Published:Updated:

மரம் வளர்க்க வேண்டுமா... வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

மரம் வளர்க்க வேண்டுமா...  வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!
பிரீமியம் ஸ்டோரி
மரம் வளர்க்க வேண்டுமா... வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

திட்டம்மு.ராஜேஷ் - படம்: வீ.சிவக்குமார், தே.அசோக்குமார்

மரம் வளர்க்க வேண்டுமா... வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

திட்டம்மு.ராஜேஷ் - படம்: வீ.சிவக்குமார், தே.அசோக்குமார்

Published:Updated:
மரம் வளர்க்க வேண்டுமா...  வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!
பிரீமியம் ஸ்டோரி
மரம் வளர்க்க வேண்டுமா... வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

ண்ணீர் பற்றாக்குறை, வேலையாள்கள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால், விவசாயிகள் பலரும் மரப்பயிர்ச் சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். ஆனால், உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் மரங்கள், அவற்றின் பராமரிப்பு முறைகள் குறித்த ஆலோசனைகளுக்காக விவசாயிகள் பெரிதும் அலைய வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் புதிதாக மரம் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, அனைத்துத் தகவல்களையும் விரல்நுனியில் கிடைக்குமாறு, ‘தமிழக மரக்களஞ்சியம்’ என்ற பெயரில், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், ஒரு புதிய செயலியை (ஆப்ஸ்) வெளியிட்டிருக்கிறது தமிழக வனத்துறை.

மரம் வளர்க்க வேண்டுமா...  வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

தேசிய வனக்கொள்கையின்படி 33 சதவிகித நிலப்பரப்பு, மரங்களைக் கொண்ட காடுகளாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 24.16 சதவிகித அளவு நிலப்பரப்பில்தான் மரங்கள் இருக்கின்றன. இப்பரப்பை அதிகரிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் ‘தமிழ்நாடு புதுமை முயற்சி திட்ட’த்தின் கீழ் இச்செயலி வெளியிடப்பட்டிருக்கிறது.

இச்செயலியை உருவாக்குவதற்கு அடிக்கோடிட்டவர் சுதா ராமன் (இ.வ.ப.). இவர், தற்போது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் இச்செயலி குறித்துப் பேசினோம்.

“நான், இந்திய வனப் பணி அதிகாரியாகத் தேர்வாகி, பயிற்சி பெற்ற காலக்கட்டத்தில், இதுபோன்ற ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்போதே சிறிய அளவில் முயற்சி செய்து பார்த்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரம் வளர்க்க வேண்டுமா...  வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!


நான் பணியில் சேர்ந்த பிறகு வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடம் என் எண்ணத்தைத் தெரிவித்தேன். அவரும் என்னை ஊக்குவித்தார். பிறகு தமிழ்நாடு திட்ட ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆணையம் அத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயலியை உருவாக்குவதற்காக 18.4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன் பிறகு ஓராண்டு காலம் பணிகளைச் செய்து இச்செயலியை உருவாக்கினோம். செயலி முழுவடிவம் பெற்றுக் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் போன்களில் இயங்கும் வகையில் செயலி வெளியிடப்படும்” என்ற சுதா ராமன் செயலி குறித்து விளக்கிச் சொன்னார்.

“தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் இச்செயலி வெளியிடப்பட்டதன் முக்கிய நோக்கம். இது விவசாயிகளுக்கும், மரம் வளர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சில வகை மர வகைகளைப் பற்றிதான் பெரும்பாலான விவசாயிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பெரும்பான்மையான இடங்களில் குறிப்பிட்ட சில வகை மரங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. அதைத்தவிர்த்து அனைத்து வகையான மரங்களைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வதற்காகவும் தோப்பாக வளர்ப்பதற்காகவும் பலவகை மரங்கள் பற்றிய தகவல்களை, இச்செயலியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதில் உள்நாட்டு மர இனங்கள் பற்றிய விவரமும் உள்ளது. மரங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டப் பல புத்தகங்களை ஆராய்ந்ததோடு, மர வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளையும் சந்தித்துத் தகவல்களைச் சேகரித்துள்ளோம். காடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் பட்டதாரிகள் எனப் பலரின் பங்களிப்பும் இச்செயலியின் உருவாக்கத்தில் இருக்கிறது.

மரம் வளர்க்க வேண்டுமா...  வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

இச்செயலியில் 150 மரங்களைப் பற்றிய தகவல்களும், வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலுள்ள உள்நாட்டு மர வகைகளுக்கான தகவல்கள்தான் தரப்பட்டுள்ளன. இந்தச் செயலியில் அவரவர் தேவைக்கு, மண் வகைக்குத் தகுந்தவாறு மரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு விறகு மற்றும் தீவனத் தேவைக்கான மரங்களைப் பற்றிய தகவல்கள் தேவைப்படுகிறது என்றால், அதற்குரிய பகுதியைத் தேர்வு செய்து விவரங்களைப் பெற முடியும். மரங்களுக்கான வாழிடம், வளரியல்பு, பண்பு, சாதகமான சூழல் நிலைமைகள், மரம் வளர்ப்பு வழிமுறைகள், பயன்கள் மற்றும் சந்தை விவரங்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எனத் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. அதனால், அம்மாவட்டத்தின் தட்ப வெப்பநிலை, மண் வகை முதலியவற்றின் அடிப்படையில் மர வகைகளை எளிதாகத் தேர்வு செய்ய முடியும். ‘பண்ணைக் கணக்கீடு’ பகுதியில் மரங்களின் கன அளவைக் கண்டு பிடித்தல் மற்றும் எடுக்க வேண்டிய குழிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் கணக்கிட்டுக் கொள்ள முடியும்” என்ற சுதா ராமன் நிறைவாக,

“தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இச்செயலியை அறிமுகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்களை ஒவ்வொரு கட்டங்களாக நடத்திவருகிறோம். மரம் வளர்ப்புக்காகத் தனியாக ஓர் இணையதளமும் இருக்கிறது. அதிலும் மர வளர்ப்புத் தொடர்பான தகவல்களைப் பெற முடியும். இச்செயலியிலுள்ள தகவல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்படும். விவசாயிகள் இச்செயலியை உபயோகித்துப் பலனடைய வேண்டும்” என்றார்.

செயலியைத் தரவிறக்கம் செய்ய: http://bit.ly/2FSmLUg

மரம் வளர்க்க வேண்டுமா...  வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism