“பணத்தைவிட மதிப்புமிக்க விஷயங்கள் பல இருக்குனு இப்போதான் எனக்குப் புரிஞ்சுருக்கு. வெளிநாட்டுல வேலை பார்த்துக் கைநிறையச் சம்பாதிச்சாலும், பொண்டாட்டி, பிள்ளைகள், சொந்த பந்தங்கள், நண்பர்களைப் பிரிஞ்சு இருக்கிற வேதனை கொடுமையானது. நான் இருபத்தஞ்சு வருஷத்துக்குமேல அந்தக் கொடுமையை அனுபவிச்சவன். இப்போதான் மனநிம்மதியோடு இருக்கேன். அதுக்குக் காரணம் ‘பசுமை விகடன்’தான்” மூச்சுவிடாமல் பேசுகிறார் மாணிக்கம்.

துபாய் நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மாணிக்கம், வேலையை விட்டுவிட்டு முழு நேர இயற்கை விவசாயியாக மாறியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோணப்பட்டி கிராமத்தில் இருக்கிறது மாணிக்கத்தின் தோட்டம். தோட்டத்தைச் சுற்றி மாந்தோப்பு... கூப்பிடும் தொலைவில் சிறுமலை... ரம்மியமான காற்று எனச் சூழ்நிலையே ஏகாந்தமாக இருக்கிறது. பனி பொழிந்துகொண்டிருந்த ஒரு காலைவேளையில் மனைவி பழனியம்மாளுடன் சம்பங்கி வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த மாணிக்கத்திடம் பேசினோம்.

“எனக்குச் சொந்த ஊர் மதுரை. இது என் மனைவி பிறந்த ஊர். இந்தப் பகுதியோட பசுமையான சூழல், எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விவசாயம் செய்யணும்னு ரொம்ப ஆசை. ஆனா, அதை நடைமுறைப்படுத்த முடியலை. ஒரு தனியார் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகிற விவசாய நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பேன். அப்புறம் பசுமை விகடன் பத்திக் கேள்விப்பட்டு அதைப் படிக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், தோட்டம் வாங்கி விவசாயம் செய்யணுங்கிற ஆசை அதிகமாச்சு. துபாய்ல இருந்தாலும் பசுமை விகடன்ல வர்ற விவசாயிகள்கிட்ட போன்ல பேசி பல விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். அப்படிப் பேசும்போதுதான் ‘சம்பங்கி’ மருதமுத்து எனக்கு அறிமுகமானார். அடிக்கடி அவர்கிட்ட பேசிட்டிருப்பேன்.

ஒருகட்டத்துல ஏ.சி ரூம், கம்ப்யூட்டர்னு ஒரே மாதிரியா வாழ்ந்த வாழ்க்கை போரடிக்க ஆரம்பிச்சது. பசங்களுக்கும் கல்யாணம் முடிஞ்சது. அதனால, வேலையை விட்டுட்டு விவசாயம் பாக்கலாம்னு வந்துட்டேன். மருதமுத்து ஊரான தவசிமடையும் சாணார்பட்டிக்குப் பக்கத்துலதான் இருக்கு. அதனால, எனக்கு ரொம்ப வசதியா போச்சு. ஏற்கெனவே இந்தச் சூழல் பிடிக்கும்கிறதால, இங்கேயே இடம் வாங்கிட்டேன். விவசாயத்தை ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆகுது. இங்க வேலை செய்யச் செய்ய, இந்த நிலம் பல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்கு.

ஏ.சி, கார், பங்களானு இங்க எந்த வசதியும் இல்லை. குடிசையிலதான் வசிக்கிறோம். ஆனா, முன்னாடி கிடைக்காத ஆத்ம திருப்தி இப்பதான் கிடைக்குது. நான் சாப்பிடுற தானியம், காய்கறி, கீரைகள் எல்லாத்தையும் நாங்களே உற்பத்தி செய்றோம். தினமும் காலையில எழுந்திருக்கும்போதே ஆயிரம் ரூபாய் வருமானத்தோடதான் எழுந்துருக்கிறோம். சம்பங்கி பூதான் தினமும் வருமானத்தைக் கொடுக்குது. இதைவிட வேறென்ன வேணும்” என்று கேட்ட மாணிக்கம் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.

“இது மொத்தம் ரெண்டரை ஏக்கர் நிலம். அறுபது சென்ட் நிலத்துல சம்பங்கி இருக்கு. கால் ஏக்கர் நிலத்துல ரோஜா இருக்கு. ரோஜா இன்னும் மகசூலுக்கு வரலை. ஒரு ஏக்கர் நிலத்தை நெல் சாகுபடிக்காக ஒதுக்கி வெச்சிருக்கேன். மீதமுள்ள இடத்துல குடியிருப்பு, கோழிக்கொட்டகை, ஆடு, மாடுகளுக்கான கொட்டகை இருக்கு. ஒரே ஒரு போர்வெல் மூலமா பாசனம் நடக்குது. ஒரு சதுர அடி இடத்தைக்கூடச் சும்மா போட்டு வைக்கக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்கோம். எனக்கு விவசாயத்துல நேரடி அனுபவம் கிடையாது. பசுமை விகடன் மாதிரியான ஊடகங்கள் மூலமா தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்தான் மனசுல இருந்தது. அதனால, என்னோட மைத்துனர் ராமசந்திரனை உதவிக்கு வெச்சுகிட்டேன். அவர் பரம்பரை விவசாயி. அவரோட குடும்பமே எங்களோடு இணைஞ்சுக்கிட்டாங்க.

ஆரம்பத்துல, இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு நாங்க சொன்னப்போ, ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது’னு ராமச்சந்திரன் மல்லுக்கு நின்னாரு. ஆனா, நான் தெளிவா ‘இயற்கை விவசாயம்தான் செய்யணும். விளைஞ்சாலும் சரி, விளையலைனாலும் சரி’னு தீர்மானமாகச் சொல்லிட்டேன். வேற வழியில்லாம, அரைகுறை மனசோடுதான் அவர் என்கூடச் சேர்ந்து இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சார். நிலம் வாங்குனதும், சம்பங்கிச் சாகுபடிதான் செய்யணும்னு முடிவு செஞ்சுட்டேன். மருதமுத்துகிட்ட ஆலோசனை கேட்டு, அவரோட தோட்டத்தையும் பார்த்துட்டு வந்துதான் சம்பங்கி நடவு செஞ்சேன்.

அறுபது சென்ட் நிலத்துல மேட்டுப்பாத்தி முறையில சம்பங்கி நடவு செஞ்சு, ஸ்பிரிங்ளர் பாசனம் அமைச்சுருக்கேன். நாலாவது மாசத்துல இருந்தே பூ வர ஆரம்பிச்சது. ஆரம்பத்துல மூணு கிலோ அளவுக்குப் பூ கிடைச்சது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சது. இந்த ஏழு மாசத்துல 1,30,000 ரூபாய்க்குப் பூ விற்பனை செஞ்சிருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு விவசாயக் குடும்பத்துக்கு அரை ஏக்கர் சம்பங்கி இருந்தால் போதும், வாழ்க்கையைப் பிரச்னை இல்லாம ஓட்டிடலாம்.

சம்பங்கியை நடவு செஞ்சப்பவே ஊடுபயிரா வெங்காயத்தையும் நடவு செஞ்சோம். எழுபதே நாள்ல வெங்காயத்துல நல்ல விளைச்சல் கிடைச்சது. நான் நேரடியா சாகுபடி செஞ்ச முதல் பயிர் வெங்காயம்தான். மொத்தம் ஒன்றரை டன் வெங்காயம் மகசூலானது.

நல்லா உருண்டு திரண்டு வெங்காயம் பெருசா இருந்துச்சு. இந்தக் கிராமத்து வயசான விவசாயிங்களே வந்து பார்த்து அசந்து போயிட்டாங்க. சொந்தக்காரங்க, நண்பர்கள்னு கொடுத்தது போக, ஒரு டன் வெங்காயத்தை விற்பனை செஞ்சேன். அது மூலமா, எனக்கு அறுபதாயிரம் ரூபாய் லாபமாகக் கிடைச்சது. நான் அதுவரைக்கும் 60 சென்ட் நிலத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுருந்தேன். எண்பதே நாள்ல செலவு செஞ்ச தொகையில, அறுபது சதவிகிதம் பணத்தைத் திரும்ப எடுத்துட்டேன்.

வெங்காயம் கொடுத்த நம்பிக்கையில அடுத்து ஊடுபயிரா உளுந்தை நடவு செஞ்சேன். அது காற்றில் இருக்கிற நைட்ரஜனை நிலத்துல நிலைநிறுத்தும்னு படிச்சிருக்கேன். அதுக்காகத்தான் அதைத் தேர்வு செஞ்சேன். அதுலயும் நல்ல விளைச்சல் கிடைச்சது. அதை வீட்டுத்தேவைக்கு வெச்சுக்கிட்டோம். வயலைச் சுற்றிப் பூச்சிக்கட்டுப்பாட்டுக்காக ஆமணக்கு, செண்டுமல்லிச் செடிகளை நடவு செஞ்சிருக்கேன். எல்லாமே பசுமை விகடன் மூலமாகத் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்தான். வரப்பு ஓரங்கள்ல துவரை நடவு செஞ்சிருக்கேன். அதுவும் பூச்சிக்கட்டுப் பாட்டுக்கு உதவுது.

வீட்டுச் சமையலுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் எல்லாத்தையும் இங்கேயே சாகுபடி செஞ்சுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வெள்ளைப்பொன்னி நெல் போட்டோம். ‘நெல்’ ஜெயராமன்தான் விதை கொடுத்தார். ஒற்றை நாற்று முறையில நடவு செஞ்சோம். நெல் பயிர் நல்லா அகலமா தூர் பிடிச்சு, என்னைவிட உயரமா வளந்துருந்துச்சு. அக்கம் பக்கத்துல எல்லோரும் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினாங்க. முழுக்க முழுக்க அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ரெண்டையும்தான் பயன்படுத்துறோம். கையறுப்பாத்தான் நெல்லை அறுவடை செஞ்சோம். மொத்தம் இருபத்தேழு மூட்டை நெல் கிடைச்சது. போதும் போதும்கிற அளவுக்கு வைக்கோல் கிடைச்சுருக்கு. என்னாலயும் வெற்றிகரமா விவசாயம் செய்ய முடியும்ங்கிற தன்னம்பிக்கையை வெள்ளைப்பொன்னி கொடுத்திருக்கு” என்ற மாணிக்கம் நிறைவாக,

“இந்த இடத்தை ஒருங்கிணைந்த பண்ணையமா மாத்தணுங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்காக, நாட்டுக்கோழிகளை வளர்க்குறேன். ஒரு நண்பர் ரெண்டு கோழியும் ஒரு சேவலும் கொடுத்தார். ஒரு வருஷத்துல 27 கோழிகளா பெருகிடுச்சு. சம்பங்கி வயல்ல வர்ற பூச்சி, புழுக்களைக் கோழிகள் பிடிச்சுத் தின்னுடும். பாலுக்காக ரெண்டு மாடுகள் இருக்கு. இப்பத்தான் ரெண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கியிருக்கேன். எங்களுக்குத் தேவையான அரிசி, கீரை, காய்கறிகள், பால், இறைச்சி, முட்டை எல்லாமே இங்க கிடைக்குது. வேற ஏதாவது வாங்கணும்னா, அதுக்கான பணம், சம்பங்கி மூலமாகக் கிடைச்சுடுது. இந்தத் தற்சார்பு வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இதுக்கு வழிகாட்டுன பசுமை விகடனுக்குத்தான், நான் நன்றி சொல்லணும். அடுத்ததா, பந்தல் காய்கறிகளைச் சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டே வருஷத்துல நான் வெளிநாட்டு வேலையில சம்பாதிச்ச பணத்தை இந்தப் பண்ணையில சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்” என்றவரைத் தொடர்ந்து பேசிய மாணிக்கத்தின் மனைவி பழனியம்மாள்,

“துபாய்ல கோட், சூட் போட்டுட்டு இருந்த மனுசன், இங்க வந்து சாணி அள்ளுறதையும் வயல்ல இறங்கி வேலை பார்க்குறதையும் பார்த்தப்போ மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. ‘இது வேணாங்க, உங்களுக்கு ஒத்துவராது’னு எடுத்துச் சொன்னேன். ஆனா, பிடிவாதமா நின்னு இன்னிக்குச் சாதிச்சுட்டாரு. அதோட எங்களுக்கும் இயற்கையோட மகத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து, இயற்கை விவசாயியா மாத்திட்டாரு.

இப்ப நாங்க ரொம்பச் சந்தோஷமா இருக்கோம். இத்தனை வருஷமா இந்த வாழ்க்கையை இழந்துட்டோமேனு வருத்தப்படுறோம்” என்றார். இருவரும் நமக்கு விடைகொடுத்துவிட்டுப் பூ அறுவடை பணியில் மும்முரமானார்கள்.

தொடர்புக்கு,
மாணிக்கம்,
செல்போன்: 88708 72112

நான் கற்ற பாடம்

சம்பங்கிக்கிழங்கை வாங்கிட்டு வந்து அப்படியே நடவுசெய்ய ஆரம்பிச்சுட்டோம். அதேபோல, குழிக்கு ஒரு கிழங்கை மட்டும்தான் நட்டுக்கிட்டுருந்தோம். நடவு வேலை நடந்துகிட்டு இருக்கும்போது மருதமுத்து இங்கே வந்தார். அவர்தான், ‘கிழங்கைத் தரம் பிரிச்சுச் சொத்தைக் கிழங்கு, சின்னக் கிழங்குகளைக் கழிச்சுட்டுத்தான் நடவு செய்யணும். குழிக்கு ஒரு கிழங்கை மட்டும் வைக்கக் கூடாது.

பெரிய கிழங்கா இருந்தா ரெண்டு கிழங்குகளையும், சின்னதா இருந்தா மூணு கிழங்குகளையும் சேர்த்து வைக்கணும்னு சொல்லிக்கொடுத்தாரு. அதுக்கப்புறம் அந்த முறையைக் கடைப்பிடிச்சோம். செடிகள் வளர்ந்து வர்றப்போ, ஒரு கிழங்கு வெச்ச இடத்துல எல்லாம் அடர்த்தியா வளரலை. ரெண்டு, மூணு கிழங்குகளை வெச்ச இடங்கள்ல செடிங்க அடர்த்தியா ஆரோக்கியமா இருக்கு” என்றார்.