Published:Updated:

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!
பிரீமியம் ஸ்டோரி
News
வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

சுற்றுச்சூழல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

ழிப்பேரலை, வெள்ளம், அதிக வெயில், மழையின்மை... என அனைத்து இயற்கைச் சீற்றங்களுக்கும் ஒரே காரணமாகச் சொல்லப்படுவது புவி வெப்ப மயமாதல்தான். தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றால் வெளியிடப்படும் மாசுக்கள்தான், பூமி அதிக வெப்பமடைவதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், காடுகள் அழிக்கப்படுவதும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்திருந்த நம் முன்னோர், காடுகளைப் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயில் நிலங்களில் ‘நந்தவனம்’ ‘பிருந்தாவனம்’ என்ற பெயர்களில் காடுகளை உருவாக்கி வைத்தனர்.

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

ஆனால், காலப்போக்கில் வளர்ச்சி என்ற பெயரில், காடுகளையும் மரங்களையும் அழிக்கத் தொடங்கியதால், இன்று பேரழிவை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், பூமி வெப்பமாவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகளவிலான மரங்களை நடவு செய்து, வேளாண் காடுகளை உருவாக்கி வருகிறார்கள் சுற்றுச்சூழல் மீது அக்கறைகொண்ட பலர். அத்கையோரில் ஒருவர்தான், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு நரசிம்மன். தற்போது திருச்சியில் வசித்துவரும் ராஜு நரசிம்மன், புதுக்கோட்டை மாவட்டம், புனல்குளம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் வேளாண் காட்டை உருவாக்கியுள்ளார். மா, வேங்கை, செஞ்சந்தனம், மகோகனி, ரோஸ்வுட், குமிழ்தேக்கு... எனப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறார்.

ஒரு பகல் பொழுதில் பசுமை சூழ்ந்த அந்தப் பண்ணையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ராஜு நரசிம்மனைச் சந்தித்தோம்.

“எனக்குப் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. என்னோட தாத்தா விவசாயி. அதனால், எனக்குச் சின்ன வயசுலயிருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். களை எடுக்குறது, நாத்து நடுறது மாதிரியான எல்லா வேலைகளுமே எனக்குத் தெரியும். பள்ளி, கல்லூரிகள்ல படிக்கிறப்போ வயல்ல இறங்கி வேலை பார்த்திருக்கேன்.  இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டுப் பிரிவு, சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ், துபாய் துறைமுக ஆணையம்னு பல இடங்கள்ல பாதுகாப்புப் பிரிவு அதிகாரியா வேலை செஞ்சிருக்கேன். நான் வேலையில இருக்கும்போதே ஓய்வுக்குப் பிறகு பெரிய அளவுல நிலம் வாங்கி, வேளாண் காட்டை உருவாக்கணும்ங்கிற எண்ணம் இருந்துச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!
வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

பதினேழு வருஷத்துக்கு முன்னாடி இந்த 50 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அப்ப இது முந்திரி காடாவும் முள்புதராவும் இருந்துச்சு. கரடு முரடாகக் கிடந்த நிலத்தைச் சமப்படுத்துறதுக்கே ரெண்டு வருஷம் ஆச்சு. இது வளமான செம்மண் பூமி. ஆனா, மண்ணுல அதிக வெப்பத்தன்மையும் இருந்துச்சு. நிலம் முழுதும்

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

மாட்டு எருவைக் கொட்டி வளப்படுத்தி மா, வேங்கை, செஞ்சந்தனம் போன்ற மரங்களை அதிகளவுல நடவு செஞ்சிருக்கேன்” என்றவர் சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்...

“மா மரங்கள் படர்ந்து நிழல் தரும். வேங்கை மரங்கள் வெப்பத்தை உள்வாங்கி, குளிர்க் காற்றை வெளியிடும். செஞ்சந்தனம் காற்றில் உள்ள மாசுக்களைச் சுத்தப்படுத்தும். வெப்பத்தையும் அணுக்கதிர் வீச்சுகளையும் தடுத்து நிறுத்தும். அதனாலதான் இந்த மூணு மரங்களை அதிகளவுல நடவு செஞ்சிருக்கேன்” என்ற ராஜு நரசிம்மன் மரங்களைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

“மொத்த நிலத்தையும் சுத்தி, செஞ்சந்தன மரங்கள் இருக்கு. நடுப்பகுதியில 25 அடி அகலத்துல தோட்டம் முழுவதும் போய் வர்ற மாதிரி இருக்கிற நடைப்பாதையில ரெண்டு பக்கங்கள்லயும் வேங்கை மரங்கள் இருக்கு. உள்ளேயும் செஞ்சந்தன மரங்கள் இருக்கு. மொத்தம் 2,500 வேங்கை மரங்களும், 4,000 செஞ்சந்தன மரங்களும் இருக்கு. இதுபோக, 50 மகோகனி, 50 குமிழ், 10 சில்வர் ஓக், 4 ரோஸ்வுட் மரங்களும் இருக்கு. பெரும்பாலான மரங்கள் 40 அடி உயரத்துக்குமேல வளர்ந்திருக்கு. இன்னும் சில வருஷங்கள்ல இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தாலே பல லட்ச ரூபாய்க்குமேல வருமானம் கிடைக்கும்.

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

ஆனா, இப்போதைக்கு இதை வெட்டக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். இன்னும் 50 வருஷங்களாவது இந்த மரங்களை அப்படியே வெச்சுருங்கனு என் பேரப்பிள்ளைகள்கிட்டச் சொல்லியிருக்கேன். அது மூலமா, ஓரளவாவது காற்றுல இருக்கிற கார்பன் கட்டுப்படும்னு நம்புறேன். அதுதான் இந்தப் பூமிக்கு நான் செய்ற நன்றிக்கடனா இருக்கும்.

அதே நேரத்துல பண்ணையில் இருந்து வருமானம் கிடைக்கணுங் கிறதுக்காக 42 ஏக்கர் நிலத்துல 4,300 அல்போன்சா ரக மா மரங்களை வெச்சுருக்கோம். அவை மூலமா தாராளமான வருமானம் கிடைச்சுட்டிருக்கு. வருஷத்துக்கு 200 டன் வரை மகசூல் கிடைக்குது. இயற்கையில விளையுறதால நல்ல சுவையாவும் ஏற்றுமதித் தரத்துலயும் இருக்கு. என்னோட மாம்பழங்களுக்குப் பன்னாட்டுத் தரச்சான்று வாங்கியிருக்கேன். ஒரு கிலோ 125 ரூபாய்னு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். அதோட வாழை, உளுந்து, பச்சைப்பயறு, செடிமுருங்கை மாதிரியான பயிர்களையும் சாகுபடி செய்றேன். அது மூலமாவும் கொஞ்சம் வருமானம் வருது.

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

இங்க மாமரங்களுக்கு மட்டும்தான் சொட்டுநீர்ப்பாசனம் அமைச்சு தொடர்ந்து தண்ணீர் கொடுத்துட்டுருக்கோம். மத்த மரங்களுக்கு நடவு செஞ்ச ரெண்டு வருஷம் வரைதான் தண்ணீர் கொடுத்தோம். அப்புறம் கிடைச்ச மழையை வெச்சுதான் மரங்கள் வளர்ந்துருக்கு. மரங்கள் இவ்வளவு செழிப்பா இருக்குறதுக்குக் காரணம் ஆட்டு எருதான். ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாசம், அஞ்சு கிலோவுல இருந்து ஏழு கிலோ எடை வரை இருக்குற மாதிரி 120 செம்மறி ஆடுகளை வாங்கித் தோட்டத்துல விடுவோம். ஆடுகளுக்குத் தீவனச்செலவும் கிடையாது. இங்க மேய்ச்சல்லயே போதுமான தீவனம் கிடைச்சுடும். ஆடுகளோட சிறுநீரும் எருவும் நிலம் முழுக்க விழுந்து மண்ணுக்கு உரமாகிடும். ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசத்துல ஆடுகளை விற்பனை செஞ்சுடுவோம். அது மூலமாவும் கணிசமான வருமானம் வந்துட்டுருக்கு” என்ற ராஜு நரசிம்மன் நிறைவாக,

வருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..!

“மாங்காய் விற்பனைக்கு ஏற்றுமதி நிறுவனத்தையே நம்பி இருக்க முடியாதுங்கிறதால, உலர் பழங்கள் தயார் செஞ்சு நானே ஏற்றுமதி செய்யலாம்னு இருக்கேன். அதுக்காக ரெண்டரை லட்ச ரூபாய் செலவுல சூரியசக்தி உலர்விப்பான் அமைச்சிருக்கேன். அதுல முருங்கை இலையை உலர்த்திப் பவுடராக்கி ஏற்றுமதி செய்ற யோசனையும் இருக்கு. இன்னும் உலர் பழம் தயாரிப்புல இறங்கல. சீக்கிரமே அதையும் தயாரிக்க ஆரம்பிச்சுடுவேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

ராஜு நரசிம்மன், செல்போன்: 94438 75461