Published:Updated:

மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!
பிரீமியம் ஸ்டோரி
மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

வீட்டுத்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

வீட்டுத்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

Published:Updated:
மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!
பிரீமியம் ஸ்டோரி
மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

ஞ்சில்லா உணவு, சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவற்றைக் குறித்து அதிக விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், பலரும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவருகிறார்கள். இந்நிலையில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு வீட்டுத்தோட்டம்தான் கைகொடுத்துவருகிறது.

மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

பணிச்சூழல் காரணமாக, பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலரும் வீட்டுத்தோட்டம் அமைத்து நஞ்சில்லாக் காய்கறிகளை உண்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னை, அண்ணா நகரில் வசித்துவரும் ரகு குமார்.

“காய்கறிங்கிற பேர்ல நாமெல்லாம் காசு கொடுத்து விஷத்தை வாங்கிச் சாப்பிடுறோம். இதைத் தவிர்க்க ஒரே வழி இயற்கை விவசாயம்தான். நிலம் இருந்தா பெரியளவுல இயற்கை விவசாயத்தைச் செய்யலாம். இல்லேன்னா, வீட்டுல இருக்குற இடத்துல அல்லது மொட்டை மாடியில தோட்டம் அமைச்சு, குறைந்தபட்சம் நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையாவது விஷமில்லாம உற்பத்தி செஞ்சு சாப்பிடலாம். அப்போதான் நோய்நொடியில்லாத எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும்” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ரகு குமார். முகநூலில் ரகு குமார் நடத்திவரும் ‘ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன்’ குழுவில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

“சமையலுக்காகக் கடையில வாங்குற பெரும்பாலான பொருள்கள் கலப்படப் பொருள்களாகத்தான் இருக்கு. பெரிய பிராண்டுனு நாம நினைக்கிற பொருள்லகூடக் கலப்படம் இருக்கு. ஆரோக்கியமா இருக்கணும்னு நினைக்கிறவங்க, நமக்குத் தேவையான பொருள்களை முடிஞ்சளவுக்கு, நாமளே உற்பத்தி செஞ்சுக்கணும். முடியாதவங்க, இயற்கை விளைபொருள்கள், மரச்செக்கு எண்ணெய் மாதிரி கடைகள்ல கிடைக்கிறதை வாங்கிப் பயன்படுத்தலாம். இதெல்லாம் கொஞ்சம் விலை அதிகமா இருந்தாலும், ஆரோக்கியம்தான் முக்கியமானது.

மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

உணர்வுபூர்வமா மாடித்தோட்டத்தை அமைச்சு, நம்ம உடல்நலத்தை நாமளே காப்பாத்திக்கணுங்கிறதுக்காகத்தான் ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷனை ஆரம்பிச்சேன். அதுல நிறைய பேர் உறுப்பினர்களாகி மாடித்தோட்டங்களை அமைச்சு சிறப்பா செய்துட்டு வர்றாங்க.

வருஷா வருஷம் விழா நடத்திச் சிறப்பான முறையில மாடித் தோட்டத்தைப் பராமரிக்கிறவங்களுக்கு விருது கொடுக்குறோம். அண்மையில கூட பசுமை விகடன் ஊடக ஆதரவோடு, வீட்டுத்தோட்டத் திருவிழா சிறப்பா நடந்தது. இதோடு, மாடித்தோட்டம் அமைக்கிறதுக்கான ஆலோசனைகளையும் கொடுத்திட்டிருக்கோம்” என்ற ரகு குமார் மொட்டைமாடியில் உள்ள தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். “இங்க மொத்தம் எண்பது தொட்டிகள்ல கத்திரி, தக்காளி, வெண்டை, பீன்ஸ், செம்பருத்திச் செடிகள் இருக்கு. தொட்டிகள், மாடித்தோட்டப் பைகள்லதான் செடிகள் வளர்க்கணும்னு இல்லை. பழைய பிளாஸ்டிக் வாளிகள், மினரல் வாட்டர் கேன்கள்னு வீணான பொருள்கள்ல கூடச் செடிகளை வளர்க்கலாம். காய்கறிகளோடு மூலிகைகள், கீரைகள், மலர்கள்னு நிறைய செடிகள் இங்கே இருக்கு.

செம்மண், மாட்டு எரு, தேங்காய் நார், மண்புழு உரம் எல்லாத்தையும் கலந்து தொட்டிகள்ல போட்டுத் தேவையான செடிகளை வளர்க்கலாம். வீட்டுல வீணாகுற காய்கறிக் கழிவுகளையே உரமாகக் கொடுக்கலாம். ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சி பூண்டுக் கரைசல்னு பயன்படுத்தியே இயற்கை முறையில சிறப்பான விளைச்சல் எடுக்கலாம். இந்த இடுபொருள்கள், பூச்சிவிரட்டிகளை ரொம்பச் சுலபமாகத் தயாரிச்சுடலாம்” என்ற ரகு குமார் நிறைவாக,

“மாடித்தோட்டம் அமைச்சா மனசுக்கு நிம்மதி கிடைப்பதோடு, அங்கே வேலை செய்றப்போ, உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும். முக்கியமான சில மூலிகைகளை வளர்த்துத் தினமும் ஒரு மூலிகைச்சாற்றைக் குடிச்சுட்டு வந்தா எந்த நோயும் நெருங்காது. குறிப்பா, நம்ம குழந்தைகளுக்கு விஷமில்லாத காய்கறிகளைக் கொடுத்து வளர்க்க முடியும்” என்றார்.

தொடர்புக்கு,
ரகு குமார்,
செல்போன்: 98413 19314