தஞ்சாவூரில் இயங்கிவரும் இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம், விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய கருவிகளைக் கண்டுபிடிப்பதோடு, விளைபொருள்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய சில கண்டுபிடிப்புகள் குறித்து அதன் இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

“விவசாயிகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், பல வகைகளில் பலன்களைப் பெற முடியும். அதேபோல விளைபொருள்களை மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்தினால் கூடுதல் லாபம் பெறலாம். விளைபொருள்களுக்கு விலை குறையும்போது மதிப்புக்கூட்டல் மூலம் நஷ்டமடையாமல் தப்பிக்க முடியும்.

மதிப்புக்கூட்டல் என்றால் என்னவோ ஏதோ என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. அறுவடை செய்த நிலக்கடலையை அப்படியே விற்காமல், பெருவெட்டுக் கடலைகளாகத் தரம்பிரிப்பது முதல் மதிப்புகூட்டல். ஒரே வடிவில் தரமாக இருக்கும் கடலைக்குக் கூடுதல் விலை கிடைக்கும். அடுத்துக் கடலையை உடைத்துப் பருப்பாக விற்றால் அடுத்தக்கட்ட மதிப்புக்கூட்டல்.

உடைத்த கடலையை வறுத்து விற்றால் அது அதற்கடுத்தக்கட்ட மதிப்புக்கூட்டல். வறுத்த கடலை மூலம் கடலை மிட்டாய் தயாரித்தால் அதுவும் ஒரு மதிப்புக்கூட்டல். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரவருக்கு முடிந்த அளவில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது... அறுவடை செய்த விளைபொருள்களுக்குச் சந்தையில் அப்படியே கிடைக்கும் விலையைவிடக் கண்டிப்பாகக் கூடுதல் விலை கிடைக்கும்.

சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில்... உணவகங்கள் மற்றும் வீடுகளில் தோல் உரித்த சின்ன வெங்காயத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தோல் உரித்த வெங்காயத்துக்குச் சந்தை விலையைவிட இருமடங்கு வரை கூடுதல் விலை கிடைக்கிறது. இதை மனதில் வைத்துச் சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கும் ஒரு கருவியை எங்கள் நிறுவனத்தில் உருவாக்கியுள்ளோம். இக்கருவி மூலம், ஒரு மணி நேரத்தில் 50 கிலோ அளவு சின்ன வெங்காயத்தைத் தோல் உரிக்க முடியும். இதன் விலை 5 லட்ச ரூபாய். சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்து இந்த இயந்திரத்தை வாங்கிப் பலன் பெறலாம். இந்த இயந்திரத்தின் மூலம் பூண்டையும் உரிக்கலாம். அதேபோல அறுவடை செய்த வெங்காயத்தில் இருந்து தாள்களை நீக்கும் இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளோம். இதன் விலை 3 லட்சம் ரூபாய். இக்கருவியின் மூலம், ஒரு மணி நேரத்தில் 200 கிலோ அளவு சின்ன வெங்காயத்தின் தாள்களை நீக்க முடியும்.

எந்த விளைபொருளாக இருந்தாலும் சரி... அறுவடை செய்தவுடன் அதைத் தரம் பிரிக்க வேண்டியது அவசியம். தரம் பிரிக்கும்போது நாம் கழிக்கும் பொருள்களை வேறு வகையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடியும். உதாரணமாக, வெங்காயத்தை எடுத்துக்கொள்வோம். பெரிய அளவிலான சின்ன வெங்காயத்தை உணவகம் நடத்துபவர்கள் விரும்புவார்கள். நடுத்தரமான வெங்காயத்தை வீடுகளுக்கு வாங்குபவர்கள் விரும்புவார்கள். அளவில் சிறியவற்றை யாருமே வாங்காமல் ஒதுக்குவார்கள். அப்படி உள்ள வெங்காயங்களைக்கொண்டு, பதப்படுத்தப்பட்ட பவுடர் மற்றும் பேஸ்ட் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்யலாம். அதை மனதில் வைத்து வெங்காயத்தைத் தரம் பிரிக்கும் கருவியையும் வடிவமைத்துள்ளோம். இதன் விலை 2 லட்சம் ரூபாய். இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 200 கிலோ அளவு சின்ன வெங்காயங்களைத் தரம் பிரிக்கலாம்” என்ற அனந்தராமகிருஷ்ணன் நிறைவாக,

“இந்த இயந்திரங்கள் அனைத்தையுமே எங்கள் நிறுவனத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். எங்கள் நிறுவனத்தில் விளைபொருள்களை மதிப்புக்கூட்டும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். மேலும், தேங்காயிலிருந்து கொப்பரையைத் தனியாக எடுக்கும் கருவி, தென்னை மரத்திலிருந்து நீரா இறக்கும் கருவி போன்றவற்றையும் உருவாக்கியுள்ளோம். இக்கருவிகளைச் செப்டம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படும், ‘உலகத் தென்னைத் தின’த்தன்று வெளியிட உள்ளோம்.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிக்கும் விதமாக 2017-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரைக்குமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிதியின் மூலம், விளைபொருள்களைப் பாதுகாக்கும் குளிர்பதன நிலையத்தை உருவாக்க 40 சதவிகித மானியம் வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு 30 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். இதுபோன்ற திட்டங்கள் குறித்த விவரம் தேவைப்படும் விவசாயிகள் எங்கள் நிறுவனத்தை அணுகலாம்” என்று விவசாயிகளுக்கு அழைப்பு வைத்தார்.

தொடர்புக்கு,

இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம், தொலைபேசி: 04362 228155