மத்திய அரசு சார்பில் தஞ்சாவூரில் இயங்கிவரும் ‘இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பக் கழகம்’ மற்றும் ‘பொள்ளாச்சி தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்’ ஆகியவை இணைந்து ‘தென்னையில் மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள்கள் மற்றும் பதப்படுத்துதல்’ குறித்த கருத்தரங்கைப் பொள்ளாச்சியில் அண்மையில் நடத்தின.

இக்கருத்தரங்கில் பேசிய இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பக்கழக இயக்குநர் அனந்தகிருஷ்ணன், “எங்கள் ஆராய்ச்சி மையத்தின் மூலம் கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்தில் தோல் நீக்கும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தென்னை மரங்களிலிருந்து நீரா இறக்கி விற்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் நீரா இறக்கலாம். அதற்காக, தென்னை மரங்களில் நீரா இறக்குவதற்கான இயந்திரத்தை வடிவமைத்துள்ளோம். இதன் மூலமாகத் தென்னைமரப் பாளைகளைச் சீவி, குளிர்பதன கலயங்களைப் பொருத்தி... அவற்றில் நிரம்பும் நீராவைக் குழாய் வழியாகத் தரையில் இருந்தே சேகரிக்க முடியும். இதனால், தென்னை மரம் ஏறி இறங்கும் வேலை குறையும். மேலும், நீராவை 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்துள்ளோம்.

இளநீரைப் பவுடராக மாற்றும் தொழில் நுட்பத்தையும் கண்டுபிடித்துள்ளோம். இந்தப் பவுடரில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்தால் இளநீர் கிடைத்துவிடும். இளநீரின் இயல்பான சுவை மாறாமலும் இருக்கும். இந்தக் கண்டுபிடிப்புகளை வருகிற 2018, செப்டம்பர் 2-ம் தேதி (சர்வதேச தென்னை தினம்) வெளியிட இருக்கிறோம். மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால்தான், லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகள் அறிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்” என்றார்.