Published:Updated:

40 சென்ட்டில் ரூ.1 லட்சம்... கலக்கல் வருமானம் கொடுக்கும் ‘காஞ்சி’ கத்திரி..!

40 சென்ட்டில் ரூ.1 லட்சம்...   கலக்கல் வருமானம் கொடுக்கும்  ‘காஞ்சி’ கத்திரி..!
பிரீமியம் ஸ்டோரி
News
40 சென்ட்டில் ரூ.1 லட்சம்... கலக்கல் வருமானம் கொடுக்கும் ‘காஞ்சி’ கத்திரி..!

மகசூல்துரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

ன்றாடச் சமையலுக்குப் பயன்படக்கூடிய காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். அதனால், எப்போதும்

40 சென்ட்டில் ரூ.1 லட்சம்...   கலக்கல் வருமானம் கொடுக்கும்  ‘காஞ்சி’ கத்திரி..!

அதற்குச் சந்தையில் தேவை இருக்கும். ஆனால், அதிகம் பூச்சிகள் தாக்கக்கூடிய காய் என்பதால், விவசாயிகள் பலரும் அதைச் சாகுபடி செய்யத் தயக்கம் காட்டுவர். அத்தகைய சூழ்நிலையிலும் இயற்கைமுறையில் கத்தரிக்காயை வெற்றிகரமாகச் சாகுபடி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயி’ வீரராகவன்.

ஒரு காலை வேளையில் கத்திரிக்காய் பறிக்கும் பணிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வீரராகவனைச் சந்தித்தோம். “பரம்பரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனக்கு மொத்தம் 100 ஏக்கர் நிலம் இருக்கு. தாத்தா காலத்துல பாலாற்றுத் தண்ணியை வெச்சு விவசாயம் பார்த்தாங்க. அதன்பிறகு அப்பா, கிணறு வெட்டி விவசாயம் செஞ்சாங்க. இப்போ தண்ணி இல்லாததால பாதி நிலத்துக்குமேல சும்மாதான் இருக்கு. நான் காலேஜ் முடிச்சதும், வில்லிவலம் கிராமத்துல ‘கிராம வளர்ச்சி செயல் ஆராய்ச்சித்திட்டப் பயிற்றுநர்’ வேலையில் சேர்ந்தேன். அப்படியே விவசாயத்தையும் செய்ய ஆரம்பிச்சேன். நானும் அப்பா, தாத்தா வழியில ரசாயன விவசாயம்தான் செஞ்சிட்டுருந்தேன்.

அந்தச் சமயத்துல வில்லிவலம் ஊராட்சித்தலைவரா இருந்த தாந்தோணி ஐயாவோட பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருந்தார். அவரோட விவசாய முறைகளைப் போய் பார்த்தேன். அவர்கிட்ட அதுபத்தி நிறைய விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதேசமயம் பசுமை விகடனும் நான் இயற்கை விவசாயத்துக்கு வர்றதுக்கு உந்துதலா இருந்துச்சு. விவசாயமே நஷ்டம்னு சொல்லிட்டிருக்கிற நேரத்துல, அதுலயும் லாபம் எடுக்க முடியுங்கற தைரியத்தைப் பசுமை விகடன் எனக்குக் கொடுத்துச்சு.  இதுமூலமா 25 ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்காக ஒதுக்கினேன். அதுல ‘போர்வெல்’ போட்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். முதல்ல 3 ஏக்கர் நிலத்துல கிச்சிலிச்சம்பா நெல் விதைச்சேன். அதுல பெரிசா மகசூல் இல்லை. இயற்கை முறையில செய்யுறப்போ ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுருந்ததால பிரச்னை இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
40 சென்ட்டில் ரூ.1 லட்சம்...   கலக்கல் வருமானம் கொடுக்கும்  ‘காஞ்சி’ கத்திரி..!

அடுத்து 8 ஏக்கர் நிலத்துல சீரகச்சம்பா, கிச்சிலிச்சம்பா நெல் ரகங்களை விதைச்சேன். அந்தச் சமயம் மழையும் கைகொடுத்துச்சு. அறுவடை பண்ணினப்போ, ஒரு ஏக்கருக்கு 24 மூட்டை நெல் கிடைச்சது. அதுக்கப்புறம் இயற்கை விவசாயத்து மேல முழு நம்பிக்கை வந்துடுச்சு. இப்போ இயற்கைத் தொழில்நுட்பங்களை முழுசா கத்துக்கிட்டு நல்ல முறையில செஞ்சுட்டிருக்கேன். அஞ்சு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன்” என்று தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன வீரராகவன் தொடர்ந்தார்...

“அடுத்து நிலத்துல ஒரு பண்ணைக்குட்டை வெட்டினேன். இரண்டு இளைஞர்களைக் கூடவே வெச்சுகிட்டு விவசாயத்தைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். எப்பவும் பண்ணைக்குள்ள ஜீவாமிர்தமும் பூச்சிவிரட்டியும் இருந்துட்டே இருக்கும். எங்க கிராம மக்கள்தான் தோட்டத்துல வேலை செய்ய வர்றாங்க. தொடர்ந்து நெல் சாகுபடி செஞ்சுட்டிருந்தேன். அடுத்தடுத்து வேற பயிர்களையும் இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சு கத்திரி, வெண்டை, உளுந்து, எள்ளுனு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.

40 சென்ட்டில் ரூ.1 லட்சம்...   கலக்கல் வருமானம் கொடுக்கும்  ‘காஞ்சி’ கத்திரி..!

இப்போ 40 சென்ட் நிலத்துல ‘காஞ்சி’ ரகக் கத்தரி என்று சொல்லப்படுற ரகம் இருக்கு. இந்தக் காயைப் பாக்கிறதுக்குப் பச்சை நிறத்துல இருக்கும். நாட்டு கத்திரிக்காய்க்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதுக்கு இருக்கு. ரெண்டரை ஏக்கர் நிலத்துல பொன்னி ரக நெல் இருக்கு. ரெண்டு ஏக்கர் நிலத்துல சீரகச்சம்பா நெல் இருக்கு. மூன்றரை ஏக்கர் நிலத்துல கிச்சிலிச்சம்பா நெல் இருக்கு. கத்திரி காய்ப்புல இருக்கு. இதுல பூச்சி வரும்னு பயப்பட வேண்டியதேயில்லை. மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சிப் பூண்டுக் கரைசல் ரெண்டையும் மாத்தி மாத்தித் தெளிச்சாலே பூச்சிகள் வர்றதில்லை. இயற்கை முறையில் சாகுபடி செய்றப்போ நோய்கள் இல்லாம பத்து மாசம் வரைக்கும் பலன் கிடைக்குது” என்ற வீரராகவன் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

40 சென்ட்டில் ரூ.1 லட்சம்...   கலக்கல் வருமானம் கொடுக்கும்  ‘காஞ்சி’ கத்திரி..!

“கத்திரியை நட்ட அறுபதாவது நாள்ல இருந்து காய் பறிச்சுட்டிருக்கேன். ஒரு நாள் விட்டு ஒரு பறிப்புனு இதுவரை 55 பறிப்பு (2.1.18-ம் தேதி வரை) முடிஞ்சுருக்கு. இதுவரைக்கும் மொத்தம் 3,000 கிலோ காய் கிடைச்சுருக்கு. தோட்டத்திலேயே வந்து வியாபாரிகள் வாங்கிக்கிறாங்க. இதுவரை கிடைச்ச 3,000 கிலோ

40 சென்ட்டில் ரூ.1 லட்சம்...   கலக்கல் வருமானம் கொடுக்கும்  ‘காஞ்சி’ கத்திரி..!

கத்திரியை விற்பனை செஞ்சது மூலமா 75,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இதுவரைக்கும் 25,000 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதுபோக, 50,000 ரூபாய் கையில லாபமாகக் கிடைச்சுருக்கு. இன்னும் 15 பறிப்புகள் வரும்னு எதிர்பார்க்கிறேன். அது மூலமா கிட்டத்தட்ட 800 கிலோவுக்குக் குறையாம காய் கிடைக்கும்.

இப்போ விற்பனையாகிற விலை நிலவரப்படி பார்த்தா (25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை) 800 கிலோ கத்திரி மூலமா 25,000 ரூபாய்க்குமேல வருமானம் கிடைக்கும். அதுல அறுவடை பண்ற செலவு 6,000 ரூபாய் போக, எப்படியும் 19,000 ரூபாய் கண்டிப்பா லாபமாகக் கிடைக்கும். வெறும் 40 சென்ட் நிலத்துல இருந்து ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது போதுமானதுதான்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

வீரராகவன்,
செல்போன்: 98941 20278 

6 சென்ட்டில் நாற்றங்கால்!

40 சென்ட் நிலத்தில் கத்தரிக்காய் சாகுபடி செய்வது குறித்து வீரராகவன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

கத்திரிக்காய் சாகுபடியில் நாற்று நடவு நல்ல பலன் தரும். செம்மண் மற்றும் களிமண் நிலங்கள் கத்திரிக்கு ஏற்றவை. நாற்பது சென்ட் நிலத்தில் நடவுசெய்ய, நாற்றங்காலுக்காக 6 அடி நீளம் 6 அடி அகலத்தில் பாத்தி அமைத்து... 300 கிலோ தொழுவுரத்தை இட்டு 100 கிராம் கத்திரி விதையைத் தூவிவிட வேண்டும். தினமும் ஜீவாமிர்தம் கலந்த தண்ணீரைத் தெளித்து வர வேண்டும். விதைத்த ஒரு மாதத்தில் நாற்றுகள் தயாராகிவிடும். நாற்றுகள் வளர்ந்து கொண்டிருக்கும்போதே நடவு வயலைத் தயார்செய்துவிட வேண்டும். தேர்வு செய்த 40 சென்ட் நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, 2 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி நன்கு உழ வேண்டும். அடுத்து மூன்றுக்கு மூன்றடி சதுரத்தில் பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். பிறகு வளர்ந்த நாற்றுகளைப் பறித்து 2 அடி இடைவெளியில் நடவுசெய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

ஒவ்வொரு முறை பாசனம் செய்யும்போதும் 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். நடவு செய்த 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை இஞ்சிப்பூண்டுக் கரைசலையும் மூலிகைப் பூச்சிவிரட்டியையும் சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். 25-ம் நாள் களைகளை அகற்றிவிட்டு ஒவ்வொரு செடியின் தூர் பகுதியிலும் 50 கிராம் அளவு வேப்பம் பிண்ணாக்கை வைத்து மண் அணைக்க வேண்டும். 60-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.