அதிக விளைச்சல் எடுத்துச் சாதனை புரியும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2017-ம் ஆண்டுக்கான ஒற்றை நாற்று நடவு முறையில் (திருந்திய நெல் சாகுபடி) 50 சென்ட் நிலத்தில் 3,636 கிலோ நெல்லை விளைவித்து விருது பெற்றுள்ளார் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி.

கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும், தங்கப்பதக்கத்தையும் பரிசாகப் பெற்றுள்ளார் முனுசாமி. அவருக்குப் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. அவரது சொந்த கிராமமான குள்ளனூர் கிராமத்தில், விளம்பர பதாகைகள் வைத்துக் கொண்டாடுகின்றனர். விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த முனுசாமியைச் சந்தித்து ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தோம். மகிழ்ச்சியோடு நன்றி சொன்ன முனுசாமி, தன்னுடைய சாதனை சாகுபடி குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“நான் இலக்கியம்பட்டி ஊராட்சி அரசுப்பள்ளியில 33 வருஷம் ஆசிரியர் வேலை செஞ்சு ‘ரிட்டையர்டு’ ஆகிட்டேன். அதுக்குப்பிறகு 17 வருஷமா விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். பரம்பரை விவசாயக் குடும்பம்ங்கிறதால, சின்ன வயசுல இருந்தே விவசாயம் எனக்கு அத்துபடி. குடும்பச்சொத்தைப் பங்கு பிரிச்சதுல எனக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் கிடைச்சது. நான் பக்கத்துலேயே நாலரை ஏக்கர் நிலத்தை வாங்கி மொத்தம் ஆறு ஏக்கர் நிலத்துல விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். வேலை பார்த்துகிட்டுருந்தப்போ என் மனைவிதான் விவசாயம் செஞ்சுட்டுருந்தாங்க. எங்க வயல்ல 130 அடி ஆழம் கொண்ட கிணறு இருக்கு. அதுல எப்பவுமே தண்ணி கிடைக்கிறதால நெல், கரும்புனு சாகுபடி செய்றேன்.

நான் வேளாண்மைத்துறையில பதிவு செஞ்சு விதைநெல் உற்பத்தி செஞ்சுட்டுருக்கேன். ஒற்றை நாற்று நடவு முறையிலதான் நெல் சாகுபடி செய்றேன். எனக்குப் பழக்கமான வேளாண் அலுவலர் ராஜேந்திரன்தான், ‘மாநில அளவுல நடக்கிற மகசூல் போட்டியில கலந்துக்கங்க’னு சொல்லி ஆலோசனைகளையும் கொடுத்தார். அதுக்கடுத்து போன ஜூலை மாசம், வேளாண்மைத்துறை அலுவலகத்துல பதிவு செஞ்சேன்” என்ற முனுசாமி தொடர்ந்தார்.

“2010-ம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த ‘கோ-51’ங்கிற குறுவைச் சாகுபடிக்கான ரகத்தைத்தான் போட்டிக்கான விதைநெல்லாகக் கொடுத்தாங்க. எட்டு கிலோ விதைநெல்லை வாங்கி நாத்து விட்டு... ஒரு ஹெக்டேர் நிலத்துல ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செஞ்சேன்.

நான், ‘இயற்கை பாதிச் செயற்கை பாதி’னு கலந்துதான் இடுபொருள்களைப் பயன்படுத்துறேன். பசுந்தாள் உரம், ரசாயன உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகவ்யா, வேப்பிலைக் கரைசல்னு பயன்படுத்திச் சாகுபடி செஞ்சதுல நல்லா விளைஞ்சு வந்தது. நான் பசுமை விகடனைத் தொடர்ந்து படிக்கிற பழக்கம் உண்டு. அதுல இயற்கை இடுபொருள்கள பத்தி தெரிஞ்சுகிட்டு, அத பயிர்களுக்குக் கொடுத்தேன். பயிரோட வளர்ச்சியைப் பார்த்ததும் எனக்குப் பரிசு கிடைக்கும்னு நம்பிக்கை வந்தது.

அறுவடை சமயத்துல வேளாண்மை அதிகாரிகள் வந்து 50 சென்ட் நிலத்தை ‘மார்க்’ பண்ணிக் கொடுத்தாங்க. அதுல அறுவடை செஞ்சதுல 3,636 கிலோ நெல் கிடைச்சது. கொஞ்ச நாள் கழிச்சு நெல் விளைச்சல் போட்டியில் மாநில அளவுல நான்தான் முதலிடம்னு தகவல் சொன்னாங்க. அதுக்கான பரிசையும் வாங்கியாச்சு” என்ற முனுசாமி நிறைவாக,

“மொத்தம் 1 ஹெக்டேர் நிலத்திலிருந்து 18 டன் நெல் கிடைச்சது. போட்டியில கலந்துகிட்டா மட்டும்தானில்லை. நான் எப்பவுமே ரொம்பச் சிரத்தையா விவசாயம் செய்வேன். முறையான பாசனம், பராமரிப்பு இருந்தா, கண்டிப்பா நல்ல விளைச்சல் கிடைக்கும்ங்கிறதுக்கு நான்தான் உதாரணம்” என்று சொல்லிப் பதக்கத்தை எடுத்துக் காட்டினார்.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு,
முனுசாமி,
செல்போன்: 97902 96972

அனைத்துப் பயிர்களுக்கும் போட்டி உண்டு!

பயிர் விளைச்சல் போட்டி குறித்து, தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுசீலாவிடம் பேசினோம். “விவசாயிகள் தெளிவான பயிர்ச் சாகுபடி முறைகளைக் கற்றிருந்தால், இதுபோன்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம். நெல்லுக்கு மட்டுமல்லாது, அனைத்து விதமான பயிர்களுக்கும் போட்டி உண்டு.

ஆர்வம் உள்ள விவசாயிகள்... நிலத்துக்கான சிட்டா அடங்கல், அடையாள அட்டை ஆகியவற்றுடன் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் போட்டிக்காக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிக்குப் பதிவுக்கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். மாநில அளவிலான போட்டிக்குப் பதிவுக்கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும்” என்றார்.