Published:Updated:

மாடியில் தோட்டம்... மருத்துவச்செலவு மிச்சம்!

மாடியில் தோட்டம்...  மருத்துவச்செலவு மிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
மாடியில் தோட்டம்... மருத்துவச்செலவு மிச்சம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: ஜெ.பரணிதரன்

மாடியில் தோட்டம்... மருத்துவச்செலவு மிச்சம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: ஜெ.பரணிதரன்

Published:Updated:
மாடியில் தோட்டம்...  மருத்துவச்செலவு மிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
மாடியில் தோட்டம்... மருத்துவச்செலவு மிச்சம்!

“மாடித்தோட்டம், உடம்புக்கும் மனசுக்கும் ஆரோக்கியமா இருக்கு. மாடித் தோட்டம் இருக்கிறதால, எப்பவும் பசுமையான காய்கறிகளைப் பறிச்சுச் சாப்பிட முடியுது. எங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைச்ச பிறகு, மருத்துவச்செலவு குறைஞ்சுடுச்சு” என்று சிலாகிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சுஜாதா ரவி.

பெசன்ட் நகர், கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது சுஜாதா ரவியின் வீடு. மொட்டைமாடியில் 250 தொட்டிகள் அமைத்துக் காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், மலர் வகைகள் என வளர்த்து வருகிறார் இவர். ஒரு மாலைவேளையில், செடிகளுடன் உறவாடிக் கொண்டிருந்த சுஜாதா ரவியைச் சந்தித்தோம்.

மாடியில் தோட்டம்...  மருத்துவச்செலவு மிச்சம்!

“முதல்ல பத்துத் தொட்டிகள் வெச்சு செம்பருத்திச் செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்திட்டுருந்தேன். 2015-ம் வருஷம், எனக்கு ‘ஓ.ஜி.எஃப் அமைப்பு’ (ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன்) அறிமுகமாச்சு. அது மூலமா மாடித்தோட்டம் அமைச்சுருக்குற நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சாங்க. அவங்ககிட்ட ஆலோசனைகள் கேட்டுதான் இந்தத் தோட்டம் அமைச்சேன். மாடித்தோட்டத்தால அந்த நண்பர்கள்லாம் ரொம்ப நெருக்கமாகிட்டாங்க. ஒவ்வொருத்தரும் போட்டிருக்கிற தோட்டங்கள் பத்தி நிறைய பேசுறோம். பல  தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துக்குறோம்” என்ற சுஜாதா ரவி தன்னுடைய மாடித்தோட்டத்தின் செடிகளைக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்....

“இன்னிக்கு காலையில செடிகளுக்குத் தண்ணீர்விட்டால், அடுத்த தண்ணீர் நாளைக்குச் சாயங்காலம்தான் கொடுப்பேன். தொட்டியில தேங்காய் நாரும், தொழுஉரமும் (கம்போஸ்ட்) இருக்குறதால, ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். பச்சை மிளகாய், கோவைக்காய், பாகற்காய், அவரை, மாதுளை, வாழை, ருத்திராட்சம், கத்திரி, தக்காளி, புதினா, உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், மூலிகைகள், கீரைகள், மலர்கள் என எல்லாமே இங்க இருக்கு. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் ஒதுக்கிச் செடிகளைப் பராமரிக்கிறேன். அதனால, உடம்பு ஆரோக்கியமா இருக்கு. செடிகளோட நேரம் செலவழிக்கிறப்போ மனசும் அமைதியாகிடுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடியில் தோட்டம்...  மருத்துவச்செலவு மிச்சம்!

எங்க ஓ.ஜி.எஃப் அமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு காய்கறி வகையில ஜூஸ் தயாரிச்சுக் குடிப்போம். அந்தக் காய் வீட்டுல விளைஞ்சதாத்தான் இருக்கும். தினமும் நாங்க குடிக்கிற ஜூஸ் பத்தி எங்களுக்கான வாட்ஸ்அப் குரூப்ல பகிர்ந்துக்குவோம். தோட்டத்துக்குத் தேவையான கம்போஸ்ட்டை நானே தயாரிச்சுக்குறேன். வேப்பெண்ணெய் கரைசல், வாழைப்பழத்தோல் பொடி, மரச்சாம்பல், தேமோர்க் கரைசல், இஞ்சிப் பூண்டுக் கரைசல், பால் பெருங்காயம்னு பயன்படுத்துறேன். அரிசி கழுவுற தண்ணியைக் கூடச் செடிகள்லதான் ஊத்துவேன்.

ஒவ்வொரு காய் வகைகள்லயும் எட்டுச் செடிகள் இருக்குறதால, எங்க குடும்பத்துக்குத் தேவையான காய்கள் தொடர்ந்து கிடைச்சுட்டே இருக்கு. எங்க மாடித்தோட்ட நண்பர்களுக்குள்ள நாட்டு விதைகளைப் பரிமாறிக்குறோம். உடம்புக்கு வர்ற சின்னச்சின்ன வியாதிகளுக்கு மூலிகைகளைப் பறிச்சுக் கஷாயம் போட்டுக் குடிச்சு சரிபண்ணிக்குவேன்” என்ற சுஜாதா ரவி நிறைவாக,

மாடியில் தோட்டம்...  மருத்துவச்செலவு மிச்சம்!

“நஞ்சான உணவைச் சாப்பிடுறதைத் தவிர்க்கணும்னா அதுக்கான முதல் படி மாடித்தோட்டம்தான். மாடித்தோட்டம் போட்டா தளம் வீணாகிடும்னு சொல்வாங்க. அது தவறான கருத்து. மாடித்தோட்டத்துல சரியான முறையில பாலித்தீன் ஷீட்டுகளைப் பயன்படுத்தினா தளத்துல தண்ணீர் தேங்காது” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism