Published:Updated:

மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

வீட்டுத்தோட்டம்துரை.நாகராஜன், படங்கள்: ஜெ.பரணிதரன்

ரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி, குளிர்சாதனப் பெட்டிக்குள் அடுக்கி

மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

வைத்து, தினமும் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துச் சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளின் வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நஞ்சற்ற உணவைத்தேடிப் பயணிக்கும் பலர், தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டுத்தோட்டம்மூலம் உற்பத்தி செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘கவிஞர்’ கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன். ‘கண்ணதாசன் பதிப்பக’த்தை நடத்திவரும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக, தன் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை மாடித்தோட்டத்திலேயே விளைவித்து வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

‘பசுமை விகடன்’ இதழின் பன்னிரண்டாவது ஆண்டுச் சிறப்பிதழுக்காகக் காந்தி கண்ணதாசனைச் சந்தித்தோம். “நான் ஆரம்பத்துல இருந்தே பசுமை விகடன் வாசகர். இந்தத் தோட்டத்தை அமைச்சதுக்கு முக்கியக் காரணம் பசுமை விகடன்தான். முன்னாடி 400 சதுர அடி பரப்புல இருபது தொட்டிகளை வெச்சு மாடித் தோட்டம் போட்டேன். இப்போ 600 சதுர அடி பரப்புல 100 தொட்டிகளுக்கு மேல இருக்கு. இந்த எட்டு வருஷத்துல நிறைய கத்துருக்கேன். இந்த நூறு செடிகளை வளர்த்து எடுக்குறதுக்கே நிறைய மெனக்கெட

மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

வேண்டியிருக்கு.

ஊருக்கே சோறு போடுற விவசாயிகள், ஏக்கர் கணக்குல விவசாயம் செய்ய எவ்வளவு பாடுபடுவாங்கனு நினைக்கிறப்போ பிரமிப்பா இருக்கு. மாடித்தோட்டம் அமைக்கிறவங்களுக்குத்தான் விவசாயியோட அருமை புரியும்.

இந்த மாடித்தோட்டத்துல நெய் மிளகாய், இலவம்பாடி முள் கத்திரி, கோழி அவரை, தக்காளி, முட்டைகோஸ், புதினா, முருங்கை, திராட்சை, மா, ரோஜா, மல்லிகை, சேனைக்கிழங்கு, லெமன்கிராஸ், பீர்க்கங்காய், பாவக்காய், சுண்டக்காய்னு நிறைய பயிர் இருக்கு” என்ற காந்தி கண்ணதாசன் தோட்டத்தில் உள்ள செடிகளைச் சுற்றிக் காட்டினார். 

“மாடித்தோட்டத்தைச் சுற்றிலும் பூக்கள் இருக்கு. அதனால, தேனீக்கள் அதிகமா வந்து மகரந்தச்சேர்க்கைக்கு உதவி செய்யுது. ஒரே பயிரை அதிக எண்ணிக்கையில வளர்க்காம நிறைய பயிரைக் கலந்து வெச்சுருக்கேன்.

மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

இப்போ முருங்கை, தக்காளி, கத்தரிக்காய், கோழி அவரை, மிளகாய், உருளைக்கிழங்கு, சுண்டைக்காய் எல்லாம் அறுவடையில இருக்கு. தேவைக்கு ஏற்ப அப்பப்போ பறிச்சு சமைச்சுக்குறோம். விஷமில்லாத உணவு சாப்பிடறதுக்கு ஒரே வழி மாடித்தோட்டம்தான். இங்க முழுக்க முழுக்க, மாட்டுச்சாணம், மாட்டுச் சிறுநீர், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தேங்காய்நார்க் கட்டிகள்னு இயற்கை பொருள்களைத்தான் பயன்படுத்துறேன். வீட்டுல கிடைக்கிற காய்கறிக் கழிவுகளை அரைச்சுச் செடிகளுக்கு உரமாகக் கொடுக்குறேன். பூச்சிகள் வந்தா மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கிறேன். ஏதாவது நோய்கள் வந்தா மோர்க்கரைசல் தெளிக்கிறேன். இது எல்லாத்தையும் நானே தயாரிச்சுக்கிறேன்.

பசுமை விகடன்ல படிச்சுட்டு தான் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். மூலிகைப் பூச்சிவிரட்டி, மோர்க்கரைசல் எல்லாமே பசுமை விகடன் மூலமாகக் கத்துக்கிட்டதுதான். சென்னையில இயற்கை விவசாயம் சம்பந்தமா நடக்கிற நிகழ்ச்சியில கலந்துக்குவேன். அங்கதான் நாட்டு விதைகளை வாங்குறேன்” என்ற காந்தி கண்ணதாசன் நிறைவாக,

“நிறைய பேர் மாடித்தோட்டம் போட்டா கட்டடம் பழுதாகிடும்னு நினைக்கிறாங்க. சரியான முறையில் ‘பாலித்தீன் ஷீட்’டுகளை விரிச்சு மாடித்தோட்டம் போட்டா தண்ணீர் தேங்காது. கட்டடமும் பாதுகாப்பா இருக்கும். மாடித்தோட்டத்துல வேலை செய்யும்போது மன இறுக்கம் குறையுது, மனசுக்குப் புத்துணர்ச்சி கிடைக்குது” என்று சொல்லி விடைகொடுத்தார்.