Published:Updated:

“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்!”

“நிறுவனத்தின் உண்மையான  சொத்து ஊழியர்கள்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்!”

விருதுதெ.சு.கவுதமன்படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ்.தேவராஜ், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணக்குமார், தே.அசோக்குமார், க.பாலாஜி

“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்!”

விருதுதெ.சு.கவுதமன்படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ்.தேவராஜ், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணக்குமார், தே.அசோக்குமார், க.பாலாஜி

Published:Updated:
“நிறுவனத்தின் உண்மையான  சொத்து ஊழியர்கள்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்!”

விவசாயமும் தொழில்துறையும் நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான இரு கண்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழகத்தில் தொழில்துறை உருவாகக் காரணமாக இருந்த தொழிலதிபர்களைக் கெளரவிக்கும்விதமாக... கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்’ என்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது ‘நாணயம் விகடன்’.

சென்னை, ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “முதலாளி என்ற சொல் அதிகாரம் என்றும் பயம் என்றும் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மையில் நிறுவனத்தின் முதல் தொழிலாளிதான் முதலாளி. ஒரு கனவைச் சுமந்து அதை நிறைவேற்றத் துடிப்பவன். அந்தக் கனவில் பிறரையும், தன்னோடு சேர்த்துக்கொண்டு வளர்ச்சியைத் தருபவன் முதலாளி. நிறுவனத்தின் அத்தனை பிரச்னைகளையும் சவால்களையும் முதல் ஆளாகச் சந்திப்பவன். தோல்விகளையெல்லாம் தனதாக்கிக்கொண்டு வெற்றியைப் பகிர்ந்துகொள்பவன் முதலாளி. அப்படிப்பட்ட சிறந்த தொழில் முனைவோர்களுக்கு ‘பிசினஸ் ஸ்டார்’ விருதுகள் வழங்கி கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறது நாணயம் விகடன்” என்றார்.

“நிறுவனத்தின் உண்மையான  சொத்து ஊழியர்கள்தான்!”

கோயம்புத்தூர் மாவட்டம் கள்ளியம்புதூர் என்கிற குக்கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பவர்லூம், ஜவுளி ஏற்றுமதி எனக் கலக்கிக்கொண்டிருக்கிறார், ‘கே.பி.ஆர். மில் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி. அவருக்கு ‘செல்ப் மேட் ஆன்ட்ரபிரனர்’ என்ற விருதை ‘டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய கே.பி.ராமசாமி, “எங்கள் நிறுவனங்களில் 22,000 பெண்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரையும் வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். அதிக மதிப்பெண் பெறும் தொழிலாளர்களுக்குக் கல்லூரியில் மேற்படிப்பு படிப்பதற்கான முழுச்செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். தொழிலாளர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் நலனில் அக்கறை செலுத்தினால், நிறுவனத்தின் உற்பத்தியைப் பற்றிக் கவலைப்படத் தேவையேயில்லை” என்றார்.

திருமணத்துக்கு வரன் தேடுவதை எளிமையாக்கி, லட்சக்கணக்கானோருக்குத் திருமணம் நடக்கக் காரணமாக இருந்து வருபவர், ‘மேட்ரிமோனி டாட்காம்’ என்ற இன்னோவேட்டிவ் நிறுவனத்தின் செயல் அலுவலர் முருகவேல் ஜானகிராமன். அவருக்குச் ‘சிறந்த இன்னோவேஷன்’ விருதை, ‘சி.ஐ.ஐ (தமிழ்நாடு)’ தலைவர் பி.ரவிச்சந்திரன் வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நிறுவனத்தின் உண்மையான  சொத்து ஊழியர்கள்தான்!”

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய முருகவேல் ஜானகிராமன், “தேவைதான் நம் வாழ்க்கையில் அனைத்தையும் தீர்மானிக்கிறது. திருமணச் சந்தையில் மேட்ரிமோனி போன்ற ஒரு இன்னோவேஷனுக்கான தேவை இருப்பதை அறிந்து அதனை உருவாக்கினோம். பதினைந்து மொழிகளில் மேட்ரிமோனி டாட்காம் செயல்படுகிறது. முந்நூறுக்கும் மேற்பட்ட இணையதளங்களை நாங்கள் நிர்வகித்து வருகிறோம்” என்றார். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, சோழமண்டலம் ஃபைனான்ஸில் வேலைக்குச் சேர்ந்தவர் வாசுதேவன். பிறகு ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து அதை ‘ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்’ என்ற வங்கியாக வளர்ச்சியடைய வைத்திருக்கிறார் வாசுதேவன். அவருக்கு ‘ரைசிங் ஸ்டார்’ விருதை ‘பொன்ப்யூர்’ நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி வழங்கினார்.

தொழில் தொடங்க சரியான வழிகாட்டி அமைய வேண்டியது முக்கியம். அப்படிப் பலருக்கும் வழிகாட்டி வருபவர், ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன். அதற்காக அவருக்கு ‘பிசினஸ் மென்டார்’ விருதினை, ‘டை’ (TiE) சென்னை அமைப்பின் தலைவர் வி.சங்கர் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சி.கே.ரங்கநாதன், “வாடிக்கையாளர்களுக்கு முக்கியத் துவம் தரும் எந்த நிறுவனமும் நிச்சயம் தோற்காது” என்றார்.

தொழில் முனைவோர் வளர்ச்சியிலும் தொழில்துறை வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் ‘கொடீசியா’ அமைப்பின் தலைவர் வி.சுந்தரத்துக்குப் ‘பிசினஸ் மென்டார் (அமைப்பு)’ விருதினைத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்கினார். இந்த விருதைப் பெற்றுக்கொள்ள கொடீசியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்தனர்.  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்குச் ‘சோஷியல் கான்சியஸ்னஸ்’ விருது வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனையின் கெளரவத் தலைவர் நம்பெருமாள்சாமிக்கு ‘பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் எஸ்.வி. ஆறுமுகம் விருது வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட நம்பெருமாள்சாமி, “தமிழக அளவில் கண் அறுவைசிகிச்சையில் 45% அறுவைசிகிச்சைகள் அரவிந்த் கண் மருத்துவமனையில் தான் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் 5% கண் அறுவைசிகிச்சைகள் அரவிந்த் கண் மருத்துவமனையில் தான் செய்யப்படுகின்றன. லட்சக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு இலவசமாகக் கண் அறுவைசிகிச்சைகள் செய்திருக்கிறோம்” என்றார்.  ஒரு தொழிலைத் தொடங்கி, நன்கு நடத்தி ஏதோவொரு தவற்றின் காரணமாக, ஜீரோ நிலைக்கு வந்து... மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து வெற்றி கண்டவர்தான் ‘கேப்ளின் பாய்ன்ட் லேபரட்டரீஸ்’ நிறுவனத்தின் தலைவர் சி.சி.பார்த்திபன். அவருக்குக் ‘கோல்டன் ஃபீனிக்ஸ்’ விருதை வழங்கினார், ‘எம்.எம் ஃபோர்ஜிங்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வித்யாசங்கர் கிருஷ்ணன்.

“நிறுவனத்தின் உண்மையான  சொத்து ஊழியர்கள்தான்!”

கிரெடிட் கார்டு, இன்ஸ்யூரன்ஸ், கடன், முதலீடு என அனைத்து வங்கிச் சேவைகளுக்கும் ஆன்லைன்மூலம் தீர்வு வழங்கிவருகிறது, ‘பேங்க் பஜார்’ நிறுவனம். இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ‘அதில் ஷெட்டி’க்கு, ‘ஸ்டார்ட் அப் சேம்பியன்’ விருதை, ‘லைஃப் செல்’ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சேர்மன் எஸ்.அபயகுமார் வழங்கினார். 

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ள சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ‘லைப்டைம் அச்சீவ்மென்ட் அவார்டு’ வழங்கப்பட்டது. இந்த விருதினை அவருக்கு வழங்கினார், ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஆர்.தியாகராஜன்.

‘‘ஒரு நிறுவனத்தை நடத்த வங்கி கடனுதவி கிடைக்கும், இயந்திரங்கள் கிடைக்கும். ஆனால், நல்ல ஊழியர்களை எளிதில் பெற முடியாது.  ஒரு நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான். எங்கள் நிறுவனம் மட்டும் வளரவில்லை. எங்கள் ஊழியர்களின் வாழ்க்கையும் வளர்ந்து வருகிறது. இதனால்தான், கடந்த 50 ஆண்டுகளில் ஒரு நாள்கூட எங்கள் நிறுவனத்தில் வேலைநிறுத்தம் நடந்ததில்லை” என்று பெருமையுடன் சொன்னார் சுரேஷ் கிருஷ்ணா.

 ‘உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்த நிகழ்ச்சி இது’ என நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் பாராட்டினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism