சென்னை சுதேசி இயக்கம் மற்றும் பேரூர் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றின் சார்பில்... கடந்த ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் ‘உலகப் பனைப் பொருளாதார மாநாடு’ நடைபெற்றது. மாணவர்கள், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பலர், இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மாநாட்டை ஒட்டி, பனைப்பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இம்மாநாடு குறித்து நம்மிடம் பேசிய சுதேசி இயக்கத்தின் தலைவர் குமரி நம்பி, “பனை ஓலை,

பனைமட்டை, பனை அடிமட்டை, பனைப்பாளை, பனைப்பூ, பதநீர், நுங்கு, பனைவேர், பனைத்தண்டு, பனங்கிழங்கு, பனம்பழங்கள் என அனைத்துக்குமே தனித்தனியாகத் தொழிற்சாலைகள் அமைக்க முடியும். அந்தளவுக்குப் பலன் கொடுப்பவை பனைமரங்கள். பனை ஓலையில், குறுத்தோலை, இள ஓலை, முற்றிய ஓலை எனப் பல வகைகள் உண்டு. இவற்றில் கைவினைப் பொருள்கள், பெட்டி, கூடைகள் செய்யலாம். முற்றிய ஓலைகொண்டு செய்யப்படும் பெட்டி, 100 கிலோ எடையைக்கூடத் தாங்கும். பனைப் பாளை மூலமாகக் கால்நடைத்தீவனம் தயாரிக்கலாம். நுங்குமூலம் சர்பத், ஐஸ் கிரீம் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். பனம்பழங்களிலிருந்து பழக்கூழ், பனியாரம் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். பனங்கிழங்கிலிருந்து மாவு தயாரிக்கலாம்.

பனையிலிருந்து பலவித மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. இப்படி அனைத்து விதங்களிலும் பயன்படுத்தினால், ஒரு பனைமரத்திலிருந்து குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 5 கோடி பனைமரங்கள் உள்ளன. அவற்றில் 25 லட்சம் மரங்களைத்தான் நாம் பயன்படுத்திவருகிறோம். அரசு, உள்ளாட்சி அமைப்புகள்மூலம் பனைத் தொழிற்சாலைகளைத் தொடங்கி நடத்தினால், ஒன்றரைக் கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு, கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தையும் ஈட்ட முடியும்” என்றார்.