அண்மையில் உலக வங்கி, தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத் திட்டங்களை நவீன மயமாக்குவதற்குச் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 2,000 கோடி ரூபாய் கடன் வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகப் பொருளாதாரச் செயலகத்தின் கூட்டுச் செயலாளர் சமீர்குமார் கரே பேசும்போது,

“இந்தத் திட்டத்தால் 5 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் மேம்பட்ட மற்றும் நவீனமயமான நீர்ப்பாசன முறைகளின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 4,800 நீர்ப்பாசனத் தேக்கங்கள், 66 தடுப்பணைகள் மற்றும் 477 கிளை ஆறுகள் மறு சீரமைக்கப்பட்டு, மாநிலத்தில் பாசன நீர்நிலைக்கு மொத்தமாக நீர் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தொடர்ந்து நீர்வளம் குறைந்துகொண்டே வருகிறது.

அதனால், எதிர்காலத்தில் மிக மோசமான நிலை ஏற்படும். இந்த நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால்தான் நீர்ப்பாசனத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் நிதி பெறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.