Published:Updated:

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா!

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்...  மகிழ்ச்சியில் கர்நாடகா!
பிரீமியம் ஸ்டோரி
காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், மு.இராகவன் - படங்கள்: ம.அரவிந்த், செ.ராபர்ட்

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், மு.இராகவன் - படங்கள்: ம.அரவிந்த், செ.ராபர்ட்

Published:Updated:
காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்...  மகிழ்ச்சியில் கர்நாடகா!
பிரீமியம் ஸ்டோரி
காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா!

ல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தைச் செழிக்க வைத்துக்கொண்டிருக்கும் காவிரி ஆறு, இன்னும் நெடுங்காலம் தமிழகத்துக்குப் பயனளிக்க வேண்டும் என்பதற்காகத்தான்... 1924-ம் ஆண்டில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால், அந்த ஒப்பந்தங்களை மீறி அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடக மாநிலம்.

இப்பிரச்னையைத் தீர்ப்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி கடந்த 1990-ம் ஆண்டு ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கப்பட்டது. தொடர்ந்து நடுவர் மன்றத்தில் நடந்து வந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில், ‘தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்’ என உத்தரவிடப் பட்டது.

இந்நிலையில் ‘எங்கள் மாநிலத்துக்கான தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்’ எனத் தமிழக அரசும் கர்நாடக அரசும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழக மக்கள் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. தீர்ப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உத்தரவுகள் தமிழ்நாட்டு மக்களுக்குத் துயரம் தரக்கூடியவை’’ என்று சொல்கிறார்கள் தமிழக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள்.

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்...  மகிழ்ச்சியில் கர்நாடகா!

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க’த்தின் செயலாளர் ‘சுவாமிமலை’ விமல்நாதன், “தற்போதைய தீர்ப்பில் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவு 177.25 டி.எம்.சியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரும் அநீதி. இத்தீர்ப்பின் மூலம், டெல்டா மாவட்டங்களில் காலங்காலமாக நடைபெற்று வந்த குறுவை நெல் சாகுபடிக்கு அதிகாரபூர்வமாக முடிவுரை எழுதப்பட்டு விட்டது.

கடந்த காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்குக் கிடைத்து வந்த 368 டி.எம்.சி தண்ணீர், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சியாகக் குறைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த இறுதித்தீர்ப்பில், 192 டி.எம்.சியாகக் குறைக்கப்பட்டது. தற்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் 177.25 டி.எம்.சியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்.

பாசனத்துக்கு மட்டுமல்லாமல், 5.25 கோடி மக்கள் குடிநீருக்காகக் காவிரியைத்தான் நம்பியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் நிலத்தடியிலிருந்து 10 டி.எம்.சி தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும் என இத்தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது எங்களை மேலும் வேதனையில் ஆழ்த்துகிறது. ஏற்கெனவே நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போன நிலையில், கடல்நீரும் உள்ளே புகுந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகம் மோசமான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார்.

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்...  மகிழ்ச்சியில் கர்நாடகா!

இது குறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் ஒரு அம்சம்கூட இத்தீர்ப்பில் சொல்லப்படவில்லை. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. தீர்ப்பின் 457-ம் பக்கத்தில் 403-ம் பத்தியில் ‘இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்றுதான் சொல்லப் பட்டுள்ளது. அந்த அமைப்பு எப்படிச் செயல்பட வேண்டும் என்றோ, அதன் அதிகாரம் குறித்தோ எதுவும் இல்லை. கண்டிப்பாகத் தமிழ்நாட்டுக்குப் பாதகமான, அதிகாரமற்ற ஓர் அமைப்பைத்தான் மத்திய அரசு உருவாக்கும். இதனால், தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்ட மேலாண்மை வாரியம் என்பது, தற்சார்பான அதிகாரங்கள்கொண்டது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை நாம் பெற முடியும். இதனால்தான் கடந்த பத்தாண்டுகளாக இதை அமைக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தி வந்தோம். மத்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டது.

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்...  மகிழ்ச்சியில் கர்நாடகா!

‘பெங்களூருவின் மூன்றில் ஒரு பங்குதான் காவிரிப்படுகையில் அமைந்துள்ளது. அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரைத் தருவதுதான் சரி’ என்று நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், ‘பெங்களூருவின் முழுமையான குடிநீர்த் தேவைக்கும் காவிரி நீர் தேவை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைக் காரணம் காட்டித்தான், தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரில் 14.75 டி.எம்.சி அளவைக் குறைத்துள்ளார்கள். மேலும், தமிழ்நாட்டில் 20 டி.எம்.சி அளவு நிலத்தடி நீர் இருப்பதாகவும், அதில் 10 டி.எம்.சி அளவைக் கர்நாடகாவுக்குத் தருவதாகவும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இது மிகவும் அபத்தமானது. இந்த வழக்கு, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு. இதில் நிலத்தடிநீரை எப்படிக் கணக்கில் சேர்க்கலாம்? இது நயவஞ்சகம். பெங்களூருவின் குடிநீர்த் தேவை குறித்துக் கவலைப்படும் நீதிபதிகள், தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையைக் கண்டுகொள்ளவில்லை.

‘காவிரி ஆறு எந்த மாநிலத்துக்கும் சொந்தமானதல்ல, அது தேசியச் சொத்து’ என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதும் அநீதிதான். அதாவது, ‘காவிரி நீர் மத்திய அரசுக்குத்தான் சொந்தம். அது தொடர்பாக முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது’ என மறைமுகமாகச் சொல்கிறது இத்தீர்ப்பு. எந்தக் கட்சியினர் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் கர்நாடகாவுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்வார்கள் என்பது உலகறிந்த உண்மை. தற்போது காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை மொத்தமாக நீதிமன்றத்தின் மூலமாக அபகரித்துவிட்டார்கள்” என்றார் கவலையுடன்.

காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்...  மகிழ்ச்சியில் கர்நாடகா!

‘‘20 டி.எம்.சி நீரை எப்படிக் கணக்கிட்டார்கள்?’’

“இத்தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய 14.75 டி.எம்.சி நீர் குறைக்கப்பட்டிருப்பதால், கிட்டத்தட்ட 90 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாகக்கூடிய சூழல் உள்ளது. அதனால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 500 கோடி மதிப்பிலான விளைபொருள் உற்பத்தி குறையும். லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகும். இவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் கணக்கில்கொள்ளாமல், தமிழகத்துக்குப் பாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது” என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் தனபாலன்.

டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், “காவிரியில் வரும் நீர், தமிழகத்தில் உள்ள 37 கிளை ஆறுகளிலும் 28,500 சிறு வாய்க்கால்களிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கர்நாடகா, உரிய நேரத்தில் நீரைத் தர மறுத்துவரும் சூழ்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வறண்டுதான் கிடக்கின்றன. தமிழகத்தில், நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இந்நிலையில், ‘தமிழ்நாட்டில் 20 டி.எம்.சி நிலத்தடி நீர் இருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றம் எந்த வகையில் கணக்கிட்டது என்றே தெரியவில்லை” என்றார்.