தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வக மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டம் - விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்கீழ் அடுத்தடுத்த மாதங்களில் அறுவடை செய்யப்படும் பச்சைப்பயறு, உளுந்து ஆகியவற்றுக்குக் கிடைக்கும் விலைநிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பச்சைப்பயறு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2,38,000 ஹெக்டேர் பரப்பில் பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. இதன்மூலம் 1,25,000 டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. கோ-6, கோ-7, கோ-8 மற்றும் வம்பன்-3 ஆகிய பச்சைப்பயறு ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், திருவள்ளூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பச்சைப்பயறுச் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 16 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய பச்சைப்பயறு விலை நிலவரம் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதில், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யப்படும்போது... தரமான பச்சைப்பயறுக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 48 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், உளுந்து அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உளுந்து பயிரிடப்படுகிறது. அதன் மூலம் 2,50,000 டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் உளுந்துச் சாகுபடி செய்யப்படுகிறது. ஏ.டி.டீ-3 (ADT), ஏ.டி.டீ-4, ஏ.டி.டீ-5, கே.கே.எம்-1, கோ-6, வம்பன்-5 மற்றும் 6 ஆகிய உளுந்து ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

வர்த்தக மூலங்களின்படி, வழக்கமான பயிர் பரப்பளவைவிட அதிகம் இருந்தும், மஞ்சள் தேமல் நோய் காரணமாக முக்கியப் பகுதிகளில் உளுந்து உற்பத்தி குறைந்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய உளுந்து விலை நிலவரம் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதில், ஏப்ரல்-மே மாதத்தில் அறுவடை செய்யப்படும்போது... தரமான உளுந்துக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 45 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி: 0422 2431405