விவசாயத்தைவிட்டு விலகிச்சென்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர் எனப் பலரையும் இயற்கை விவசாயத்துக்கு இழுத்து வந்ததில் ‘பசுமை விகடன்’ இதழுக்குப் பெரும்பங்கு உண்டு. அப்படி இயற்கை விவசாயத்துக்கு வந்த பலரையும் அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவருகிறது பசுமை விகடன்.

அந்த வகையில், விவசாயக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மருத்துவப் பணியின் காரணமாக விவசாயத்தைவிட்டு விலகி, பசுமை விகடன் படித்து மீண்டும் விவசாயம் செய்ய வந்திருக்கிறார்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ரத்தினவேல் மற்றும் கால்நடை மருத்துவர் தங்கத்துரை ஆகியோர். இவர்கள் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலூகாவில் உள்ளது அரும்பருத்தி கிராமம். இங்குதான் குத்தகை நிலத்தில் நெல் சாகுபடி செய்துவருகிறார்கள் ரத்தினவேல் மற்றும் தங்கத்துரை ஆகியோர். ஒரு விடுமுறைநாளில் தோட்டத்தில் இருந்த நண்பர்கள் இருவரையும் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் ரத்தினவேல்.

“நான் எட்டு வருஷமா பசுமை விகடன் வாசகர். விவசாய குடும்பத்துல இருந்து வந்தாலும், எம்.பி.பி.எஸ் படிச்சு மருத்துவராகிட்டதால விவசாயத்தைவிட்டு விலகிப்போயிட்டேன். பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் ஆரோக்கியமான உணவு பத்தின தேடல்ல இறங்கினேன். அதன் பலனாத்தான் இயற்கை விளைபொருள்களை வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ‘நாமளே ஏன் விவசாயம் செய்யக்கூடாது’னு தோணுச்சு. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்துல இருந்தே நண்பரான தங்கத்துரையும் என்கூட இணைஞ்சுக்கிட்டார். நாங்க ரெண்டு பேரும் பல இயற்கை விவசாயிகளைச் சந்திச்சு விவசாயம் குறித்த தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். பக்கத்துல இருக்குற வேகாமங்கலம் கிராமத்துல இயற்கை விவசாயம் செய்ற சண்முகராமன் நிறைய விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தார்.

அடுத்ததா 2012-ம் வருஷம் மாடித்தோட்டம் போட்டேன். அதுலயும் நேரடியாவே பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் இந்த எட்டு ஏக்கர் நிலத்தைப் பத்து வருஷத்துக்குக் குத்தகைக்கு எடுத்தோம். கிணற்றுப் பாசனத்தோடு இருக்கிற செஞ்சரளை மண் இது. ரெண்டு ஏக்கர் நிலத்துல நெல், 1 ஏக்கர் நிலத்துல நிலக்கடலை, 30 சென்ட் நிலத்துல காய்கறிகள், 50 சென்ட் நிலத்துல சோளம்னு சாகுபடி செஞ்சுருக்கோம். இதோடு கொஞ்சம் மரக்கன்றுகளையும் நட்டு வெச்சுருக்கோம்” என்று தாங்கள் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதையைச் சொன்னார் ரத்தினவேல்.

அவரைத் தொடர்ந்து பேசிய தங்கத்துரை, “ஒரு தடவை உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்துக்கு நம்மாழ்வார் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில நாங்களும் கலந்துகிட்டோம். அப்போ நம்மாழ்வாரோட பேச்சு எங்களை ரொம்பக் கவர்ந்துருச்சு. அதுக்கப்புறம்தான் இயற்கை விவசாயம் செய்றதுல அதிக ஈடுபாடு வந்துச்சு. இந்த நிலம் நாலு வருஷமா விவசாயம் செய்யாம புதராத்தான் இருந்துச்சு. அதனால, இந்த நிலத்த விவசாயத்துக்காகத் தேர்ந்தெடுத்தோம். நெல் சாகுபடி செய்வோம்னு முடிவு செய்து உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்துல இருந்துதான் கருங்குறுவை, ஆத்தூர் கிச்சலிச்சம்பா, சீரகச்சம்பா, கறுப்புக் கவுனினு பாரம்பர்ய ரக விதைநெல்லை வாங்கி விதைச்சோம். அவற்றையெல்லாம் அறுவடை பண்ணிட்டு இப்போ கருங்குறுவை, நவரா நெல் ரகங்களை விதைச்சுருக்கோம். நிலக்கடலை இன்னும் ஒரு மாசத்துல அறுவடையாகிடும். சோதனை அடிப்படையில மேட்டுப்பாத்தி அமைச்சுத் தக்காளி, வெண்டை, கீரை, முள்ளங்கினு போட்டோம். அதுவும் நல்லா வளர்ந்துருக்கு. அந்தக் காய்கறிகளை வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குறோம். அடுத்து மாடுகளை வாங்கலாம்னு இருக்கோம். அதுக்காகத்தான் சோளம் போட்டிருக்கோம்” என்ற தங்கத்துரை பாரம்பர்ய நெல் ரகங்களில் கிடைத்த மகசூல் குறித்துச் சொன்னார்.

“மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலத்துலயும் சேர்த்து, கருங்குறுவை ரகத்துல 450 கிலோ நெல், ஆத்தூர் கிச்சலிச்சம்பா ரகத்துல 750 கிலோ நெல், சீரகச்சம்பா ரகத்துல 600 கிலோ நெல், கறுப்புக்கவுனி ரகத்துல 450 கிலோ நெல்னு கிடைச்சிருக்கு. எல்லாத்தையும் அரிசியாக்கித்தான் விற்பனை செய்யப்போறோம். கருங்குறுவை ரக அரிசி கிலோ 120 ரூபாய் வரை விலை போகுது. ஆத்தூர் கிச்சலிச்சம்பா அரிசி கிலோ 75 ரூபாய்னு விலை போகுது. கறுப்புக்கவுனி அரிசி கிலோ 200 ரூபாய் வரை விலை போகுது. சீரகச்சம்பா அரிசி கிலோ 140 ரூபாய் வரை விலை போகுது. இருக்குற எல்லா ரக நெல்லையும் அரிசியா அரைச்சு விற்பனை செஞ்சா எப்படியும் 1,50,000 ரூபாய்க்குமேல வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அதுல 70,000 ரூபாய் செலவு போனாலும் ரெண்டு ஏக்கர்ல 80,000 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்” என்றார் தங்கத்துரை.

நிறைவாகப் பேசிய ரத்தினவேல், “இயற்கை முறையில இந்த விளைச்சல் குறைவான அளவுதான். அடுத்தடுத்து செய்யும்போது மகசூல் அதிகரிச்சுடும். அதில்லாம நாங்க தேவைக்கு அதிகமா இடுபொருள்களைக் கொடுத்துட்டோம். அதையும் சில விவசாயிகள் சுட்டிக்காட்டியிருக்காங்க. இந்த முறை அந்தத் தவறுகளைச் சரி செஞ்சுட்டோம். அதனால, நல்ல விளைச்சல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
ரத்தினவேல்,
செல்போன் 70107 14041.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதைநெல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய ரக நெல்லைச் சாகுபடிசெய்யும் விதம் குறித்து ரத்தினவேல் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

பாரம்பர்ய நெல் ரகங்களின் வயது வேறுபட்டாலும், அவற்றைச் சாகுபடிசெய்யும் முறை ஒன்றுதான். வயலின் ஓர் ஓரத்தில் நாற்றங்கால் அமைத்து 2 கிலோ விதைநெல்லைத் தூவி விதைத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 5-ம் நாள் 1 லிட்டர் பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, பாசன நீரில் கலந்து விட வேண்டும். 10-வது நாள் 1 லிட்டர் ஜீவாமிர்தத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 24-ம் நாளுக்குமேல் நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்யலாம்.

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி டிராக்டர் மூலம் உழவுசெய்து நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர்கட்டி ஒரு டிராக்டர் அளவுக்கு எருக்கன், வேம்பு போன்ற இலைதழைகளைக் கொட்டி, பரப்பி மட்கவிட வேண்டும். பிறகு சேற்றுழவு செய்து, வரிசைக்கு வரிசை 1 அடி, செடிக்குச் செடி முக்கால் அடி இடைவெளி இருக்குமாறு குத்துக்கு ஒரு நாற்று என நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும்.

நடவுசெய்த 5-ம் நாள், 50 கிலோ வேப்பம் பிண்ணாக்குத் தூளைப் பரவலாகத் தூவ வேண்டும். 10-ம் நாள் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். நடவுசெய்த 18-ம் நாள் கோனோவீடர்மூலம் களைகளை அழுத்தி விட்டு 25 கிலோ வேப்பம் பிண்ணாக்குத்தூள், 25 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்குத்தூள் ஆகியவற்றைப் பரவலாகத் தூவிவிட வேண்டும்.

25-ம் நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 40-ம் நாள் மீண்டுமொருமுறை களைகளை அகற்ற வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டித் தெளிக்கலாம். தொடர்ந்து 20 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் அல்லது அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து கொடுத்து வர வேண்டும். நெற்பயிர் முதிர்ச்சி அடைவதைத் தெரிந்து கொண்டு அறுவடை செய்யலாம்.