Published:Updated:

மானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்!

மானியமும்  வங்கிக் கடனும் கிடைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
மானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்!

பயிற்சிதுரை.நாகராஜன்

மானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்!

பயிற்சிதுரை.நாகராஜன்

Published:Updated:
மானியமும்  வங்கிக் கடனும் கிடைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
மானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்!

கிராமப்புற இளைஞர்கள் வேலைக்காக நகரத்துக்கு இடம்பெயர்வதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறது மத்திய அரசின் ‘சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சக’த்தின் கீழ் (MSME-Micro, Small & Medium Enterprises) சென்னையில் இயங்கிவரும் பயிற்சி நிலையம். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை இடையில் நிறுத்திய கிராமப்புற இளைஞர்களுக்குச் சுய தொழில் தொடங்க குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது இந்நிறுவனம். தமிழகத்தில் சென்னை, கிண்டியில் இந்நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது.

மானியமும்  வங்கிக் கடனும் கிடைக்கும்!

கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.  கிண்டியில் உள்ள பயிற்சி நிலையத்தின் தலைமை அலுவலக கூடுதல் தொழில் ஆலோசகர்  சிவஞானத்திடம், இந்நிறுவனம் வழங்கிவரும் பயிற்சிகள் குறித்துப் பேசினோம்.

மானியமும்  வங்கிக் கடனும் கிடைக்கும்!

“இளைஞர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது தான் எங்களின் முக்கியமான வேலை. அவர்களுக்குப் பயிற்சி அளித்துத் தொழில் முனைவோராக உருவாக்கிவருகிறோம். கிராமப்புற இளைஞர்களுக்காக விவசாயம் சார்ந்த பல தொழில்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதிக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்.

நம் விவசாயிகள், இஸ்ரேல் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்களை பின்பற்றிக் குறைந்த செலவில் அதிக மகசூலை எடுக்க வேண்டும். அப்போதுதான், விவசாயம் இன்னும் லாபகரமானதாக மாறும். முதலில் மாவட்டம் வாரியாக என்னென்ன விவசாயப் பொருட்கள் உற்பத்தி ஆகின்றன, அந்தப் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை முழுமையாகக் கண்டறிந்து அதற்கேற்றவாறு தொழில்களை தொடங்குவதும் அவசியம். அந்தத் தொழில்களும் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மானியமும்  வங்கிக் கடனும் கிடைக்கும்!

இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் நாங்கள் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம். வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி வாய்ப்பு, உணவுப் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல்... உள்ளிட்ட தொழில்கள் தொடங்க வழிகாட்டி வருகிறோம்.  மலைவாழ் மக்களுக்கான கைத்தொழில் பயிற்சிகளையும் கொடுத்து வருகிறோம். மலைகளில் கிடைக்கும் உணவுப் பொருள்களை நவீனமுறையில் சந்தைப் படுத்துவது குறித்தும் பயிற்சியளிக்கிறோம். மாற்றுத் திறனாளிகள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாகத் தொழில் முனைவோர்ப் பயிற்சிகள் உண்டு. தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் அளிப்பதோடு, புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாங்கித் தருதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறோம். குழுவாக இணைந்து தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்க 15 கோடி ரூபாய் வரை கடன் வசதி செய்து தருகிறோம்.

தனக்குப் பொருத்தமான சுய தொழிலைத் தேர்வு செய்தல், தொழிலைப் பதிவு செய்தல், உரிமம் பெறுதல், கடன் பெறுதல், சந்தைப்படுத்துதல், தொழில் கூடங்களை நவீனமயமாக்குதல் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் எங்கள் மையத்தில் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம். சிறிய கடை அமைக்க விரும்புபவர்கள் முதல் மிகப்பெரிய தொழிலை ஆரம்பிப்பவர்கள் வரை அனைவருக்கும் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்” என்றார்.

உணவுக் கண்காட்சி!

“உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் துறையில் இயங்கிவரும் சிறு, குறு மற்றும் மத்திய தர நிறுவனங்களின் வணிக வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வருகிற மார்ச் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில், உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், சேவையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எங்கள் வளாகத்தில்  கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சி விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் ஒரு பாலமாக அமையும்” என்று அழைப்பு விடுத்தார் சிவஞானம்.

தொடர்புக்கு: 65/1, ஜி.எஸ்.டி ரோடு,
கிண்டி, சென்னை-32.
செல்போன்: 90920 47930