Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

பாரம்பர்ய நெல் பாதுகாப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள இயற்கை வேளாண் வயல்வெளிப் பண்ணையில், பிப்ரவரி 6-ம் தேதி ‘பாரம்பர்ய நெல்வகை பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைகள்’ குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கருத்தரங்கில் நபார்டு வங்கியின் முதன்மைப் பொதுச்செயலாளர் நாகூர் அலி ஜின்னா, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத் திட்ட இயக்குநர் முனைவர் பாஸ்கரன் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். உணவு, கையேடு, தேநீர் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04369 220954,
செல்போன்: 94433 20954.


மீன் வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 8-ம் தேதி ‘மாதுளைச் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 9-ம் தேதி ‘பசுந்தீவன உற்பத்தி மற்றும் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’,
12-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பில் பால் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘தென்னை மற்றும் பாக்குச் சாகுபடி’ 28-ம் தேதி ‘மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் பிப்ரவரி 7-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 13-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 15-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 22-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 27, 28-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’, ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 30-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 15-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு, 20-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

உணவு பதப்படுத்துதல்

வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உள்ள டி.பி.ஐ மையம், பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான ‘உணவு மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்களைப் பதப்படுத்தி விற்பனை செய்தல்’ எனும் 6 வாரகாலப் பயிற்சியை வழங்க உள்ளது. ஜனவரி 29-ம் தேதி தொடங்கி 6 வார காலப் பயிற்சி முகாம் நடைபெறும்.

மார்க்கெட்டிங், நிதி வசதி, மனிதவளம், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு பெறுவதற்கான வழிமுறை, பேக்கேஜ் உள்ளிட்டவை சம்பந்தமாகச் சில தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாகச் சென்று பயிற்சி வழங்கப்படும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0416 2202301, செல்போன்: 94433 11367.

மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 30, 31-ம் தேதிகளில் ‘தானியப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, பிப்ரவரி 6, 7-ம் தேதிகளில் ‘பசுமைக் குடில் சாகுபடித் தொழில்நுட்பம்’, 8, 9-ம் தேதிகளில் ‘வெண்பன்றி வளர்ப்பு’, 15, 16-ம் தேதிகளில் ‘பண்ணைக் கருவிகள், பூச்சி மேலாண்மை’, 20, 21-ம் தேதிகளில் ‘மீன் வளர்ப்பு’, 26, 27-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

தண்டோரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இயற்கைக் கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கண்ணதாசன் மணிமண்டபத்தில் பிப்ரவரி 4-ம் தேதி ‘பிள்ளையார்பட்டி’ பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் மற்றும் காரைக்குடி ஆழ்வார் பவுண்டேசன் இணைந்து நடத்தும் ‘இயற்கை விவசாயக் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. 

தொடர்புக்கு, செல்போன்: 96292 72380, 94885 75716.

தீவன மேலாண்மை

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 6-ம் தேதி ‘சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 13-ம் தேதி ‘தீவனப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, 20-ம் தேதி ‘பண்ணைக் கழிவுகளை மட்க வைத்தல் மற்றும் மட்கிய உரம் தயாரித்தல்’, 21-ம் தேதி ‘கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை முறைகள்’, 22-ம் தேதி ‘திலேப்பியா மீன் வளர்ப்பு முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு

திருவாரூர், வேலுடையார் கல்வி நிறுவன வளாகத்தில் ஜனவரி 29 முதல் 31-ம் தேதி வரை ‘விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு, கண்காட்சி, பாரம்பர்ய விளையாட்டுகள் மற்றும் பாரம்பர்ய உணவுத் திருவிழா’ என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் முதன்மைப் பொதுச்செயலாளர் நாகூர் அலி ஜின்னா, சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் வேளாண் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். தங்கும் இடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 94866 86631, 94430 075544.

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் பிப்ரவரி 3-ம் தேதி ‘அங்கக உரம் தயாரித்தல்’, 24-ம் தேதி ‘தேனி வளர்த்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

மண்புழு உரம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 7-ம் தேதி ‘சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவு பண்டங்கள் தயாரித்தல்’, 8-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரித்தல்’, 23-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு முறைகள்’, 27-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288