மத்திய அரசு 2018-ம் ஆண்டைத் தேசிய சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதனால், சிறுதானியங்களின் பற்றிய கலந்துரையாடல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. உலக அளவில் கினோவா என்கிற தானியம் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதேயளவுக்குச் சத்துகள் கொண்ட இந்தியாவின் கேழ்வரகு, தினை ஆகிய தானியங்களைப் பரவலாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல்(ரோம்), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகிய அமைப்புகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க சிறுதானியங்கள் அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால், இந்திய அரசும் தேசிய சிறுதானிய இயக்கத்தைத் தொடங்கி, அதை மேலும் பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஓங்கி ஒலித்தன.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ‘சிறுதானியங்கள், பருவகாலமும் விற்பனையும்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 13-17-ம் தேதி வரை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள், வல்லுநர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மூத்த விஞ்ஞானி ஸ்டிபனோ படுலோசி, “சிறுதானியத்துக்கென்று தேசிய அளவில் அதிகாரமிக்க ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும். அந்த கமிட்டி மூலம் சிறுதானிய பயன்பாட்டின் அவசியம், அதைப் பயன்படுத்துபவர்களுடைய அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு சிறுதானியத்துக்கு ஒரு நல்ல தளத்தை உருவாக்க வேண்டும்” என்றார். இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் விலாஸ் தொனபி, “மத்திய அரசு ஏற்கெனவே சிறுதானிய கொள்கையை அறிவித்துச் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறுதானியங்களின் சாகுபடி, மதிப்புக்கூட்டல், விற்பனை, பயன்பாடு என அனைத்துத் தளங்களுக்கும் உதவி வருகிறது. எதிர்வரும் காலத்தில் மதிய உணவுத் திட்டம், பொதுவிநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் சிறுதானியங்களின் பயன்பாட்டைப் பெருக்க, சிறுதானிய கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது” என்றார்.

“இன்று பிரதான உணவாக அரிசி, கோதுமை உள்ளது. இதற்கு மாற்றாகத் துணை உணவாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் ஃபுட் என்றால் அது சிறுதானியங்களாகத்தான் இருக்கும். அதற்கு இப்போதே குழந்தைகள் விரும்பும் அனைத்து உணவு வகைகளிலும் சிறுதானியங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று சூப்பர் மார்க்கெட்களிலும், உணவகங்களிலும் சிறுதானியத்துக்கென்று தனிப்பிரிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆரோக்கியமான உணவின் வரிசையில் சிறுதானியங்கள் முக்கியமான இடத்தை வகிக்கும்” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.