வேத காலங்களில் இருந்தே பசுவைத் தெய்வீக விலங்காகக் கருதி வருவதால், நம் நாட்டில் பல கோயில்களில் கோசாலைகள் அமைக்கப்பட்டுப் பசுக்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

இப்படி அமைக்கப்பட்டுள்ள பல கோசாலைகளில்... பஞ்சகவ்யா, விபூதி, அர்க் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலான கோசாலைகளில் நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் எனக் கலந்து பராமரிக்கப்படும் சூழ்நிலையில்... நம் பாரம்பர்ய மாடுகளான உம்பளச்சேரி இன மாடுகளுக்கு மட்டுமென ‘அருந்ததி கோசாலை’ என்ற பெயரில் ஒரு பிரத்யேகமான கோசாலை அமைக்கப் பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள விஷ்ணுபுரம் பகுதியில், இக் கோசாலையை நடத்தி வருகிறார்கள் சரவணன்-அல்லிராணி தம்பதி. ஒரு காலைவேளையில் கோசாலையைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம்.

“எங்க தாத்தா காலத்தில் நிறைய மாடுகள் வளர்த்தாங்க. அப்பா காலத்துல மாடுகளைப் பராமரிக்க முடியாம எல்லாத்தையும் வித்துப் புட்டாங்க. நான், சென்னை, திருப்பூர்னு பல ஊர்கள்ல வேலை

பார்த்தேன். ஆனாலும், அடிமனசுல மாடுகளை வளர்க்கிற ஆசை எப்பவும் இருந்துகிட்டே இருந்துச்சு. மாடு வளர்ப்புல இறங்கலாம்னு முடிவு பண்ணி வேலையை விட்டுட்டு சொந்த ஊர் திரும்பினேன். நானும் என் மனைவியும் ஒரு கோசாலையில் வேலைக்குச் சேர்ந்தோம். அங்க கிடைச்ச அனுபவத்தை வெச்சுப் பண்ணை துவங்குறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சோம். அதுக்கான ஆலோசனை கேட்டு சென்னையில இருக்கிற ‘பசு’ ராகவன் ஐயாகிட்டப் பேசினோம். அவர்தான் 5 உம்பளச்சேரி மாடுகளைக் கொடுத்து, ‘கலப்பு இல்லாம இந்த வகை நாட்டுமாடுகளை மட்டும் வளர்க்கணும். மாடுகளோட சாணத்திலிருந்து தயாரிக்கிற திருநீறு, வறட்டி, சாண உருண்டை எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கிறோம்’னு சொன்னார். மூணு வருஷத்துக்கு முன்னாடி, அந்த அஞ்சு பசு மாடுகளை வெச்சு கோசாலையை ஆரம்பிச்சோம். இப்போ மொத்தம் 25 மாடுகள் இருக்கு. நாங்க பசு மாடுகளைத் தெய்வமாத்தான் நினைக்கிறோம்” என்ற சரவணனைத் தொடர்ந்து பேசினார் அல்லிராணி.

“நாங்க இந்தப்பசுக்கள்ல இருந்து அதிகமா பால் கறக்கிறதில்லை. பெரும்பகுதி பாலைக் கன்றுகளுக்கே விட்டுடுவோம். மாடுகளோட சாணத்திலிருந்து திருநீறு, வறட்டி, சாண உருண்டைனு தயாரிக்கிறோம். திருநீறை நிறைய பேர் விரும்பி வாங்குறாங்க. வறட்டியை ஹோமத்துக்காக வாங்குறாங்க. இந்த உம்பளச்சேரி வகைப் பசுக்களோட பால்ல இருந்து கிடைக்கிற தயிர், நெய் சேர்த்துப் பஞ்சகவ்யா தயாரிக்கிறோம். அதுவும் நல்லா விற்பனையாகுது. மாட்டுச் சிறுநீரையும் தனியா விற்பனை செய்றோம். இதையெல்லாம் விற்பனை செஞ்சு அதன் மூலமாகக் கிடைக்கிற வருமானத்துலதான் பண்ணைப் பராமரிப்பையும், எங்க குடும்பச் செலவையும் பார்த்துக்குறோம்” என்றார்.

அருந்ததி கோசாலைக்கு ஆலோசகராய் இருப்பவர், மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சின்னதுரை. “பசுவின் குளம்படி பட்டு எழும் தூசி மனிதர்கள்மீது பட்டால், அது சர்வரோக நிவாரணியாகச் செயல்படும் எனப் பாகவதம் சொல்கிறது.

பசுக்களுக்கு மரியாதை கொடுப்பது, அவற்றுக்கு உணவு கொடுப்பது போன்றவை புண்ணியம் தரும் செயல்கள். பசுவுக்குக் கைங்கர்யம் செய்வது பெற்ற தாய்க்குச் செய்வதற்கு ஒப்பாகும். அந்த வகையில்தான் இந்தக் கோசாலை செயல்படுகிறது. இங்கு இறந்து போகிற மாடுகளைச் சிறப்பாக நல்லடக்கம் செய்கிறோம். நன்மைகள் பல நிறைந்த நாட்டுப்பசுக்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும்” என்றார் சின்னத்துரை.

தொடர்புக்கு, சரவணன்,
செல்போன்: 94422 73194

திருநீறு தயாரிப்பு

மாட்டுச்சாணத்திலிருந்து குப்பை, வைக்கோல் ஆகியவற்றை அகற்றிச் சுத்தப்படுத்தி வறட்டியாகத் தட்டிக் காய வைக்க வேண்டும். 10 மூட்டை வரட்டிக்கு, 10 மூட்டை நெல் பதர் எனக் கலந்து சூளை போல மெழுக வேண்டும். பௌர்ணமி தினத்தன்று திருநீற்றுப் பச்சிலை, நாணல் ஆகியவற்றைப் போட்டுக் கற்பூரத்தால் எரியூட்ட வேண்டும். 3 நாள்கள் கழித்து வறட்டியை எடுத்து அரைத்தால் திருநீறு கிடைத்துவிடும்.