அன்றாடச் சமையலில் கட்டாயம் இடம்பிடிக்கும் ஒரு பொருள் மிளகாய். பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், மிளகாய்ப்பொடி எனப் பலவகைகளில் உணவுத் தயாரிப்பில் பயன்படுகிறது. அதனால், சந்தையில் நல்ல விற்பனை வாய்ப்பு மிளகாய்க்கு உண்டென்றாலும், தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிளகாய்ச் சாகுபடி இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் ஆங்காங்கு சில விவசாயிகள் மிளகாய்ச் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராகத் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள வீரப்புடையான் பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜேம்ஸ் ராஜ், இயற்கை முறையில் மிளகாய்ச் சாகுபடி செய்து சத்தான வருமானம் ஈட்டி வருகிறார்.

ஒரு பகல்பொழுதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஜேம்ஸ் ராஜைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

“இது மணப்பாறைப் பகுதியைச் சேர்ந்த நாட்டு ரக மிளகாய். இயற்கை முறையில் சாகுபடி செய்றதால, சொத்தைக்காயே இல்லை. நல்லா விதைக்கட்டா, பருமனான காம்புகளோடு இருக்கு. காரமும் சுள்ளுனு இருக்கு. இதைப் பயன்படுத்திப் பார்த்தவங்க, எங்க வீட்டுக்கே தேடிவந்து வாங்கிக்கிட்டு போறாங்க” என்று மிளகாயின் பெருமை கூறியவர் தொடர்ந்தார்...

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. போர்வெல் மூலம்தான் பாசனம். செம்மண் பூமிங்கிறதால, ஒரு ஏக்கர் நிலத்துல நாட்டு மிளகாயும், ஒரு ஏக்கர் நிலத்துல விரிச்சி பூவும் சாகுபடி செஞ்சுட்டிருக்கேன். தச்சங்குறிச்சி, செல்லப்பன்பேட்டை, வைரபெருமாள்பட்டி, குருமூண்டினு எங்க ஊரைச்சுத்தி இருக்கிற கிராமங்கள்ல இருபது வருஷத்துக்கு முன்னாடியே மிளகாய்ச் சாகுபடி செழிப்பா நடந்திட்டிருந்துச்சு.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு சாகுபடி பண்றதுக்கான செலவு அதிகரிச்சுட்டே போனதால, பலபேர் மிளகாய்ச் சாகுபடியைக் கைவிட்டுட்டாங்க. ஆனா, நான் லாபம் குறைஞ்சாலும் பரவாயில்லைனு விடாம மிளகாயைச் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். ரசாயன உரம் போட்டாலும், ஆட்டுக்கிடையையும் அடைச்சு சாகுபடி செஞ்சதால சமாளிக்க முடிஞ்சது. கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரப்பயன்பாட்டைக் குறைச்சு... இப்போ முழு இயற்கைக்கு மாறிட்டேன். இயற்கை முறையில நல்ல விளைச்சல் கிடைச்சுட்டிருக்கு. பூச்சிகள், நோய்கள் தாக்குதலும் அவ்வளவா இல்லை” என்ற ஜேம்ஸ் ராஜ் வருமானம் குறித்துச் சொன்னார்.

“நடவு செஞ்சு இப்போ 129 (18.04.18 அன்று) நாளாகுது. 65-ம் நாள்ல காய்ப்புக்கு வந்துடுச்சு. ஆனா, காய வெச்சு மிளகாய் வற்றலா விற்பனை செய்யலாம்னு முடிவு பண்ணிட்டதால, செடியிலேயே பழுக்க விட்டுட்டேன். 85-ம் நாள் முதல் பறிப்பா பறிச்சதுல 40 கிலோ பழம் கிடைச்சது. அதை வெயில்ல காய வெச்சப்போ, 30 கிலோ மிளகாய் வற்றல் (காய்ந்த மிளகாய்) கிடைச்சது. 105-ம் நாள்ல ஒரு பறிப்பு, 125-ம் நாள்ல ஒரு பறிப்புனு பறிச்சுக் காய வெச்சதுல, மொத்தம் 220 கிலோ மிளகாய் வற்றல் கிடைச்சது. இதுவரை 250 கிலோ மிளகாய் வற்றல் கிடைச்சுருக்கு. அதைக் கிலோ 110 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 27,500 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு.

இதுவரை உழவுல இருந்து அறுவடை வரை 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியிருக்கு. அதுபோக, 7,500 ரூபாய் லாபமா நின்னுருக்கு. இன்னும் நாலஞ்சு மாசத்துக்கு மகசூல் கிடைக்கும். குறைஞ்சபட்சமா 400 கிலோவுக்கு மேல மிளகாய் வற்றல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அதுமூலமா 44,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இதுக்கு இடுபொருள், அறுவடை எல்லாம் சேர்த்து 5,000 ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். எப்படியும் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைச்சுடும். ஆக, ஒரு ஏக்கர் மிளகாய்ல இருந்து 46 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று சொன்னவர், கை நிறைய மிளகாயை அள்ளிக்காட்டினார்.

தொடர்புக்கு, ஜேம்ஸ் ராஜ்,
செல்போன்: 97870 59060

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் மிளகாய்ச் சாகுபடி செய்வது குறித்து ஜேம்ஸ் ராஜ் சொன்ன விஷயங்கள் இங்கே...

மிளகாய்ச் சாகுபடி செய்ய வடிகால் வசதியுடைய மேட்டு நிலம்தான் ஏற்றது. தேர்வுசெய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஆட்டுக்கிடை அடைக்க வேண்டும். பிறகு 4 சால் உழவு ஓட்டி, இரண்டரையடி அகலத்தில் பார் அமைக்க வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் 2 அடி இடைவெளியில் குத்துக்கு ஒரு மிளகாய் நாற்று என நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்ய 40 நாள்கள் வயதுடைய நாற்றுகள் ஏற்றவை. தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

நடவுசெய்த 16-ம் நாள் களையெடுக்க வேண்டும். பூச்சித்தாக்குதலைத் தவிர்ப்பதற்காக 35-ம் நாள் நிலத்தில் 6 இடங்களில் மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகளை வைக்க வேண்டும். 40, 60 மற்றும் 80-ம் நாள்களில் 2 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் இ.எம் திரவம் ஆகியவற்றை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மோரை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 100-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் இ.எம் திரவம், 500 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 125-ம் நாளிலிருந்து அறுவடை வரை 25 நாள்களுக்கு ஒருமுறை... 2 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் இ.எம் திரவம், 750 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.