பிரீமியம் ஸ்டோரி

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

மதிப்புக்கூட்டிய பால்

சென்னை, கொடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏப்ரல் 26-ம் தேதி ‘மதிப்புக்கூட்டிய பால் பொருள்கள் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94451 99034.

கால்நடை வைத்தியம்


தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மையத்தில், ஏப்ரல் 14 முதல் 17-ம் தேதி வரை ‘பாரம்பர்ய தமிழ்நாட்டு வைத்தியர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது. மூலிகை மருத்துவம், கால்நடை வைத்தியம், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்து வல்லுநர்கள் உரையாற்றவுள்ளனர். தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98424 70586, 97880 46457

நன்னீர் வண்ண மீன் வளர்ப்பு


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையத்தில் ஏப்ரல் மாதத்தில் மூன்று நாள்கள் ‘நன்னீர் வண்ண மீன் வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்குத் தினப்படி, மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 286107 .


அலங்கார மீன் வளர்ப்பு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 17-ம் தேதி ‘செம்மறியாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புப் முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 17-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 19-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 24, 25-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716. 

தண்டோரா

காடை வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 17-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 18, 19 தேதிகளில் ‘சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 24, 25 தேதிகளில் ‘கூண்டு முறையில் மீன் வளர்ப்பு’, 26, 27 தேதிகளில் ‘கால்நடை மற்றும் மீன் பண்ணைக்கான பண்ணைக் கருவிகள் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஏப்ரல் 19-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 25-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய்.

தொடர்புக்கு: திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு.

தொலைபேசி: 04285 241626.


ஒருங்கிணைந்த பண்ணையம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப் பண்ணையில் ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ.450. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 98424 33187, 0431 2331879.

மண்புழு உரம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஏப்ரல் 28-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு