அனைவருக்கும் பசுமை வணக்கம்!

“கடைக்கு வர்ற விவசாயிகள், பூச்சிக்கொல்லிகளை மாத்தி மாத்தி வாங்கிட்டுப் போய்த் தெளிப்பாங்க. ஆனா, பூச்சிகள் கட்டுப்படலைனு புலம்புவாங்க. எனக்கும் அதுக்கான காரணம் ஆரம்பத்துல பிடிபடலை. ‘பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த பூச்சிகள் எதிர்ப்புத்திறனை வளர்த்துக்கும்’னு பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிட்ட பிறகு, பகீர்னு ஆகிபோச்சு. அதுக்கப்புறம்தான் எனக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்மேல வெறுப்பு வந்தது. நான் நடத்திட்டிருந்த உரக்கடையை மூடிட்டு, இப்போ அரிசிக்கடையை நடத்திக்கிட்டிருக்கேன். இப்பவும் என்னோட, இயற்கை பிரசாரம் தொடருது. இப்போ பல விவசாயிகளை இயற்கைக்கு மாத்திட்டு இருக்கேன்..’’

- இது விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவீந்திரன்.

பசுமை விகடனில் வெளிவந்த தகவல்களைப் பயன்படுத்தி, இப்படி வெற்றிநடைபோடும் விவசாயிகளின் அனுபவப் பகிர்வைக் கேட்கும்போதெல்லாம்... ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்றபடி பசுமை விகடன் தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிக்கொண்டிருப்பது குறித்தான மகிழ்ச்சி, உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும். இதோ உங்கள் பசுமை விகடன் இதழ், 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அத்தகைய மகிழ்ச்சி பலமடங்கு பெருகுகிறது.

தாங்கள் பெற்ற அனுபவங்களை, திருத்தங்கல் ரவீந்திரன் போலவே ‘படிச்சோம், விதைச்சோம்’ என்ற தலைப்பில் வழக்கம்போல இந்தச் சிறப்பிதழில் பகிர்ந்துள்ளனர் விவசாயிகள்.

இதுபோல் இன்னும் பல்லாயிரம் விவசாயிகளை உருவாக்கும்வகையில், தமிழ்நாட்டில் இயற்கை விவசாயக் கருத்தரங்குகள், சிறுதானிய உணவுத் திருவிழாக்கள், வீட்டுத்தோட்டப் பயிற்சி முகாம்கள்... பசுமை விகடன் போலவே பலதரப்பிலிருந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ‘பசுமை’ விழிப்பு உணர்வு பயணத்துக்கு, வழக்கம்போலப் பசுமை விகடன் பக்கபலமாகவும் உற்ற தோழனாகவும் இருக்கும். தொடரட்டும் இந்த நற்பயணம், பரவட்டும் பசுமை!

- ஆசிரியர்