Published:Updated:

தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!
பிரீமியம் ஸ்டோரி
News
தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

உணவுதுரை.நாகராஜன், படங்கள்: வீ.நாகமணி

ணவே மருந்து என வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். ‘சீரகம் இல்லா உணவு சிறக்காது’, ‘தன்

தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

காயம் காக்க வெங்காயம் போதும்’... என உணவு குறித்த பழமொழிகள் மூலமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது நாகரிகம் என்ற பெயரில், இறக்குமதி செய்யப்பட்ட மேலைநாட்டு உணவுக்கலாசாரத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் நாம். அதனால், நம்முடைய பாரம்பர்ய உணவுகள் வழக்கொழிந்து போய்விட்டன. தற்போது, இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், பாரம்பர்ய உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால், தமிழகத்தில் பாரம்பர்யச் சிறுதானிய உணவகங்கள் பெருகி வருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

அந்த வகையில், சென்னையில் இயங்கிவரும்  ‘டி.ஜே கிச்சன்ஸ்’ என்ற உணவகம்  குறைந்த விலையில் சிறுதானிய உணவுகளை வழங்கி வருகிறது. மைலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்கா எதிரேயுள்ள காய்கறிக் கடையின் முன்புறத்தில் இந்த உணவகம் இருக்கிறது. மாலை ஐந்து மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை பரபரப்பாகச் செயல்படுகிறது.

தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

இந்த உணவகத்தை நடத்திவரும் ராஜாராமிடம் பேசினோம். “என் சொந்த ஊர் திருச்சி. அட்வர்டைசிங் துறையில வேலை பாத்துட்டுருக்கேன். ஆறு வருஷமா ‘பசுமை விகடன்’ புத்தகத்தைத் தொடர்ந்து படிச்சுட்டுருக்கேன். அதுமூலமா ஏற்பட்ட ஆர்வத்தால, பெரம்பலூர்ல எங்களுக்கு இருக்குற ரெண்டு ஏக்கர் தோட்டத்துல இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன். அதுக்கான வேலைகள்ல இறங்குனப்போதான், இயற்கை உணவகம் ஆரம்பிக்கிற யோசனை வந்தது. இதுக்கும் பசுமை விகடன்தான் காரணம். மக்களிடையே மூலிகை, சிறுதானிய உணவுகள் குறித்துப் பசுமை விகடன் ஏற்படுத்தியிருக்கும் விழிப்பு உணர்வு, அதைத் தயாரிக்கிறது சம்பந்தமா வந்த தகவல்கள், இந்த உணவகம் தொடங்க உபயோகமா இருந்துச்சு. இதுமூலமா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த இயற்கை உணவகத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பிச்ச சமயத்துல பெரிய வரவேற்பு இல்லை. ஆனா, ‘வருமானம் குறைவாகக் கிடைச்சாலும் பரவாயில்லை’னு நானும் என் மனைவியும் தொடர்ந்து நடத்த ஆரம்பிச்சோம். இப்போ ஓரளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு.

தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

சென்னை, பிராட்வேயில் எல்லா வகையான மூலிகைகளும் கிடைக்குது. காலையில தேவையான

தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

மூலிகைகளை வாங்கிட்டு வந்துடுவேன். இங்க முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, ஆவாரம்பூ தோசை, புதினா தோசை, முசுமுசுக்கை தோசை, பிரண்டைத் தோசை, பூண்டு தோசைனு பல மூலிகை தோசைகளைச் சமைச்சு விற்பனை செய்றோம். இதுபோக அடை, குழிப்பனியாரம், கருப்பட்டி பனியாரம், தூதுவளை சூப்னு பல உணவுகளும் கிடைக்கும்” என்ற ராஜாராம் நிறைவாக,

“தினமும் எங்க கடையில 60 பேர் வரைக்கும் சாப்பிடுறாங்க. ரெண்டாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. அதுல பாதியளவு செலவு இருக்கும். அதுபோகத் தினமும் ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுட்டுருக்கு. எதிர்காலத்துல 40 பேர் உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்குப் பெரிய உணவகம் ஆரம்பிக்கிறதை லட்சியமா வெச்சுருக்கேன்” என்று சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.