Published:Updated:

விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

விழாதுரை.நாகராஜன், தி.ஆதிரை - படங்கள்: ல.அகிலன்

விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

விழாதுரை.நாகராஜன், தி.ஆதிரை - படங்கள்: ல.அகிலன்

Published:Updated:
விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

 கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, உழவர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தலைமையேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். வேளாண்மைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள புதிய பயிர் ரகங்களை, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார். விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர்

எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வேளாண்துறை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

விழாவில் பேசிய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, “எந்த ஒரு நாடு வேளாண்மையில் முன்னேறியிருக்கிறதோ, அந்த நாடே அனைத்துத் தொழிற்துறையிலும் தன்னிகரற்ற நாடாகத் திகழும். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார மேம்பாட்டிலும் உணவுப்பாதுகாப்பு பெரும்பங்கு வகிக்கிறது. உழவர் நலனை மையமாகக்கொண்டு முக்கியப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்த பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு.

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் மூலமாகப் பல்வேறு உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்குதல், பயிர் சார்ந்த நவீனத் தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுதல், தரமான இடுபொருள்கள் விநியோக முறை, பண்ணை இயந்திரமயமாக்கல், சந்தைசார் வேளாண்மை போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட முயற்சிகளின் பலனாகத் தமிழ்நாட்டில் விவசாயத்தின் வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட உயர்ந்துள்ளது. உணவு உற்பத்திக்காக மத்திய அரசு வழங்கும் ‘கிரிஷி கர்மாண்’ விருது, 2011-12-ம் ஆண்டு முதல் 2015-16-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்குத்தான் கிடைத்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறோம்” என்றார்.

விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

விழாவில் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி, “வேளாண் பெருமக்களின் பண்ணை விளைச்சலை இரண்டு மடங்காகவும் வருமானத்தை மும்மடங்காகவும் உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது தமிழக அரசு. அதற்கேற்ப தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக உழவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வண்ணம் பல்வேறு சேவைகளை இப்பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் உழவர்களின் பயிர் உற்பத்தியைப் பெருக்கி வருமானத்தை உயர்த்தும் வகையில் புதிய ரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முயற்சியால் 8 புதிய உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்கியுள்ளோம். 2016-17-ம் ஆண்டில் 15,197 குவிண்டால் விதைகள் மற்றும் 28.90 லட்சம் விதையில்லா இனப்பெருக்க நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப் பட்டுள்ளன” என்றார்.

உழவர் தினவிழாவை ஒட்டிப் பல்கலைக்கழக வளாகத்தில் வேளாண் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். உழவர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 14 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

காக்க வைத்த அமைச்சர்கள், கல கலத்த விவசாயிகள்!

உழவர் தின விழா நிகழ்ச்சிக்காகக் தமிழகத்தின் பலப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் காலை முதலே பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்தனர். விழாவுக்கு வர வேண்டிய அமைச்சர்கள் தாமதமாக வந்ததால்... காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டிய விழா, மதியம் 1 மணிக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், விழாவுக்கு வந்திருந்த விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் என அனைவருமே விழா அரங்கில் காத்திருந்தனர்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விருதுகள்

வேளாண் செம்மல் விருது

எம்.ஆசைத்தம்பி, கல்விராயன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
வி.மகாதேவன், நடுக்குப்பம், திருவள்ளூர் மாவட்டம்.
டி.தாமோதரன், குடியாத்தம், வேலூர் மாவட்டம்.
வி.தேவேந்திரன், அண்ணாமலைப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
டி.திருவேங்கடம், பெரும்பதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

சிறந்த விதை உற்பத்தியாளர் விருது


கே.செல்வி, ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
வி.கே.குமரகுரு, கருப்பன் சாவடி, கடலூர் மாவட்டம்.
எஸ்.சந்தானகிருஷ்ணன், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்.

புதுமை விவசாயி விருது

எஸ்.வெங்கடேஸ்வரன், காவல்காரன்பாளையம், திருச்சி மாவட்டம்.
டி.மணிவண்ணன், திருவண்ணாமலை மாவட்டம்.
சி.பார்த்தசாரதி, மேலூர், மதுரை மாவட்டம்.
சிறந்த பெண் விவசாயி விருது
ஜெசிந்தாஜோசப், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம்,
டி.தமிழ்ச்செல்வி, அந்தியூர், ஈரோடு மாவட்டம்.

சிறந்த உழவர் உற்பத்தியாளர் கம்பெனி விருது


புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்.