சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கரும்பு, வாழை, மஞ்சள் என முப்போகம் விளையக்கூடிய நன்செய் நிலங்கள் 570 ஏக்கரைக் கையகப்படுத்த இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தற்கொலை செய்தாவது விளைநிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம், காமலாபுரம் விமான நிலையத்திற்காக ஏற்கெனவே 1989-ம் ஆண்டு 165 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திக் கடந்த 30 ஆண்டுகளாக விமானச் சேவை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் ட்ரூஜெட் என்ற விமானச் சேவையைத் தொடங்கி வைத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 570 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த களத்தில் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இதில் காமலாபுரம், பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி என 4 பஞ்சாயத்துகளில் உள்ள கொண்டையனூர், பம்பரம்பட்டியூர், சட்டூர், குப்பூர், காட்டூர், கோலனூர், குருவிரெட்டியூர், சானார் தெரு, பங்காட்டூர் எனப் பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் பாதிக்கப்பட இருக்கிறது.

நிலங்களைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளும், சேலம் ஏர்போர்ட் விரிவாக்க எதிர்ப்பு இயக்கம் (SAVE) என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் போராட்ட களத்தை அமைத்து, அரசு அதிகாரிகளை விளைநிலத்திற்குள் காலடி எடுத்து வைக்காத அளவுக்குப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட இருக்கும் விவசாயி பொன்னுசாமியிடம் பேசினோம். “என்னோட ஊரு தும்பிப்பாடி பஞ்சாயத்து குருவிரெட்டியூர். எனக்குச் சொந்தமாக ஆறரை ஏக்கர் கரும்பு, வாழை, நெல் விளையக்கூடிய நன்செய் நிலம் இருக்குது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக எடுக்கப்போற 570 ஏக்கரும் கரும்பு, நெல், மஞ்சள், பாக்குனு விளையகூடிய அற்புதமான பூமி. வருடம் முழுசும் தண்ணீர் பிரச்னையே இல்லாத பகுதிங்க. மேட்டூர் அணையே வறண்டாலும் இந்தப் பகுதியில வறட்சி வராது. இங்க நாகலூர் ஏரி, காமலாபுரம் ஏரி, அதையொட்டி ஓடைகள், வாய்க்கால்கள் எனச் செல்வசெழிப்பாக இருக்குது.

இந்தப்பகுதி குன்றுகளும், நீர்நிலைகளும் நிறைய உள்ள பகுதி. இதைக் கூகுள் மேப்பில் போட்டு பார்த்தாகூட தெரியும். கரும்பு நட்டா ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரமும், மஞ்சள் நட்டா ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு 2 லட்சமும் கிடைக்கும். இந்தச் சுற்றுவட்டார பகுதி முழுசும் பணப்பயிர்கள் விளையக்கூடியது. இப்படிப்பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்துறதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்க உயிரைக் கொடுத்தாவது நிலம் கையகப் படுத்துறதைத் தடுத்து நிறுத்துவோம்’’ என்றார்.

சின்னவள்ளியானூரை சேர்ந்த விவசாயி சுகுமார், ‘‘நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு விவசாயம் செய்றேன். கோடைக்காலத்திலும் எங்க கிணத்துல தண்ணி இருக்கும். இந்த பகுதியில ஆடு, மாடு, கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு, கரும்பு ஆலைகள்னு பல தொழில்கள் நடக்குது. இந்த கிராமத்து மக்கள், வெளியில எங்கும் வேலைக்கு போகமாட்டாங்க. அந்தளவுக்கு விவசாயம் இங்க வேலை கொடுத்திட்டிருக்கு. நிலத்தைக் கையகப்படுத்த நினைக்கிறவங்க, ஒருமுறை எங்க பகுதிக்கு நேர்ல வந்து பார்த்துட்டு, மனசாட்சிபடி முடிவு எடுக்கட்டும்....’’ என ஆதங்கப்பட்டார்.

விமான விரிவாக்கம் தொடர்பாக சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் கேட்டதற்கு, “விமான நிலையம் எங்கு இருக்கிறதோ, அதையொட்டிதான் விரிவாக்கம் செய்ய முடியும். விவசாய நிலங்களுக்கு அதிகப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும், விவசாய நிலத்தில் உள்ள வீடு, மரங்கள், கிணறுகள் ஆகியவைகளுக்கு தனித்தனியே அதிகப்படியான தொகை வழங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். விமான நிலைய வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 90 சதவிகித விவசாயிகள், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களைக் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி பெரும்பான்மையானோர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்’’ என்றார்.

எப்படியோ விமான விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களைக் காவு வாங்காமல் இருந்தால் சரி...