Published:Updated:

கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!

கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!
பிரீமியம் ஸ்டோரி
கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!
பிரீமியம் ஸ்டோரி
கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!

மிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனங்களில் ஒன்று திருகை. அம்மியைப்போலக் கருங்கல்லினால் வடிவமைக்கப் பட்டுள்ள திருகைமூலம் தானியங்கள், பயறு வகைகளை உடைப்பது மற்றும் மாவாக அரைக்கும் வேலைகளைச் செய்ய முடியும். அதேபோல வடிவமைக்கப்பட்டுள்ள மரத்திருகை, நெல்லிலிருந்து கைக்குத்தல் அரிசி தயாரிக்கப் பயன்படுகிறது.

முற்காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்து வந்த திருகைகளைத் தற்போது காண்பதே அரிதாகிவிட்டது. ஆனால், பாரம்பர்யம் மறக்காத பலர், இன்னமும் மரத்திருகை மற்றும் கல் திருகைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயி’ பிச்சை முருகன். ‘பொங்கல் சிறப்பிதழு’க்காகப் பிச்சை முருகனைச் சந்தித்துப் பேசினோம். “நெல்லை உரல்ல போட்டுக் குத்தி, கைக்குத்தல் அரிசி தயாரிப்பாங்க. உரலுக்கு மாற்றா வடிவமைக்கப்பட்டதுதான் மரத்திருகை. எனக்கு ரொம்ப நாளா மரத்திருகையைப் பாக்கணும்னு ஆசை. பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் இருக்கிற ‘காந்தி நிகேதன் ஆசிரம’த்தில் நடந்த ஒரு விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அப்போ மரத்திருகைகளைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அதுபத்தி கல்லுப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளிடம் விசாரிச்சப்போ, ஒரு விவசாயிகிட்ட இருக்கிறதா தகவல் கிடைச்சது. அதை அவர் உபயோகப்படுத்தாமல் வெச்சுருந்ததால, விலை கொடுத்து வாங்கிட்டு வந்தேன்.

கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!

அதுல, வீட்டுக்குத் தேவையான நெல்லைப்போட்டு அரிசியாக்கிப் பயன்படுத்திட்டிருந்தேன். அது ரொம்பப் பழசா இருந்ததால, மரத்தச்சர்கிட்டக் காட்டி அதேபோல ஒரு திருகையைச் செஞ்சுக்கிட்டேன். அதைத்தான் இன்னமும் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். நான் அமைச்ச திருகையில சில மாற்றங்களைச் செஞ்சு பேரிங், ஸ்பிரிங் பொருத்தினேன். கைப்பிடியையும் இரும்புல அமைச்சுக்கிட்டேன். பேரிங் இருக்கிறதால சுத்துறது சுலபமா இருக்கு. நீண்ட நாளும் உழைக்கும்.

இந்த மரத்திருகையின் விட்டம் ஒன்றரை அடி, உயரம் 6 அங்குலம். மேல்பகுதியை எளிதாகத் தூக்கித் திரும்ப வைக்க முடியும். மேல் பகுதியில இருக்கிற துளையில் நெல்லைப் போட்டுக் கைப்பிடியால சுத்துனா, தோல் நீங்கி அரிசி கிடைக்கும். திருகையின் கீழ்ப் பகுதியில் பல் வரிசை இருக்கும். இந்தப் பல் தேயத்தேயக் கூர்மைப்படுத்திக்கணும். மரச்செக்கு அமைக்கப் பயன்படுற வாகை மரம்தான் திருகை செய்யவும் ஏற்ற மரம். ஏன்னா, இந்த மரம் சீக்கிரத்துல தேயாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைக்குத்தல் அரிசிக்கும் மரத்திருகை!

இந்தத் திருகையில நெல்லைத் திரும்பத்திரும்பப் போட்டுச் சுத்தினாதான் அரிசியாகும். ஒன்றரை கிலோ அரிசி போட்டால், ஒரு கிலோ கைக்குத்தல் அரிசி கிடைக்கும். அதைப் புடைச்சு அரிசியையும் உமியையும் தனியாகப் பிரிக்கணும். ஒரு கிலோ அரிசி தயாரிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்படிக் கிடைக்கிற அரிசிதான் சத்தான அரிசி. இதுமூலமா தயாரிக்கும்போது நெல்லோட தோல் மட்டும்தான் நீங்கும். அதனால, நார்ச்சத்து முழுவதும் அரிசியில் இருக்கும். நான் பாரம்பர்ய நெல் ரகங்களை மட்டும்தான் சாகுபடி பண்றேன். அந்த நெல் வகைகளை, இந்தத் திருகையில் சுத்தி வீட்டுக்குத் தேவையான கைக்குத்தல் அரிசியைத் தயாரிச்சுக்கிறேன்” என்று சொன்ன பிச்சைமுருகன், கருங்குருவை நெல்லைத் திருகையில் போட்டுச் சுற்றிக் காட்டினார்.

நிறைவாகப் பேசிய பிச்சைமுருகன், “எல்லோரும் முடிஞ்சவரைக்கும் பாரம்பர்ய ரகக் கைக்குத்தல் அரிசி வகைகளைச் சாப்பிட முயற்சி செய்யணும். இதனால, ஜீரண சக்தி அதிகரிக்கும். அதைச் சாப்பிடும்போது நல்லா பசி எடுக்கும். சீரா மலம் கழியும். அதுதான் நம்ம பாரம்பர்ய ரகங்களோட பெருமை” என்று சொல்லி விடைகொடுத்தார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism