டிருந்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

 சம்பங்கித் தோட்டத்தில் தன் மனைவியுடன் ஆறுமுகம்...

பக்கத்துல இருக்கிற மேல புளியூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி இளையராஜாதான், எனக்கு இயற்கை விவசாயம் பத்திச் சொல்லி ‘பசுமை விகடன்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை முறை விவசாயத்தைப் பத்தியும் நம்மாழ்வார் ஐயா பத்தியும் தெரிய ஆரம்பிச்சது. ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ மாதிரியான புத்தகங்கள படிக்கவும், ஐயா பத்தி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதில் சொல்லிய இயற்கை நுட்பங்களப் பண்ணையில செயல்படுத்த ஆரம்பிச்சேன். இதன்படி முதல்ல சம்பங்கிச் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சேன்.

எங்க மாவட்டத்துல மலர்ச் சாகுபடி பெரியளவுல இல்லை. அதனால, சந்தையில சம்பங்கிக்கு விற்பனை வாய்ப்பு நல்லா இருந்துச்சு. இதுபோகப் பக்கத்திலேயே 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கேன். அதுல ஒரு ஏக்கர் நிலத்துல மாடுகளுக்குத் தீவனச்சோளம் இருக்கு. நாலு ஏக்கர் நிலத்துல பாரம்பர்ய நெல் போட்டிருக்கேன். மீதி  ஒரு ஏக்கர் நிலத்துல வீட்டுத்தேவைக்கான காய்கறிகள், துவரை, ஆமணக்கு, நிலக்கடலை, மஞ்சள்னு போடுவேன்.

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

இது கரிசல் மண் நிலம். பாசனத்துக்குக் கிணறு இருக்கு. எப்பவுமே சம்பங்கிச் சாகுபடியை விடுறதில்லை. அதுதான் எங்களோட நிரந்தரப் பயிர். மத்த பயிர்களைத் தண்ணி இருக்கிறதைப் பொறுத்துச் சாகுபடி செஞ்சுக்குவேன். இயற்கை விவசாயம் செய்றதுக்காகவே 4 நாட்டு மாடுகளை வளர்த்துக்கிட்டு இருக்கேன்” என்று, தான் விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன ஆறுமுகம் தொடர்ந்தார்...

“நாங்க பிரஜ்வல் ரகச் சம்பங்கியைத்தான் சாகுபடி செய்றோம். முதல் தடவை விதைச்ச சம்பங்கியில இருந்து ஏழு வருஷம் வரைக்கும் மகசூல் கிடைச்சுட்டே இருந்துச்சு. போன வருஷம் கடுமையான வறட்சியால சம்பங்கிக்குத் தண்ணி கொடுக்க முடியல. மூணு மாசத்துக்கு மேல தண்ணி இல்லாமப் போனதால செடிகள்லாம் காஞ்சு போச்சு. இல்லைனா, இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு வெச்சிருந்திருக்கலாம்.

காஞ்சு போனதால கிழங்குகளைத் தோண்டி எடுத்து வைகாசி மாசம் திரும்ப விதைச்சோம். விதைச்ச மூணு மாசத்துல இருந்து பூ கிடைச்சிட்டிருக்கு. ஆரம்பக் கட்டம்ங்கிறதால இப்போ குறைவாத்தான் பூ கிடைக்குது. போகப்போக மகசூல் அதிகரிக்கும். சம்பங்கியில் எப்பவும் நிலையான மகசூல் இருக்காது. சில சமயங்கள்ல அதிகமாகக் கிடைக்கும். சில சமயங்கள்ல குறைவாகக் கிடைக்கும்” என்ற ஆறுமுகம், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“ஒரு வருஷத்துக்கு ஒரு ஏக்கர் நிலத்துல 5,500 கிலோ அளவுக்குச் சம்பங்கி மகசூல் கிடைக்கும். பூவோட மகசூல் அளவுல ஏற்ற இறக்கம் இருக்கிற மாதிரி, அதோட விலையிலயும் இருந்துட்டு இருக்கு. வரத்து அதிகமானா ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும். முகூர்த்த நாள்கள், பண்டிகை நாள்கள்ல ஒரு கிலோ  250 ரூபாய்க்குமேல விற்பனையாகும். பெரும்பாலான சமயங்கள்ல கிலோவுக்கு நாப்பது ரூபாய்ல இருந்து ஐம்பது ரூபாய் அளவுல விலை கிடைக்கும். சராசரியா கிலோ 45 ரூபாய்னு விலை கிடைச்சா வருஷத்துக்கு 5,000 கிலோ பூ விற்பனைமூலமா 2,25,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகிடும். அதுபோக மீதி 1,25,000 ரூபாய் லாபமா நிக்கும்” என்றவர் நிறைவாக, “நான் நம்மாழ்வார் ஐயாவை இதுவரை நேர்ல சந்திச்சது இல்ல. அவரைப் புத்தகங்கள்ல மூலமாவே தெரிஞ்சு, அவர் சொன்ன நுட்பங்கள பயன்படுத்திட்டு வர்றேன். அந்த அனுபவம்தான் இப்போ மத்த விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கிற அளவுக்கு என்னை வளர்த்திருக்கு. அவரைச் சந்திச்சிருந்தா, இன்னும் நிறைய தெரிஞ்சு வெச்சிருப்பேன்” என்று சொல்லி வேலைகளில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
ஆறுமுகம்,
செல்போன்: 98650 95097. 

பட்டம் பார்க்க வேண்டியதில்லை!

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கிச் சாகுபடி செய்யும்முறை குறித்து ஆறுமுகம் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...

பிரஜ்வல் என்ற சம்பங்கி ரகம், வாசனையான பெரிய பூக்கள் பூக்கும் தன்மைகொண்டது. இதை, அனைத்து வகையான மண்ணிலும் நடவுசெய்யலாம். மேலும், ஆண்டு முழுவதும் இதை நடவுசெய்யலாம். இதற்கெனத் தனியாகப் பட்டம் கிடையாது. ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 600 கிலோ விதைக்கிழங்கு தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 4 டன் எருவைக் கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு ஓர் அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்ச ஒன்றே கால் அடி அகலத்தில் வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்த கரைசலில் சம்பங்கி விதைக்கிழங்குகளை நனைத்து எடுத்து, மேட்டுப்பாத்தியின் இரு ஓரங்களிலும் ஓர் அடி இடைவெளியில் விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைநேர்த்திசெய்து விதைக்கும்போது வேர் அழுகல் நோய் தடுக்கப்படுவதுடன், முளைப்புத்திறன் அதிகரிக்கும். தொடர்ந்து மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்பத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விதைத்த மூன்று மாதங்கள் வரை ஊடுபயிர்ச் சாகுபடி செய்துகொள்ளலாம்.

அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். விதைத்ததிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை பாசன நீரில் 200 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்துவிட வேண்டும். விதைத்ததிலிருந்து 25 நாள்களுக்கு ஒருமுறை 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். ஐந்து கிலோ வேப்பங்கொட்டையை இடித்து, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 48 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டிய கரைசலை, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒருமுறை தெளித்து வர வேண்டும். இப்படித் தெளிக்கும்போது கிடைக்கும் வேப்பங்கொட்டைக் கசடுகளைப் பாசன நீரில் கலந்துவிடலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 2 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பனிக் காலத்தில் பூக்கள் நிறம் மாற வாய்ப்புண்டு. இதைக் கட்டுப்படுத்த... 2 தேங்காய்களில் இருந்து துருவல் எடுத்து, 5 லிட்டர் புளித்த மோரில் 2 நாள்கள் ஊறவைத்து வடிகட்டி,100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது, பூக்களையும் அதிகரிக்கும். பூச்சித் தாக்குதலுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம். விதைத்த மூன்றாம் மாதத்திலிருந்து  பூ பறிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism