Published:Updated:

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!
பிரீமியம் ஸ்டோரி
வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

இடுபொருள்த.ஜெயகுமார் - படங்கள்: க.மணிவண்ணன், சி.ரவிக்குமார்

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

இடுபொருள்த.ஜெயகுமார் - படங்கள்: க.மணிவண்ணன், சி.ரவிக்குமார்

Published:Updated:
வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!
பிரீமியம் ஸ்டோரி
வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!
வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

தாவரக்கழிவுகளை எளிதில் மட்க வைக்கப் பயன்படும் வகையிலும் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும் இடுபொருளாகப் பயன்படுத்தும் வகையிலும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ (Waste Decomposer) எனும் இடுபொருளைக் கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறது, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் இயங்கி வரும் ‘தேசிய இயற்கை விவசாய மையம்’. தென்னிந்திய விவசாயிகளிடம் இதைப் பரவலாக்கும் பணிகளைச் செய்து வருகிறது, பெங்களூருவில் உள்ள ‘மண்டல இயற்கை விவசாய மையம்’.

வேஸ்ட் டீகம்போஸர் குறித்துப் பெங்களூரு மையத்தின் துணை இயக்குநர் ரவீந்தரநாத்திடம் பேசினோம். “இந்தியாவில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன் இயற்கைக் கழிவுகள் உருவாகின்றன. இந்தியாவின் நகரங்களில் வசிக்கும் ஒரு மனிதன், ஒரு நாளைக்கு 200 கிராமிலிருந்து 600 கிராம் வரை மட்கக்கூடிய கழிவுகளை உருவாக்குகிறார். 300-400 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தில் ஒரு நாளைக்கு 2 டன் அளவுக்கு வேளாண் கழிவுகள் (மாட்டுச் சாணம், தீவனக்கழிவுகள், தோட்ட கழிவுகள்) உருவாக்கப்படுகிறது. இதேபோல, கோசாலைகள், சர்க்கரை ஆலைகள்... போன்றவற்றின் மூலம் பெருமளவில் மட்கக்கூடிய கழிவுகள் உருவாகின்றன.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முற்காலங்களில் இதுபோன்ற கழிவுகளை மட்க வைத்து உரமாகப் பயன்படுத்தினர். தற்போது பெரும்பாலும் ரசாயன உரங்களே பயன்பாட்டில் இருப்பதால், இதுபோன்ற கழிவுகளைப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். சில இடங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழலில் பல்வேறு எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

அறிவியல் முறையில் கழிவுகளை மட்க வைத்து, அதன் மூலம் மண்வளத்தைக் கூட்டும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்தான் வேஸ்ட் டீகம்போஸர். மட்க வைப்பதற்குப் பயன்படக்கூடிய நுண்ணுயிர் தொகுதிகளை நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து தனியாகப் பிரித்து ஆராய்ச்சி மேற்கொண்டார் விஞ்ஞானி கிருஷ்ணன் சந்திரா. அதன் பிறகு, 2004-ம் ஆண்டிலிருந்து 11 ஆண்டுகள் பண்ணைப் பரிசோதனைக்கு உட்படுத்தி நல்ல பலன்கண்ட பிறகு, 2015-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளும் குப்பைகளை மட்க வைக்க இதைப் பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய மையத்தின் ஜூனியர் அறிவியல் அலுவலர் முனைவர் சந்திரபிரபா இதன் பயன்பாடு குறித்துச் சொன்னார். “இது வெறும் மட்கவைக்கும் திரவமாக மட்டும் செயல்படுவதில்லை. நெல், காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஒரு பாட்டில் விலை 20 ரூபாய். பார்ப்பதற்குப் பசை (கோந்து) போன்ற தோற்றத்தில் இருக்கும். ஒரு பாட்டிலிலிருந்து 200 லிட்டர் கரைசலைத் தயாரிக்கலாம்.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

இந்தக் கரைசலை ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அந்தக் கரைசலிலிருந்து அப்படியே பெருக்கிக்கொண்டே போகலாம். அதாவது, எத்தனை லிட்டர் கரைசல் வேண்டும்னாலும் தயாரித்துக் கொண்டே செல்ல முடியும். வாழ்நாளில் ஒருமுறை ரூ.20 செலவு செய்து, இதை வாங்கிவிட்டால் போதும். மீண்டும் மீண்டும் வாங்கத் தேவையில்லை. இதிலிருந்து வாழ்நாள் முழுவதும் இயற்கை இடுபொருள் தயாரித்துக் கொண்டே இருக்கலாம். பாட்டில் கிடைக்கப் பெற முடியாதவர்கள் இதைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் கரைசலை வாங்கிக்கூட  இன்னொரு கரைசலைத் தயாரித்துக் கொள்ளலாம். இதைப் பாசன நீரில் கலந்து விடுவது மற்றும் இலைவழி தெளிப்பது என இரண்டு முறைகளிலும் பயிருக்குக் கொடுக்கலாம். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்ணை வளமாக மாற்றுகிறது.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

இதைக்கொண்டு சாணம், காய்கறிக் கழிவுகள், இலைதழைக் கழிவுகள், காய்ந்த குச்சிகள், பட்டைகள் ஆகியவற்றையும் விரைவில் மட்க வைக்க முடியும். மட்கிய கழிவுகளை நிலத்துக்கு உரமாகக் கொடுக்கலாம். நகரப்பகுதிகளில் வீட்டுத்தோட்டம் அமைத்திருப்பவர்களுக்கு இந்த வேஸ்ட் டீகம்போஸர் எளிமையான இடுபொருளாகப் பயன்படும்.

இது நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் உள்ளிட்ட சத்துகள் மண்ணுக்குக் கிடைக்கத் துணை புரியும்” என்றதோடு இதைப் பயன்படுத்தி வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் தொடர்பு விவரங்களைக் கொடுத்தார்.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத், இந்த வேஸ்ட் டீகம்போஸரைப் பயன்படுத்தி வருகிறார். செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெம்மேலி கிராமத்தில்தான் அஜீத்தின் கிரீன் ஃபாரஸ்ட் பண்ணை இருக்கிறது. நாம் சென்றபோது அஜீத்தும், அவருடைய மகன் பரத்தும் பண்ணையில் இருந்தனர். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

“நான் செங்கல்பட்டுல வசிக்கிறேன். அங்கேயே ஜீவல்லரி கடையும் நடத்திட்டு இருக்கேன். எங்க ஜெயின் சமூகத்துல யாரும் விவசாயம் பக்கமெல்லாம் அவ்வளவா போகமாட்டாங்க. ஆனா, எனக்கு விவசாயத்து மேல ஒரு ஃபேஷன் உண்டு. அதனால, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த 3 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். ரெண்டேகால் ஏக்கர்ல முருங்கை, வாழை, மா, பப்பாளி, எலுமிச்சை, தென்னைனு இருக்கு. இதோடு மியாவாக்கி முறையில 600 சதுரஅடியில மரப்பயிர்கள் வெச்சுருக்கேன். 50 சென்ட் நிலத்துல மிளகாய், நிலக்கடலை, அவரை, பீர்க்கன், கரும்பு, மக்காச்சோளம், சுரைக்காய்னு பலவகையான காய்கறிகளையும் ஒரே இடத்துல விளைவிக்கிற மாதிரி கலந்து விதைச்சுருக்கேன்.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

எனக்கு விவசாயத்துல புது முயற்சிகளைச் செஞ்சு பார்க்குறது ரொம்ப பிடிக்கும். போன நவம்பர் மாசம் மகாராஷ்டிரா மாநிலம், புனேவுல நடந்த வேளாண் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கதான் வேஸ்ட் டீகம்போஸர் பத்திக் கேள்விப்பட்டு வாங்கிட்டு வந்தேன். முன்னாடி பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பிண்ணாக்கு கரைசல், மோர்க்கரைசல்னு பயன்படுத்திட்டுருந்தேன். இப்போ 3 மாசமா டீகம்போஸர் கரைசலை மட்டும்தான் கொடுத்துட்டு இருக்கேன். வேறெதையுமே கொடுக்கிறதில்ல. அந்தளவுக்கு இது வீரியமாவும் பயனுள்ளதாவும் இருக்கு. இதைத் தயாரிக்கிறதுக்கான வேலையும் குறைவாத்தான் இருக்கு. வேஸ்ட் டீகம்பஸோரோடு வெல்லத்தைத்தான் சேர்க்கணும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். என் அனுபவத்துல 2 கிலோ வெல்லத்துக்குப் பதிலாக 4 லிட்டர் கரும்பு ஜூஸ், அதுவும் இல்லைனா நன்றாக பழுத்த 2 கிலோ வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துக்கலாம்” என்ற அஜீத், பயன்படுத்தும் முறை குறித்துச் சொன்னார்.

“முருங்கையைக் கவாத்து செய்றப்போ கிடைக்கிற குச்சிகள், இலைகள்; வாழை, மா, பப்பாளி, தென்னையில இருந்து கிடைக்கிற கழிவுகள் எல்லாத்தையும் ஓர் இடத்துல மொத்தமாப் போட்டு வெச்சு... அதுமேல வெல்லம், தண்ணீர் கலந்து தயாரிச்ச வேஸ்ட் டீகம்போஸர் கரைசலை நல்லா தெளிச்சுவிட்டேன். மூணே மாசத்துல எல்லாமே அப்படியே பொலபொலனு எரு மாதிரி மாறிடுச்சு. அதை அப்படியே நிலத்துல தூவி விட்டுட்டேன். அன்னன்னிக்குக் கிடைக்கும் சாணத்துல தெளிச்சுவிட்டா ஒரே மாசத்துல நல்லா மட்கிடுது.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

இந்தக் கரைசலை 7 நாள்களுக்கு ஒருமுறை பயிருக்குக் கொடுக்கச் சொன்னாங்க. ஆனா, நான் தினமும் கொடுத்துட்டு இருக்கேன். அதேமாதிரி அவங்க தண்ணீர் கலந்து பயிருக்குக் கொடுக்க சொல்றாங்க. நான் தண்ணீர் கலக்காம, பவர் ஸ்பிரேயர் மூலமா அப்படியே தெளிச்சுவிடுறேன். நிலத்துல இருக்கிற காய்ஞ்ச களைச்செடிகள் தானாகவே மட்கி உரமாயிடுது. உயிரோடு இருக்கிற புல் வகைகள் ஒண்ணும் ஆகுறதில்ல. அதேமாதிரி பயிர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்ல. இதைத் தெளிச்சதால, மாமரங்கள்ல பூக்கள் உதிராம நல்லா காய்ச்சிருக்கு. இதைத் தெளிக்க ஆரம்பிச்ச பிறகு நோய்களும் வரலை. இதோடு மண்ணும் நல்லா கறுப்பா பொலபொலனு மாறிட்டுருக்கு. இதுமூலமா கிடைச்ச நன்மைகளால 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுல ஒரு டிரம் வாங்கியிருக்கேன். அதுல கரைசலைத் தயாரிச்சு சொட்டு நீர் மூலமா கொடுக்கறதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிட்டுருக்கேன்.

முன்னாடி, ஒருமுறை இடுபொருள் தயாரிக்க ஆயிரக்கணக்கான ரூபாய் வரை செலவாகும். ஆனா, இப்போ வெறும் 100 ரூபாயில் (டீகம்போஸர் 20 ரூபாய்+ 2 கிலோ வெல்லம் 80 ரூபாய்) 200 லிட்டர் இடுபொருள் கிடைச்சுடுது” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு:
அஜீத்,
செல்போன்: 93810 06992

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

“பஞ்சகவ்யாவுடன் பயன்படுத்தலாமா?”

வேஸ்ட் டீகம்போஸர் குறித்து விவசாயிகள் எழுப்பும் பொதுவான சில சந்தேகங்களுக்கு முனைவர் சந்திரபிரபா அளித்த பதில்கள் இங்கே...

“பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் போன்றவற்றைத் தெளிக்கும் வயல்களில் வேஸ்ட் டீகம்போஸரைப் பயன்படுத்தலாமா?”


“தாராளமாகப் பயன்படுத்தலாம். பயிர்களின்மீது ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகவ்யா தெளித்திருந்தால் ஒருநாள் கழித்து இக்கரைசலைத் தெளிக்கலாம்.”

“வேஸ்ட் டீகம்போஸர் தெளிக்கப்பட்ட இலைதழைகளைக் கால்நடைகள் சாப்பிட்டால் பாதிப்பு வருமா?”


“இது மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுப்பொருள் அல்ல. அதனால், இதைச் சாப்பிட்டால் கால்நடைகளுக்கு எந்த பிரச்னையும் வராது. இது காய்ந்த குச்சிகள், செடிகள் ஆகியவற்றையே மட்க வைக்கும். உயிருள்ள தாவரங்களை ஒன்றும் செய்யாது. 7 நாள்களுக்குப் பிறகு தயாராகும் கரைசல் நல்ல வாசனையுடையதாக இருக்கும். இதைப் பயிர்களுக்குத் தெளிக்கும்போது ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் முகமூடி, கையுறை அணிந்து தெளிக்கலாம். மற்றபடி இதுவும் மற்ற இயற்கை இடுபொருள்கள் போலத்தான் இருக்கும்.”

“இந்தக் கரைசலை எத்தனை நாள்களுக்கு வைத்திருந்துப் பயன்படுத்தலாம்?”

“கரைசல் தயார் செய்ய 7 நாள்கள் ஆகும். அதிலிருந்து ஒரு மாதம் வரை வைத்திருந்துப் பயன்படுத்தலாம். ஒரு மாதத்துக்கு மேல் வைத்துப் பயன்படுத்திப் பார்த்தபோதும், எதிர்மறையான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.”

“ரசாயன நிலங்களில் பயன்படுத்தலாமா?”

“இது நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் அடங்கிய கரைசல். இதைப் பயிர்களின்மீது தெளித்துவிட்டு, பிறகு பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் கொடுக்கும்போது இதன் முழுப்பலன் பயிர்களுக்குக் கிடைக்காது.”

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

“இயற்கை விவசாயச் சான்றிதழ் கிடைக்கும்!”

பெங்களூருவில் உள்ள மண்டல இயற்கை விவசாய மையத்தின் உதவி இயக்குநர் முனைவர் வி.ஒய்.தேவ்கரே தங்கள் மையத்தின் பணிகள் குறித்துச் சில விஷயங்களைச் சொன்னார். “1998-ம் ஆண்டு, ‘மண்டல உயிர் உரங்கள் வளர்ச்சி மையம்’ என்ற பெயரில் இம்மையம் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டில், மண்டல இயற்கை விவசாய மையமாக மாற்றப்பட்டது.

தென்னிந்தியாவில் இயற்கை விவசாயத்துகென்று செயல்படும் மத்திய அரசின் அமைப்பு இது. இதன் தலைமையகம் உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் அமைந்துள்ளது. பன்ச்குலா (ஹரியானா), புவனேஸ்வர்(ஒரிஸ்ஸா), நாக்பூர் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட இடங்களிலும் செயல்படுகிறது. இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது, அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்வது, இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், எங்கள் மையத்தின் கீழ் வருகின்றன.

தென்னிந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் இயற்கை விவசாயப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். அதோடு ‘பிஜிஎஸ் இந்தியா’ என்ற பெயரில் இயற்கை விவசாயச் சான்றிதழையும் வழங்கி வருகிறோம். இது சம்பந்தமான விவரங்கள் தேவைப்படுவோர் எங்கள் மையத்தை அணுகலாம்” என்றார்

எப்படித் தயாரிப்பது?

ரைசல் தயாரிப்பு: 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக் கொள்ளவும். அதில் 200 லிட்டர் தண்ணீரை ஊற்றி 2 கிலோ வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, பாட்டிலில் உள்ள வேஸ்ட் டீகம்போஸரைச் சேர்த்துத் தினமும் இரண்டுமுறை சுத்தமான குச்சியால் கலக்கி வர வேண்டும். 7 நாள்களில் கரைசல் தயாராகிவிடும்.

கரைசலை எப்போதும் நிழற்பாங்கான இடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து 20 லிட்டர் கரைசலை எடுத்து 180 லிட்டர் தண்ணீர், 2 கிலோ வெல்லம் சேர்த்து அடுத்த 200 லிட்டர் கரைசலைத் தயாரித்துக் கொள்ளலாம். இப்படி வாழ்நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

மட்க வைத்தல்: இலை தழைகள், சாணக் கழிவுகளைப் பரப்பி அதன்மீது வேஸ்ட் டீகம்போஸர் கரைசலைத் தெளித்து ஈரமாக்க வேண்டும். அப்படியே அடுக்கடுக்காகப் போட்டு ஒவ்வொரு அடுக்கின்மீது இக்கரைசலைத் தெளித்துவிட்டால், ஒரு மாதத்தில் நன்கு மட்கிவிடும்.

இந்த அடுக்குகளில் எப்போதும் 60 சதவிகித ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இந்த மட்குகளை வயலில் அப்படியே தூவிவிடலாம்.

பயிர்களுக்கு கொடுக்கும் அளவு: இலைவழி ஊட்டமாகப் பயிருக்குக் கொடுக்கும்போது காய்கறிப் பயிர்களுக்கு ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 6 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் டீகம்போஸர் கரைசல் சேர்த்து 3 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

பழப்பயிர்களுக்கு 4 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் டீகம்போஸர் கரைசல் சேர்த்து 7 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். டீகம்போஸர் கரைசலின் அளவுக்குச் சரி பங்கு தண்ணீர் சேர்த்து மற்ற அனைத்துப் பயிர்களின் மீதும் வாரம் ஒருமுறை தெளிக்கலாம்.

மண்ணில் இடுபொருளாகக் கொடுக்கும்போது... ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலைப் பாசன நீர் வழியாகக் கொடுக்கலாம். அறுவடை முடிந்து, வயல்களில் எஞ்சியுள்ள தாவரக் கழிவுகளை மட்க வைக்க ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலைத் தெளித்தால் போதுமானது.

விதைநேர்த்தி:இக்கரைசலை விதைநேர்த்திக்கும் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன் விதைகளின்மீது டீகம்போஸர் கரைசலைத் தெளித்துப் புரட்டிவிட்டு, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

தகவல் சொல்லிய தர்மபுரி விவசாயி!

‘வே
ஸ்ட் டீகம்போஸர்’ குறித்து, ‘பசுமை விகடன்’ கவனத்துக்குக் கொண்டுவந்தவர், கொடுமுடி டாக்டர் நடராஜன். அவரிடம் பேசினோம்.

“தினமும் பஞ்சகவ்யா, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி, பல விவசாயிகள் தொலைபேசியில் பேசுவது வழக்கம். அப்படித்தான், அண்மையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஒருவர் பேசினார். அப்போது, ‘பெங்களூருவில் உள்ள மண்டல இயற்கை விவசாய மையத்தில், வேஸ்ட் டீகம்போஸர் என்ற இயற்கை திரவத்தை ரூ.20க்கு விற்பனை செய்துவருகிறார்கள். ஒருமுறை வாங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் இயற்கை உரக் கரைசல் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

இதை வடமாநிலங்களிலும், கர்நாடகா, ஆந்திரா... போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள்’ என்றார்.

நாட்டு பசுவின் சாணம் மூலம் இந்த இயற்கை இடுபொருள் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டில் உள்ள கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதால், பசுமை விகடன் ஆசிரியர் குழுவினரிடம் தகவல் தெரிவித்தேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

எங்கு, எப்படி வாங்குவது?

வே
ஸ்ட் டீகம்போஸர் ஒரு பாட்டிலின் விலை 20 ரூபாய். தேவைப்படும் பாட்டில்களின் அளவுக்கான தொகைக்கு ‘PAO, DAC Chennai’ என்ற பெயருக்கு வரைவோலை (டி.டி) எடுக்க வேண்டும்.

 பிறகு உங்களுடைய பெயர், முகவரியைக் குறிப்பிட்டு, பெங்களூருவில் உள்ள மையத்தின் முகவரிக்கு வரைவோலையை அனுப்பி வைத்தால், பாட்டில்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். மணியார்டர் மூலமாகவும் பணம் அனுப்பலாம். அஞ்சல் சேவைக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. இதைத்தவிர நேரடியாகவும் இம்மையத்துக்கு வந்து பாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம்.

Deputy Director,
Regional Centre of Organic Farming,
Kannamangala Cross,
Whitefield-Hosekote Road,
Kadugodi Post, Bangalore-560067
Mobile: +91 95455 20037
Telephone  080 28450503, 28450506. 
Website: biofkk06@nic.in,
Email: rcofbgl@gmail.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism