‘‘சம்பங்கி மலர்ச் சாகுபடி செய்துள்ளோம். நிலத்தில் களைகள் அதிகமாக உள்ளன. இதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்?’’

எம்.தயாநிதி, ஆற்காடு.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி சம்பங்கி விவசாயி கலைச்செல்வன் பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய அனுபவத்தில் சம்பங்கிச் சாகுபடி நல்ல லாபம் தரும் பயிர். ஆனால், அதில் உருவாகும் களையைக் கட்டுப்படுத்தும் ‘கலை’ தெரிந்திருக்க வேண்டும். எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தில் களையெடுக்க ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், மல்ச்சிங் ஷீட் (பாலீத்தின் மூடாக்கு) விரிப்பு போட அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய்தான் செலவு. அதாவது, ஏக்கருக்கு 120 கிலோ மல்ச்சிங் ஷீட் தேவைப்படும். தற்போது, கிலோ ரூ.150 வரை விற்பனையாகிறது. பாலித்தீன் மூடாக்குப் போட்டால், பட்டாம் பூச்சிப் பாசனம் அமைக்க வேண்டும். சம்பங்கிச் செடிகள்மீது, மழைபோலத் தண்ணீர் தெளிப்பத்தால், பூச்சி-நோய் தாக்குவதும்கூடக் குறைகிறது. பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்க ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஒருமுறை இந்த அமைப்புகளுக்குச் செலவு செய்துவிட்டால், சுமார் 4 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

பாலித்தீன் மூடாக்கு அமைக்க மூன்றரை அடி அகலம்கொண்ட பார் அமைக்க வேண்டும். உயரம் முக்கால் அடி இருக்க வேண்டும். பாருக்குப் பார் ஒன்றரை அடி இடைவெளி தேவை. பாருக்குமேல் நான்கு அடி அகலமுள்ள பாலித்தீன் ஷீட்டை விரித்து, அதன் இரு ஓரங்களிலும் கொஞ்சம் மண்ணைப் போட வேண்டும். ஷீட்டின் நடுப்பகுதியில் பட்டாம்பூச்சிப் பாசனக் குழாயை அமைக்க வேண்டும்.

இதன்மூலம் தண்ணீர் கொடுப்பதால்... மண்ணுக்குள் தண்ணீர் இறங்கி, எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். செடிக்கும் முழுமையான தண்ணீர் கிடைக்கும். பார் ஈரமாக இருக்கும்போதே, அதன் இரண்டு ஓரங்களிலும் இரண்டு அடி இடைவெளியில் வரிசையாக நான்கு சென்டிமீட்டர் அளவுக்கு, பெருக்கல் குறியீடுபோல பிளேடால் கீறிவிட்டு, சம்பங்கி விதைக்கிழங்கை நட வேண்டும். பாலித்தீன் ஷீட், பார்களின் மீது சூரியஒளி படாதவாறு முழுமையாகத் தடுப்பதால்... களையே இருக்காது. அதேசமயம், செயற்கையான பாலீத்தின் மூடாக்குப் போடுவதால், நிலத்தில் வெப்பம் அதிகரித்து, நுண்ணுயிரிகள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

பாலித்தீன் மூடாக்குக்கு மாற்றாக, இலை, தழைகள், கரும்புத்தோகை கொண்டும் இயற்கையான முறையில், மூடாக்கு அமைக்கலாம். இந்தவகையில் மூடாக்குப் போடுவதால், மூன்றுவிதமான நன்மைகள் உண்டு. முதல் நன்மை நிலத்தில் களை வளராது. அடுத்து, மண்ணின் மீது மூடாக்கு மூடியிருப்பதால் தண்ணீர் அதிகமாக ஆவியாவது தடுக்கப்படும். இதனால், வழக்கத்தைவிடக் குறைவாக நீர் பாய்ச்சினால் போதும். மூன்றாவதாக, நாம் அமைத்துள்ள இயற்கை மூடாக்கு மட்கி மண்ணுக்கு உரமாகவும் மாறும். எனவே, சூழ்நிலைக்குத் தக்கபடியும், தங்களின் வசதிக்கு ஏற்றபடியும் மூடாக்குகளை விவசாயிகள் அமைத்துக் கொள்ளலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 97877 87432.

‘‘சர்க்கரை வள்ளிக்கிழங்குச் சாகுபடிசெய்ய விரும்புகிறோம். இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் புதிய ரகங்களை வெளியிட்டுள்ளதா?’’

எம்.ஜோதி, சிதம்பரம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், காய்கறிப் பயிர்கள் துறை விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘நம் மக்களைவிட, வெளிநாட்டுக்காரர்களுக்கு இதன் அருமை நிறையவே தெரியும். இதனால்தான், புதுச்சேரி அருகேயுள்ள ‘ஆரோவில்’ பகுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டுக் காரர்கள், இந்தக் கிழங்கை அதிகளவில் பயிர் செய்வதோடு... பொரியல், மசியல் என விதவிதமாகச் சமையல் செய்து அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அற்புதமான உணவுப் பயிர். பல சத்துகளைக் கொண்டிருக்கும் இனிப்பான இக்கிழங்கு, ஒரு காலத்தில் அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டு வந்தது. மாறிவரும் உணவுப் பழக்கத்தால், இந்தக் கிழங்கையும் ஒதுக்கிவிட்டோம். அதனால், சரியான விற்பனை வாய்ப்பு இல்லாததால், சாகுபடிப் பரப்பு குறைந்துவிட்டது. இதன் அருமை பற்றித் தெரிந்த விவசாயிகள், வீட்டுத் தேவைக்காக மட்டும்தான் சாகுபடிசெய்து வருகிறார்கள். இதன் இலைகளும்கூடச் சுவையாக இருக்கும். இலைகளை, பொரியல், சாலட்... என்று தயாரித்துச் சாப்பிடலாம். நடவுசெய்த 100-ம் நாளில் இது அறுவடைக்கு வந்துவிடும். ஏக்கருக்கு 25 டன் விளைச்சல் கிடைக்கும். ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், கோ-1, கோ-2, கோ-3 என மூன்று ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தவிர, சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடும்படியாக, குறைவான இனிப்புச் சுவையுடன், வைட்டமின்-ஏ சத்தோடு கூடிய புதிய ரகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த ரகம், விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தக் கிழங்கில் ‘ஸ்டார்ச்’ தயாரிப்பது பற்றி மேற்கொண்ட ஆய்வில், மரவள்ளிக் கிழங்கைவிட, இதில் அதிக அளவு ஸ்டார்ச் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம், ஸ்டார்ச் தயாரிக்கத் தொடங்கினால், சர்க்கரைவள்ளிக் கிழங்குச் சாகுபடிக்குப் பரவலாக வாய்ப்புகள் ஏற்படும்.’’

தொடர்புக்கு:

காய்கறிப் பயிர்கள்துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் – 641003
தொலைபேசி எண்: 0422 –6611283.

‘‘வேலி மசால், முயல் மசால்... போன்ற தீவன விதைகள் எங்கு கிடைக்கும்?’’

கே.ராஜாமணி, காங்கேயம்.

‘‘நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில், கால்நடை வளர்ப்பு, தீவனப் பயிர்கள் சாகுபடிப் பயிற்சிகளுடன், தீவனப் பயிர் விதைகளையும் விற்பனை செய்துவருகிறார்கள். இருப்புக்குத் தக்கபடி விவசாயிகள் வாங்கிக்கொள்ளலாம்.
விலை மாற்றத்திற்குறியது.

வேலி மசால் - ரூ 500 (கிலோ)
முயல் மசால் - ரூ 350 (கிலோ)
தட்டைப் பயறு - ரூ 150 (கிலோ)
சூபாபுல் - ரூ300 (கிலோ)
அகத்தி - ரூ 500 (கிலோ)
கோ.எஃப்.எஸ்-29 - ரூ400 (கிலோ)
கினியாப் புல் - ரூ 1 (கிழங்கு )
கோ-4 - ரூ 0.50 (கரணை)

தொடர்புக்கு, வேளாண் அறிவியல் மையம்,
நாமக்கல் - 637 002. தொலைபேசி 04286 266 345.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.