Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 12-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 17-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 19-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 24, 25-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

தண்டோரா

கறவை மாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 3-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு, 10-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 17-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘காடை வளர்ப்புப் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04142 290249.


மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ‘சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 10-ம் தேதி ‘மீன் வளர்ப்பு’, 11-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 12-ம் தேதி ‘பப்பாளி மற்றும் ‘மா’வில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்’, 13-ம் தேதி ‘கோடைக்காலத்தில் கறவை மாடுகள் பராமரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288


காளான் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 4, 5 தேதிகளில் ‘காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’, 10, 11 தேதிகளில் ‘இயற்கை உரங்கள் உற்பத்தி’, 11, 12 தேதிகளில் ‘விஞ்ஞான முறையில் கறவை மாடு வளர்ப்பு’, 18, 19 தேதிகளில் ‘சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 24, 25 தேதிகளில் ‘கூண்டு முறையில் மீன் வளர்ப்பு’, 26, 27 தேதிகளில் ‘கால்நடை மற்றும் மீன் பண்ணைக்கான பண்ணைக் கருவிகள் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

தண்டோரா

கட்டணப் பயிற்சி

இயற்கைப் பூச்சிவிரட்டி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஏப்ரல் 7-ம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டி மற்றும் வளர்ச்சியூக்கித் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism