Published:Updated:

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!
பிரீமியம் ஸ்டோரி
நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

Published:Updated:
நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!
பிரீமியம் ஸ்டோரி
நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

ந்தமான்... சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்கலோகம். கடல் காதலர்களின் கனவுப் பிரதேசம். இயற்கைப்பிரியர்களின் இஷ்டபூமி. இப்படிப் பேரெழில் காட்டி நிற்கும் அந்தமான் தீவுகளில் தற்போது இயற்கை விவசாயமும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. ஆழிப்பேரலையால் வீணாகிப்போன நிலங்களையெல்லாம் மீட்டு, விவசாய நிலங்களாக, குறிப்பாக இயற்கை விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியில் அந்தமான் நிர்வாகமும், மத்திய வேளாண்மை ஆராய்ச்சி மையமும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நீல் தீவு என்ற ஒரு தீவுப்பகுதியை முழுமையாக இயற்கை விவசாயத்தீவாக அறிவித்திருக்கிறது அந்தமான் நிர்வாகம். இந்தியாவின் முழுமையான இயற்கை விவசாய மாநிலமாகச் சிக்கிம் திகழ்வதைப்போல, இந்தியாவின் முழுமையான இயற்கை விவசாயத் தீவாக மாறியிருக்கிறது நீல் தீவு.

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

அந்தமானில் இருக்கும் தீவுகளில் அழகானதும், அமைதியானதும் நீல் தீவுதான். போர்ட்பிளேரில் இருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது நீல் தீவு. அந்தமானில் மக்கள் வசிக்கும் தீவுகளிலேயே மிகவும் குட்டித்தீவு இது. ஆனால், இயற்கையின் பேரழகு, இத்தீவு முழுவதும் நிரம்பி வழிகிறது. சிப்பாய்க்கலகம் நடந்தபோது இந்தியர்கள் மீது கடுமையான அடக்குமுறை மேற்கொண்ட ஆங்கிலேய அதிகாரி, ‘ஜெனரல்’ ஜேம்ஸ் நீல் நினைவாக இந்தத்தீவுக்கு ‘நீல்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தமிழர்கள், பெங்காலிகள் அதிகமாக வசிக்கிறார்கள். 14 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இத்தீவைச் சுற்றிலும் கடலன்னை பாதுகாப்பு அரணாகக் காத்து நிற்கிறாள்.

சிறு தீவாக இருந்தாலும் இங்கு விவசாயம் சக்கைபோடு போடுகிறது. தென்னை, காய்கறிகள், நெல், பயறு வகைப் பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மற்ற தீவுகளோடு ஒப்பிடுகையில் இங்கு தென்னை விவசாயம் சற்றுக் குறைவுதான். இத்தீவில் உள்ள விவசாயிகள், இதுவரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்து வந்தார்கள். சிறிய தீவு என்பதால், நிலத்தில் கொட்டப்படும் ரசாயனங்களின் எச்சங்கள் கடல்நீரில் கலந்து வந்தன. இதனால், சுற்றுச்சூழல் சீரழிந்ததுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

இதை உணர்ந்துகொண்ட அந்தமான் நிர்வாகம், இத்தீவில் ரசாயனப் பயன்பாட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. அதனால், இதுவரை ரசாயன உரங்கள் பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு இடுபொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட, அதைச் சரிசெய்வதற்காகக் களம் இறங்கியது, ‘கேரி’ என்று அழைக்கப்படும் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம். இம்மையம், வேளாண்மை துறையுடன் இணைந்து, இயற்கை இடுபொருள்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!



தற்போது மண்புழு உரம் மற்றும் பயோ இடுபொருள்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், பயோ இடுபொருள்கள் என்ற பெயரில் கடைகளில் விற்பனையாகும் பொருள்களைத் தவிர்த்து, தேவையான இடுபொருள்களைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும் வகையில் பயிற்சி அளித்து வருகிறார்கள் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி வேல்முருகன் மற்றும் அவருடைய  குழுவினர்.

அதன் ஒரு கட்டமாக, முனைவர் வேல்முருகன், ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் கே. நடராஜன், இயற்கை விவசாயப் பயிற்றுநர் ‘விதைகள்’ யோகநாதன் ஆகியோரை நீல் தீவு விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்க அழைப்பு விடுத்திருந்தார். அவர்களோடு நாமும் இணைந்து கொண்டு ஓர் அதிகாலை வேளையில் நீல் தீவுக்குள் காலடி வைத்தோம்.

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

வெள்ளை வேஷ்டி, சட்டை நெற்றியில் பளீர் விபூதிப்பட்டை, தோளில் துண்டு என்ற கோலத்தில் வந்திருந்த நடராஜனை, ‘விவசாயச் சாமியார்’ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள், அத்தீவைச் சேர்ந்த விவசாயிகள். அங்கிருந்த விவசாயிகளிடம் நடராஜன் ஆங்கிலத்திலும், யோகநாதன் இந்தியிலும் உரையாட, உடனிருந்த வேளாண்துறையினர் அதைப் பெங்காலியில் மொழிபெயர்த்தனர். ‘நாங்கள் தற்போது முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டோம். தொழுவுரம், மண்புழு உரம், இலைதழைகள், பூச்சிவிரட்டி, சாம்பல் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். வளர்ச்சி ஊக்கிக்காக ஏதாவது கிடைத்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்’ என்றனர் அந்த விவசாயிகள்.

அவர்களில் சிலரின் விவசாய நிலங்களைப் பார்வையிட்ட பிறகு, முன்னோடி விவசாயிகள் சிலருக்குப் பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, அமுதக்கரைசல், தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம் போன்றவற்றைத் தயாரிக்கும் முறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்வமாகக் கேட்டுக்கொண்ட விவசாயிகள், உடனடியாகச் செயல்படுத்துவதாக ஒப்புக்கொண்டார்கள்.

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

நிறைவாக நம்மிடம் பேசிய மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி வேல்முருகன், “நீல் தீவில் முழுமையான இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது. தற்போது ரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான இயற்கை இடுபொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளே அவர்களுக்குத் தேவையான இடுபொருள்களைத் தயாரித்துக்கொள்ளும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது டாக்டர் நடராஜன், யோகநாதன் ஆகியோர் அளித்துள்ள பயிற்சிகள் பலனுள்ளதாக இருக்கும்.

இங்குள்ள விவசாயிகள், மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் அற்புதமான, அழகான தீவுகளில் ஒன்றாக இருக்கும் நீல் தீவிலிருந்து ரசாயனம் முற்றிலுமாகத் துடைத்தெரியப்பட்டுள்ளது. இயற்கையின் பரிசான இந்தத் தீவில் இனி, விவசாயம் இயற்கை வழியில் மட்டுமே நடக்கும். இங்குள்ள விவசாயிகளும் இயற்கை விவசாயம் செய்வதில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுகிறார்கள்” என்றார்.

‘‘காய்கறிகளைச் சாகுபடி செய்கிறோம்!

நம் ஊர்களில் ஊராட்சித்தலைவர்களைப் ‘பிரசிடெண்ட்’ என அழைப்பதுபோல, அங்கு

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

ஊராட்சித்தலைவர்களைப் ‘பிரதான்’ என அழைக்கிறார்கள். ஊராட்சியைப் பொறுத்தவரை சர்வ அதிகாரம் மிக்கவராக இருக்கிறார் பிரதான். நீல் தீவின் ‘முன்னாள் பிரதான்’ பீமோல் ராய், ஒரு இயற்கை விவசாயி. அவரைச் சந்தித்தோம். “எனக்கு மொத்தம் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. என் மனைவி இயற்கை விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இரண்டு மாடுகள் வைத்திருக்கிறோம். அதன் கழிவுகளை வைத்து ஜீவாமிர்தம் தயாரித்துப் பயிர்களுக்குக் கொடுத்து வருகிறோம். பெரும்பாலும் காய்கறிகளைத்தான் அதிகம் சாகுபடி செய்கிறோம்.

ஒரு காலத்தில் அதிக உரங்களைக் கொட்டிக்கொண்டு இருந்தோம். தற்போது எங்கள் தவற்றை உணர்ந்திருக்கிறோம். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறையும், கேரியும் ஆலோசனை வழங்கிவருகின்றன. இன்னும் சில மாதங்களில் நீல் தீவு முழுமையான இயற்கை விவசாயத் தீவாக இருக்கும்” என்றார் உறுதியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism