Published:Updated:

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: தே.சிலம்பரசன்

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

பாசனத்தில் ஆறுகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை ஏரிகள். இன்றைய சூழ்நிலையில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஏரிகள் முக்கியப்பங்கு ஆற்றி வருவதால், இவற்றைக் குறித்து முதலில் பார்ப்போம்.

மலைகளில் ஊற்றெடுத்துப் பள்ளமான பகுதிகளை நோக்கி ஓடிய தண்ணீர்தான் ஆறு. பூமியில் பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியிருந்தால் அது ஏரி. இப்படி நீர் தேங்கி நின்ற பகுதிகளைக் கண்டறிந்த நம் முன்னோர், அவற்றுக்குக் கரைகளை அமைத்து ஏரியாக உருவாக்கினர். எனவே ஏரிகளும் இயற்கையாக உருவானவைதான். அவற்றை, முறைப்படுத்திப் பாசனத்துக்குப் பயன்படுத்தியதுதான் நம் முன்னோர்கள் செய்த வியத்தகு அறிவியல் முயற்சி.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

அவர்களின் ஆட்சிக்காலங்களில்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான ஏரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதற்குத் தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. எத்தனையோ போர்கள், சண்டைகள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மொகலாயர்கள், மராட்டியர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல நாட்டவரும் தமிழகத்தின் மீது போர் தொடுத்து, மன்னர்களின் கோட்டைகளையும், கொத்தளங்களையும் அழித்திருக்கிறார்கள். ஆனால், யாரும் ஏரியையோ, குளத்தையோ அழித்ததாக வரலாறு இல்லை. ஆனால், கடந்த 50 ஆண்டுகளாகப் பல ஏரிகள் நம் கண்முன்னே காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவற்றுள் முக்கியமானது ஆக்கிரமிப்புதான். சமூக அக்கறையற்றோர் ஆக்கிரமிப்பது ஒருபுறமிருந்தாலும், அரசே அக்கிரமிப்பதுதான் வேதனை. இனிமேலாவது மிஞ்சியுள்ள ஏரிகளைக் காப்பாற்றிக் கொள்வது மிக அவசியமானது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள், கண்மாய்கள் இருப்பதாகப் பொதுப்பணித்துறையின் புள்ளி விவரம்

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தெரிவிக்கிறது. இவற்றில் பொதுப்பணித்துறையின் பொறுப்பில் 18,789 ஏரிகள் (100 ஏக்கர் ஆயக்கட்டுக்கும் கூடுதலாக உள்ளவை) உள்ளன. மீதமுள்ள 20,413 ஏரிகள் (100 ஏக்கர் ஆயக்கட்டுக்குக் குறைவானவை) ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பில் உள்ளன.

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்றவைதான் பாசனத்துக்கு 35% அளவுக்குத் தண்ணீரை வழங்கி வருகின்றன. இதோடு குடிநீரின் தேவையையும் நிறைவு செய்து வருகின்றன. இத்துடன் நிலத்தடி நீரைச் சமன் செய்யவும் உதவுகின்றன. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் வாயிலாகப்பெறும் பாசன நீரின் அளவு 425 டி.எம்.சி. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு ஏரிகள்தான் உதவுகின்றன. அதோடு கிராமங்களில் கால்நடைகளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதும் ஏரிகள்தான். ஏரிகளால்தான், மேய்ச்சல் தொழில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து வருவதால், கடந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர் பெரிதும் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் 2,000 அடி ஆழம்வரை கீழே போய்விட்டது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் சிறப்பான கட்டமைப்புகளைக் கொண்டது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி. இது ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்று. இந்த ஏரியை எங்கள் நிறுவனத்தின் மூத்த ஆலோசகரும், முன்னாள் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளருமான ஆர். ஜெயபிரகாசம் பார்வையிட்டு வந்துள்ளார். அவர் அளித்த தகவல்கள் இங்கே...

காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது மதுராந்தகம் ஏரி. பேருந்து நிறுத்தத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை தண்ணீர் தெரியும். அந்தளவுக்குப் பரந்து விரிந்த ஏரி இது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும், சோழ மன்னரான உத்தம சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஏரி, 2,411 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள மேல்பாடி ஏரியிலிருந்து வெளிவரும் உபரி நீரால் கிளியாறு என்ற நதி தொடங்குகிறது. இந்த நதியின் குறுக்கேதான் மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. அதேபோல,  உத்திரமேரூரிலிருந்து வரும் நெல்வாய் மடுவின் மூலமாகவும் இந்த ஏரிக்குத் தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்த நெல்வாய் மடுவு என்பது பல ஏரிகள், சங்கிலித்தொடர் வரிசையில் அமைந்து, ஒவ்வொரு ஏரியாக நிரம்பி இறுதியாக மதுராந்தகம் ஏரிக்குத் தண்ணீர் வருகிறது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

இந்த ஏரியின் ஆழம் 23 அடி. நீர்மட்ட உயரம் 21 அடி. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 0.7 டி.எம்.சி (19.65 மில்லியன் கன மீட்டர்). இந்த ஏரியிலிருந்து வெளிவரும் உயர்மட்டக் கால்வாயின் வழியாகச் செல்லும் நீர் சங்கிலித்தொடர் வரிசையில் 30 ஏரிகளை நிரப்புகிறது. அவற்றின்மூலம் 4,752 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் இந்த ஏரியின் 5 மதகுகள் மூலம், 2,853 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மொத்தமாக 7,605 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆற்றிலும் அணையிலும் மட்டுமே தண்ணீரைத்தேடும் அரசியல்வாதிகள் ஏரிகளையும் பார்க்க வேண்டும் என்பதற்கு இந்த ஏரிதான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

ஏரியின் மதகுகளிலிருந்து வெளியேறும் நீரில்தான் அயரை போன்ற சிறுமீன்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும், குளித்தல், துவைத்தல் போன்ற வேலைகளுக்கும் ஏரி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதகின் நீர் செல்லும் பாதை கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு அருகே இருக்கும் நிலங்களில் கிணற்றுப்பாசனம் இல்லை. முன்பெல்லாம் மதகுகளின் கேட் வால்வுகள் உள்ள பகுதி கற்களால்தான் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது சிமென்ட் பூச்சுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

நீர்மட்டத்தின் அளவைக் குறிக்கும் வகையில் அளவீட்டுக் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தக்கருவி பெரும்பாலும் ஏரியின் ஆழமான பகுதியில் நிறுவப்பட்டிருக்கும். இதைத் தினமும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிடுவார்கள். இதன் அளவைப் பொறுத்தே நீர் திறக்கும் முடிவுகளை எடுப்பார்கள். அடுத்த இடம் கலுங்கு. இதை ‘கலங்கல்’, ‘கலிங்கல்’ ‘மிகை நீர் வழிந்தோடி’ என்றும் அழைப்பார்கள். பொதுவாக இதை ஏரியின் சமமட்டத்துக்குக் கீழே கலுங்கை அமைப்பார்கள். எளிதில் தண்ணீர் வழிந்து செல்லும்வகையில் இது அமைக்கப் பட்டிருக்கும். ஏரியின் பரப்பளவு பெரியது என்பதால் 6 கலுங்குகள் இருக்கின்றன. அனைத்துக் கலுங்குகளும் தானியங்கிக் கதவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் ஏரி நிறைவதற்கு முன்னரே கலுங்குகள் வழியாகத் தண்ணீர் வெளியேற ஆரம்பித்துவிடும். இந்த ஏரியின் கதவுகள் வழியாக எப்போதும் குறைந்தளவு நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலுங்குகள் வழியாக வெளியேறும் நீர் மீண்டும் கிளியாறு நதியாகப் பாலாற்றில் சென்று கலக்கிறது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

மதுராந்தகம் ஏரிக்கரையின் நீளம் 3,950 மீட்டர் (3.95 கிலோமீட்டர்). இந்தக்கரையின் ஒரு பகுதியில்தான் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பொதுவாகக் கரையானது ஒரே வகையான மண்ணில் அமைக்கப் படுவதில்லை. நான்கு அல்லது ஐந்து வகையான மண் வகைகளால்தான் கரை அமைக்கப்படும். இதில் களிமண், செம்மண், பொறை மண், வண்டல் மண் எனப் பலவிதமான மண் கலவையால் கரையை அமைத்திருக்கிறார்கள், நம் முன்னோர். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளன. எந்தக் கரையும் எளிதில் உடைவதில்லை. ஒன்று ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் கரைக்குச் சமமாக இருக்கும்போது கரை அரிக்கப்படலாம். அல்லது யாராவது உடைத்தால்தான் கரை உடையும். கரையைப் பலப்படுத்தும் விதமாகத்தான் பனைமரங்களையும் நட்டு வைத்தனர் நம் முன்னோர்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2

ஏரியில் எப்போதும் மதகு வழியாகத் தண்ணீர் வழிந்து கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், கால்நடைகள், மனிதர்களின் பகல்நேரத் தண்ணீர்த் தாகத்தை அவை தீர்த்து வைக்கும். மதுராந்தகத்துக்கு அருகில் இருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வருகிற பறவைகள் இரை தேட மதுராந்தகம் ஏரிக்கு அதிகளவில் வருகின்றன. அதேபோன்று மீன்பிடித் தொழிலும் நடந்துவருகிறது. ஏரியைத் தூர்வாரி 1 மீட்டருக்கு ஆழப்படுத்தினால் கூடுதலாக அரை டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம். ஏனென்றால் மதுராந்தகம் ஏரியில் ஒவ்வோர் ஆண்டும் மிகை நீர் வழிந்தோடுகிறது. அதேபோல எந்தவொரு ஏரிக்கும் வரத்துக் கால்வாய் எனப்படும் நீர்வரத்துப் பகுதி மிகவும் முக்கியம். தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தான், பல ஏரிகள் வறண்ட நிலையில் இருக்கின்றன. அரசு உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய பணிகளில் இதுவும் ஒன்று.

ஏரியில் தண்ணீர் திறப்பதற்கான அதிகாரம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏரிகளின் நிலைமை, குடிமராமத்து உள்ளிட்ட விவரங்கள் அடுத்த இதழில்...

-பாயும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏரிகள்

காவேரிப்பாக்கம் ஏரி, தென்னேரி, ராமநாதபுரம் கண்மாய், உத்திரமேரூர் ஏரி, மதுராந்தகம் ஏரி, தூசி மாமண்டூர் ஏரி, கடம்பா குளம், ராஜசிங்கமங்கலம், செம்பரம்பாக்கம், பெருமாள் ஏரி, வீராணம் ஏரி ஆகியவை தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் ஏரிகள்.

ஏரியில் கவனிக்க வேண்டியவை

 ஏரியில் கரை உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பக் கூடாது.

 கரையில் தண்ணீர் வழிந்தோடும் கோடுகள் உருவாக அனுமதிக்கக் கூடாது. அதுதான் கரை உடைவதற்கான ஆரம்பப் புள்ளி.

 ஏரிகள் பொதுவாக மூன்றாம் பிறை நிலவு போன்ற வடிவமைப்பில்தான் இருக்கும். ஆறுகளில் தண்ணீர் போக்கைக் குறைக்கத்தான், நீர்வரத்துக் கால்வாய் பகுதிகளில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உருவாக்கப்பட்டன. இப்படிச் சங்கிலித்தொடரில் உருவாக்கியதால்தான், அதிக நீர் ஆற்றில் கலந்து வெளியேறாமல் தடுக்கப்பட்டது.

 இயற்கையாக உருவான ஏரிகளைத் தவிர்த்து, பல ஏரிகள் திட்டமிட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை நீர்வளம், இடத்தேர்வு, வடிவமைப்புடன் கூடிய இடமாகவும், பாசனத்துக்குப் பயன்படக்கூடிய இடமாகவும் இருந்திருக்கின்றன. நீர்வளம் கிடைக்காத இடங்களில் ஏரியோ, கண்மாயோ, குட்டையோ உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.