Published:Updated:

கல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...

கல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...
பிரீமியம் ஸ்டோரி
கல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...

நாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: சி.சுரேஷ்குமார்

பாரம்பர்ய உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் உள்ள உயிர்தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களால்  பாரம்பர்ய உணவுத் திருவிழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளிடையே  கல்லூரி வளாகத்திலேயே பாரம்பர்ய உணவு சமைக்கும் போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் 50 குழுக்களாகப் பிரிந்து உணவுகளைச் சமைக்க ஆரம்பித்தனர். அந்த இடமே திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. உணவு சமைக்கும்போது மாணவிகளிடையே கடும்போட்டி நிலவியதையும் காணமுடிந்தது.

கல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...

குழிப் பனியாரத்தில் தொடங்கி முடக்கத்தான் தோசை, நெருஞ்சிமுள் சூப், மூங்கில் அரிசி பாயசம்,  நெல்லிக்காய்த் துவையல்,  பனங்கற்கண்டு பால், கேப்பைக்கூழ், பால் கொழுக்கட்டை, பானகம், வரகுப் பாயசம், இஞ்சித் தொக்கு... எனப் பட்டியல் நீண்டது.

 இதையெல்லாம் பார்வையிட்டுப் பேசிய துறைத்தலைவர் முனைவர் கார்த்திகேயன், “மாணவிகள் சமைத்த அனைத்து உணவுகளும், ஒரு காலத்தில் நமது மூதாதையர் அன்றாடம் உண்ணும் உணவாகவே இருந்தது. ஆனால், இப்போதோ இந்த உணவுகளின் பெயர்கூட இளம் தலைமுறைக்குப் புதிதாகத் தெரிகிறது. அனைவரும் இயற்கை உணவை உண்டு நீண்ட நாள் வாழ வேண்டும். மக்கள் மத்தியில் இயற்கை உணவுக்கு அதிகமான விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது” என்றவர் சிறப்பாக உணவு சமைத்த குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

கல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...

போட்டியின் முடிவில் நெருஞ்சிமுள் சூப் செய்து அசத்திய ரேணுகா மற்றும் எழிலரசி என்ற மாணவிகளுக்கு முதல் பரிசு கொடுக்கப்பட்டது. பத்ரா மாணவியின் குழு செய்த முடக்கத்தான் பனியாரம் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றது.

மேலும் கேப்பைக்கூழ் செய்த கதிர் என்ற மாணவக் குழுவினருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களும் பத்துக்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்து அசத்தினர். விழாவில் சுமார் 300 மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். அனைவரும் தங்களுடைய வீட்டில் ஒரு வேளையாவது பாரம்பர்ய உணவுகளைச் சமைப்பதாய் மனதினுள் உறுதி எடுத்துக்கொண்டனர்.