கடந்த ஜனவரி மாதம் திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்த காவல்துறை, அங்கு நீரா உற்பத்தி செய்ய, மரங்களில் கட்டி வைத்திருந்த மண் கலயங்களை அடித்து நொறுக்கிய சம்பவம், தென்னை விவசாயிகளிடையே வேதனையை உண்டாக்கியிருக்கிறது. நீரா இறக்குவதற்கு அனுமதியளித்த அரசே, இப்போது உற்பத்தி செய்வதற்குத் தடை செய்கிறது. இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்று வேதனை தெரிவித்து வருகின்றனர் தென்னை விவசாயிகள்.

நீரா உற்பத்தி செய்வதற்காகத் தென்னை மரங்களில் கட்டப்பட்டு இருந்த மண் கலயங்கள் சூறையாடப்பட்டதில் பாதிக்கப்பட்ட குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமரேசனிடம் பேசினோம், “சின்ன வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர், மிளகாய், அவரை எனப் பயிர் செஞ்சுட்டு வர்றேன். இதோடு தென்னந் தோட்டமும் இருக்கு. இப்போ தண்ணி பற்றாக்குறையால தென்னை மரங்கள் மட்டுமே வருமானம் கொடுத்துட்டு இருக்கு. எங்க சங்கம் மூலமாக, ஒரு தோட்டத்துக்கு 15 தென்னை மரங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அளவுல நீரா பானத்தை இறக்கி வந்தோம். இப்படியான சூழல்ல கடந்த ஜனவரி 22-ம் தேதியன்னிக்குத் திருப்பூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் சல்லைக் குச்சி, உண்டியல்னு என்னோட தோட்டத்துக்குள்ள புகுந்த காவல்துறையினர், அங்கு நீராவுக்காகக் கட்டி வெச்சிருந்த மண் கலயத்தை, சுக்கு நூறாகப் போட்டு உடைச்சிட்டாங்க. ஏன்னு கேட்டதுக்கு முறையா பதிலும் சொல்லவில்லை” என்று கண் கலங்கியவர் தொடர்ந்தார். “இதேமாதிரி பொங்கலூர், ஊதியூர், மங்கலம், கல்லம்பாளையம், குருக்கபாளையம், வஞ்சிபாளையம், காமநாயக்கன்பாளையம், வேலாயுதம்பாளையம்னு அங்குள்ள விவசாயிகளோட தோட்டங்களிலும் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறாங்க. இப்படி அத்துமீறிக் கலயங்களை உடைச்சதால, அதுல சேகரிச்சு வெச்சிருந்த நீரா, மரக்கிளையில கொட்டி, ஊசி வண்டுகள் படையெடுத்து வர ஆரம்பிச்சிடுச்சு. இந்த வண்டுகள் மத்த மரங்களுக்கும் பரவிச் சேதத்தை உண்டாக்கிட்டு இருக்கு. நாங்க தவறு செஞ்சிருந்தா, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கட்டும். ஏன் அத்துமீறி நுழைஞ்சு தோட்டத்தை நாசப் படுத்தணும். ஒரு பயிர் வெச்சு வளர்த்துப் பாத்தாதான் இவங்களுக்கு விவசாயிகளோட அருமை தெரியும். காவல்துறையோட இந்த அராஜகத்தால எங்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, மனசளவுல உடைஞ்சு போய் இருக்கோம்” என்று கவலையோடு சொன்னார்.

இது சம்பந்தமாகத் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உமாவிடம் பேசினோம், “விவசாயிகள் தோட்டத்தில் உற்பத்தி செய்தது கள் மட்டுமே. நீரா அல்ல. அதனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. நீரா உற்பத்தி செய்வதற்கென்று சில நடைமுறைகள் உள்ளன. அதில் எதையுமே விவசாயிகள் பின்பற்றவில்லை” என்றார் கறாராக. காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டு வெகுண்டெழுந்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை, சப்-கலெக்டர் அலுவலகம் முன்பாக அரை நிர்வாணப் போராட்டம் எனத் தொடர் போராட்டங்களை நடத்தினர். இது சம்பந்தமாகக் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் டாக்டர் தங்கராஜிடம் பேசினோம். “கோடிகளில் செலவுசெய்து பேக்டரி அமைத்துத்தான் நீரா உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இருக்கிற வசதிகளை வைத்தே எங்களால் நீராவை உற்பத்தி செய்ய முடியும் என்பதை அரசாங்கத்திடம் காட்டத்தான், சங்கத்தின் மூலம் நீராவுக்காக ஒரு பிராண்டு உருவாக்கி, சோதனைமுறையில் நீராவை உற்பத்தி செய்து வந்தோம். ஆனால், காவல்துறை நாங்கள் கள் இறக்குகிறோம் என்றே தொடர்ந்து கூறிவருகிறது. கள்ளுக்குத் தடை விதித்துவிட்டு, நீராவை மட்டும் இறக்கிக்கொள்ள அனுமதிப்பதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல் இது. இந்தப் பிரச்னை தொடர்கதையாகிவிடக் கூடாது.

இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர, நீரா இறக்கும் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்குவதற்குத் தடை இல்லை. எனவே தமிழக அரசு, மது விலக்கை முழுமையாக அமல்படுத்தும் வரை, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இல்லையேல், தென்னை விவசாயிகளின் நன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட நீரா இறக்கும் திட்டம் தோல்வியைத்தான் சந்திக்கும். இதனால், பாதிக்கப்படப் போவது அரசு அல்ல. விவசாயிகள்தான்” என்றார்.