Published:Updated:

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

ற்சார்பு விவசாயம், கூடுதல் லாபம், நிலையான விற்பனை வாய்ப்பு... போன்ற நன்மைகள்

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

இருப்பதால் விவசாயிகள் பலர், இயற்கைமுறை வேளாண்மைக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பை நேரடியாக உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறியவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்.

திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள கிராமமான  ‘நாகாச்சி’யில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் ரமேஷ். ஒரு பகல்பொழுதில் அவரைச் சந்தித்தோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். காலேஜ் முடிச்சுட்டுத் தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல அப்பாவுக்குக் கேன்சர் வந்து, ஆஸ்பத்திரியில் வெச்சு பார்க்க வேண்டிய நிலை வந்துடுச்சு. அப்பாகூடத் துணைக்கு இருந்தப்பதான் எதேச்சையா ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிச்சேன். அதுல நம்மாழ்வார் ஐயா பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அவரோட சொந்த ஊரான இளங்காடு, எங்க ஊர்ல இருந்து நாலு கிலோமீட்டர் தூரத்துலதான் இருக்கு. ஆனா, நான் அவரைப்பத்தி பசுமை விகடன் மூலமாதான் தெரிஞ்சுகிட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

எங்கபகுதியில ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் எல்லாத்தையும் தாராளமாகப் பயன்படுத்துவாங்க. எங்கப்பாவும் அதைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சார். ‘ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினா கேன்சர் வர வாய்ப்புண்டு. தவறான உணவுப்பழக்கத்தாலும் கேன்சர் வர வாய்ப்புண்டு’னு டாக்டர்கள் சொன்னாங்க. முறையான சிகிச்சை கொடுத்தும் அப்பாவைக் காப்பாத்த முடியலை. அடுத்தடுத்து எங்க குடும்பத்துல பெரியப்பா, சித்தினு கேன்சர் வந்துடுச்சு. அவங்க தலைமுறைக்கு முன்னாடி எங்க குடும்பத்துல யாருக்குமே கேன்சர் வந்ததில்லை. அந்த மாதிரி ரசாயனங்களோட வீரியத்தை நேரடியா அனுபவிச்சதால... ஆரோக்கியமான வாழ்க்கை வாழணும்னா, இயற்கைக்கு மாறியே ஆகணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு ஆசானாக இருந்து வழிகாட்டினது பசுமை விகடன்தான். போன 2012-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கேன்” என்ற ரமேஷ் தனது விவசாய அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

“எங்களுக்குச் சொந்தமா ஒரு ஏக்கர் நஞ்சை நிலமும், 2 ஏக்கர் 33 சென்ட் புஞ்சை நிலமும் இருக்கு. நஞ்சை

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

நிலத்துல பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். புஞ்சை நிலத்துல தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்றேன். இது, வண்டல் கலந்த இருமண் பூமி. இயற்கை விவசாயத்துக்காக, ரெண்டு உம்பளச்சேரி மாடுகளை வளர்த்துட்டுருக்கேன்.

போன சித்திரைப்பட்டத்துல 33 சென்ட் நிலத்துல காந்தி கடலையைச் (கொடிக்கடலை) சாகுபடி செஞ்சேன். அதுல 6 மூட்டை (50 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. வீட்டுத்தேவைக்கு எடுத்து வெச்சுக்கிட்டதுபோக மீதியை மரச்செக்குல ஆட்டி எண்ணெயாவும் விற்பனை செஞ்சேன். அதுல கிடைச்ச கடலைப்பிண்ணாக்கை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்திக்கிட்டேன். அதேபோலக் கடலைக்கொடியையும் மாடுகளுக்கு எடுத்து வெச்சுக்கிட்டேன். கடலையில ஊடுபயிரா போட்டிருந்த உளுந்து மூலமாவும் ஒரு லாபம் கிடைச்சது. அதுல ஒரு நம்பிக்கை வரவும், போன ஆடிப்பட்டத்துல ரெண்டு ஏக்கர் நிலத்துல இதே ரகக் கடலையை விதைச்சேன். இயற்கையில நல்லா விளைஞ்சு வந்தது. செடிகள்ல அதிகபட்சமா எட்டுப் பக்கக்கிளைகள் வரை இருந்துச்சு.

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

நல்லா விளைஞ்ச செடிகள்ல 120 காய்களுக்குமேல இருந்துச்சு. அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 23 மூட்டைங்கிற கணக்குல 46 மூட்டை மகசூல் கிடைச்சது. மொத்தம் கிடைச்ச 2,300 கிலோ கடலையைக் காய வெச்சு உடைச்சதுல 760 கிலோ பருப்பு கிடைச்சது. இதையும் அப்படியே எண்ணெயா ஆட்டி விற்பனை செய்யலாம்னு இருக்கேன்.

இதை ஆட்டினா 340 லிட்டர் வரை எண்ணெயும் 400 கிலோ அளவு பிண்ணாக்கும் கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெயை 270 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 340 லிட்டர் எண்ணெய் மூலமா 91,800 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். பிண்ணாக்கை மாடுகளுக்கு வெச்சுக்கலாம்னு இருக்கேன்” என்ற ரமேஷ் நிறைவாக,

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

“கடலையை அறுவடை செய்றதுக்கு  முன்னாடி அதிகமா மழை பெஞ்சதால கடலைக்கொடி முழுக்க வீணாகிடுச்சு. ஆனா, அதெல்லாம் மண்ணுக்கு நல்ல உரமா மாறிடுச்சு. அடுத்து அதிக பரப்புல கடலைச் சாகுபடி செய்யலாம்னு இருக்கேன்” என்று சொல்லிக் கடலைப்பருப்புகளைக் கைகளில் அள்ளிக்காட்டியபடியே விடைகொடுத்தார்.

தொடர்புக்கு:
ரமேஷ்,
செல்போன்: 90431 23234

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் நிலத்தில் மானாவாரியாகக் காந்தி கடலையைச் சாகுபடி செய்யும்முறை குறித்து ரமேஷ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

கடலைச் சாகுபடி செய்ய ஆடிப்பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 சால் புழுதி உழவு ஓட்டி, 100 கிலோ கனஜீவாமிர்த தூளைத் தூவிவிட்டு, ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாடு கட்டி மரக்கலப்பைமூலம் வரிசைக்கு வரிசை முக்கால் அடி, விதைக்கு விதை அரையடி இடைவெளி இருக்குமாறு கடலையை விதைக்க வேண்டும். விதைக்கும்முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்கத் தேவையான 45 கிலோ விதைக்கடலையுடன் தலா 75 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து ஒரு பாத்திரத்தில் இட்டு விதைகள் மூழ்கும் அளவுக்கு ஆறிய சோறு வடித்த கஞ்சியை ஊற்ற வேண்டும். பிறகு அவற்றுடன் 750 மில்லி பஞ்சகவ்யா, 300 மில்லி இ.எம் திரவம் ஆகியவற்றைக் கலந்து... கைகளால் கிளறாமல் பாத்திரத்தைக் குலுக்கிக் கலக்க வேண்டும். பிறகு அப்படியே சணல் சாக்கில் கொட்டி நிழலில் அரைமணி நேரம் உலர்த்தி விதைக்க வேண்டும். விதைத்த 15-ம் நாள் களையெடுக்க வேண்டும். 30-ம் நாள் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து 1 லிட்டர் இ.எம் திரவம், தலா 250 கிராம் பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் மண் அணைத்து விட வேண்டும்.

3 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்து, 3 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஊற வைத்து வேப்பங்கொட்டைக் கரைசல் தயார் செய்ய வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப் என்ற விகிதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வேப்பங்கொட்டை கரைசல், காதிசோப் கரைசல் இரண்டையும் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, 45-ம் நாள் பயிர்கள்மீது தெளிக்க வேண்டும்.

55-ம் நாளுக்குமேல் காய் பிடிக்கத் தொடங்கும். 75-ம் நாள் 5 லிட்டர் புளித்த மோரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், செடிகள் நன்கு ஊட்டமாக வளர்ந்து காய்கள் திரட்சியாக உருவாகும். விதைத்த 105-ம் நாளுக்குமேல் பரவலாகச் சில செடிகளைப் பறித்து, காய்கள் முற்றியதைத் தெரிந்துகொண்டு அறுவடை செய்யலாம்.