கர்நாடகா மாநிலத்தில் உள்ள ‘லிங்காயத் பஞ்சமலி ஜகத்குரு மஹாபீடம்’ சார்பில், மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘தேசிய பசவ வேளாண் விருது’ வழங்கப்பட்டது. சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில், கடந்த ஜனவரி 24-ம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான கர்நாடகா மாநில விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விருது வழங்கிப் பேசிய பசவ ஜெயம்ருத்யுன்ஜெய சுவாமிஜி, “கர்நாடகாவில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. அவர் பெயரால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பசவேஸ்வரர், விவசாயிகளைக் கடவுளாக எண்ணினார். அவர்களை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இன்றைக்கும் விவசாயிகள்தான் கடவுளாக இருக்கிறார்கள். மனிதர்களுக்கு அடிப்படையானது உணவு. அதைக் கொடுப்பவர்கள், கடவுளுக்கு இணையானவர்கள். அதனால்தான் விவசாயிகளைக் கடவுள் என்று அழைக்கிறேன். விவசாயிகள் இல்லையேல் இந்தியா இல்லை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது இந்தியா.

சாமியார்களுக்கு மந்திரங்கள், வேதங்கள் முக்கியமாக இருப்பது போன்று, விவசாயிகளுக்கு முக்கியமாக இருப்பது, அவர்களின் நலன் சார்ந்த பிரச்னைகள். அது தீர்க்கப்பட்டால், விவசாயிகளின் நலன் காக்கப்படும். விவசாய விளைபொருள்களின் விலை தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் முன்னெடுத்த விஷயம், முக்கியமான ஒன்று. இந்த கமிஷன் ரிப்போர்ட்தான் விவசாயிகளின் புனித நூல். அந்தக் கமிஷனின் பரிந்துரையை அரசு செயல்படுத்த வேண்டும். இந்தியாவின் உணவு உற்பத்திக்கு வித்திட்டதற்காக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்த விருதைக் கொடுப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன், “உணவு, ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது. அதே உணவு, வருமானத்துக்கும் அடிப்படையானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயத்தில் வருமானப் பாதுகாப்பு மிக முக்கியம். உற்பத்தியும் வருமானமும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இன்று பருவநிலையும் விளைபொருளுக்கான விலையும் விவசாயத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. உறுதியான விலையும் நிலையான சந்தையும் அமைந்தால்தான் விவசாயத்தில் நிலைத்து இருக்க முடியும். வருங்காலங்களிலாவது, விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.