Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

மீன் வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 8-ம் தேதி ‘இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள்’, 13-ம் தேதி ‘பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு’, 16-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி ‘வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகள்’, 26-ம் தேதி ‘மீன் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பயறுவகைகள் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

மதிப்புக்கூட்டல்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 7-ம் தேதி ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 9-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 13-ம் தேதி ‘மண் வள மேம்பாடு’, 15-ம் தேதி ‘உளுந்து மதிப்புக்கூட்டல்’, 16-ம் தேதி ‘கோடைக்காலக் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288

தண்டோரா

இயற்கை இடுபொருள்கள்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 8-ம் தேதி ‘பால் காளான் மற்றும் சிப்பிக் காளான் வளர்ப்பு’, 13-ம் தேதி ‘இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல்’, 15-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் தீவன வளர்ப்பு’, 22-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 27-ம் தேதி ‘காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு,

செல்போன்: 77088 20505, 94885 75716.


நன்னீர் மீன் வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையத்தில் மார்ச் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ‘நன்னீர் மீன் வளர்ப்புப் பயிற்சி’ நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 286107

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 6-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 13-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு, 20-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

மர எண்ணெய் வித்துக்கள்

கோவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் ‘மர எண்ணெய் வித்துக்கள்’ குறித்த இரண்டு நாள்கள் பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன் 94871 69036.

தண்டோரா

கட்டணப் பயிற்சி

அசோலா வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 3-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை, 24-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.