Published:Updated:

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?
பிரீமியம் ஸ்டோரி
உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

பட்ஜெட்கு.ராமகிருஷ்ணன் - படம்: கே.ஜெரோம்

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

பட்ஜெட்கு.ராமகிருஷ்ணன் - படம்: கே.ஜெரோம்

Published:Updated:
உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?
பிரீமியம் ஸ்டோரி
உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

டந்த மார்ச் 15-ம் தேதி, 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். அதில், வேளாண்மைத் துறைக்கு 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்றவை நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் 8,000 கோடி ரூபாய் அளவுக்குப் புதிதாகப் பயிர்க்கடன்கள் வழங்கப்படும். இந்த நிதியாண்டில் ஒருகோடியே பத்து லட்சம் டன் உணவுத் தானிய உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

சென்னை, கிண்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘அம்மா பசுமைப் பூங்கா’, ஓசூரில் மலர் வணிக வளாகம், கடலூர் மாவட்டம், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம், தோவாளையில் மலர் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும்’ என அறிவிப்புகளை அள்ளிவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இந்நிலையில், இவை விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சிலரிடம் பேசினோம்.

‘புலியூர்’ நாகராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகள் அணித்தலைவர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்: “தமிழக அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு மிகவும் குறைவான தொகைதான் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் என்பது, ஓர் ஏமாற்று அறிவிப்பு. பழைய கடன்களை முழுமையாக அடைத்தால்தான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் புதிய கடன் பெற முடியும் என்பது விதி. வறட்சியின் காரணமாக, விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிப் பழைய

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

விவசாயக்கடன்களையே அடைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்குப் புதிய பயிர்க்கடன் கிடைக்க வாய்ப்பே இல்லை. பழைய கடன்களைத் தமிழக அரசு இந்தப் பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யும் என்று பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை.

தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையில், குறிப்பிட்ட தொகையைத் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தோம். அதுகுறித்தும் எந்த அறிவிப்புமில்லை. அதேநேரத்தில், சர்க்கரை ஆலைகள் தங்களுடைய லாப நஷ்ட நிலவரத்தைப் பொறுத்து, கரும்புக்கு விலை கொடுக்கும். இதில் தமிழக அரசு தலையிடாது என்ற தொனியில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் மோசடியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உழவன் செயலி விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக்கூடிய திட்டம். அதேபோல, 500 இடங்களில் வேளாண் கருவிகள் வாடகை நிலையம், ஓசூர் மலர் வணிக வளாகம், தோவாளை மலர் பதப்படுத்தும் நிலையம் ஆகிய அறிவிப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் அதிகளவில் மலர்ச் சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளிலும் குளிர்பதனக்கிடங்கு மற்றும் பதப்படுத்தும் நிலையங்கள் வேண்டுமென விவசாயிகள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதை அரசு கண்டுகொள்ளவில்லை.”

சுகுமாறன், தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர்: “இந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் டன் உணவுத் தானிய உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லியிருப்பது, வெறும் கையால் முழம் போடுவது போல் உள்ளது. போதிய அளவு தண்ணீர் கிடைத்துக் குறுவை, சம்பாப் பட்டங்களில் நெல் சாகுபடி முழுமையாக

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

நடைபெற்றால்தான், நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்கில் 40 சதவிகிதத்தையாவது நெருங்க முடியும். காவிரித்தண்ணீரைப் பெறுவதற்குத் தமிழக அரசுக்குக் கொஞ்சம்கூடத் திராணி இல்லை. குறுவையை முற்றிலுமாக இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சம்பாவுக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. நிலத்தடிநீரைப் பயன்படுத்தவும் வாய்ப்பில்லை. கடந்த 18 ஆண்டுகளாக 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், மின் இணைப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். ‘தமிழ்நாடு மின்மிகு மாநிலம்’ என அமைச்சர்கள் பெருமை அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், விவசாயத்துக்கு முறையான மின்சாரம் கிடைப்பதில்லை. மின் இணைப்பு குறித்தும், மும்முனை மின்சார உத்தரவாதம் குறித்தும் பட்ஜெட்டில் சொல்லப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

உளுந்து, பச்சைப்பயறு, துவரைப் போன்றவற்றை அரசே கொள்முதல் செய்யும் என்பது பாராட்டுக்குரிய அறிவிப்பு. ஆனால், ஆண்டு முழுவதும் முறையாக இவற்றைக் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைப்பது தேவையற்ற ஒன்று. தமிழ்நாட்டில் மக்காச்சோள உற்பத்தி எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. இதனால், மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையத்தால் விவசாயிகளுக்குப் பலன் இருக்காது. தனியார் நிறுவனங்களுக்குத்தான் பலன் கிடைக்கும்” என்றார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism