‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனிதக் குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

‘தென்னை மரத்தில் காய்க்கும் தேங்காய் யாருக்குச் சொந்தம்’ என்று கேட்டால், அதை வளர்க்கிறவங்களுக்குத்தான் சொந்தம்’ என்று பலரும் சொல்வார்கள். ஆனால், தென்னை மரம் வேரூன்றியுள்ள மண்ணுக்கும் அந்தத் தேங்காயின்மீது சொந்தம் கொண்டாட உரிமையுண்டு. ‘அதெப்படி’ என்று கேட்கிறீர்களா, தென்னைக்கு ஊட்டமளிப்பது மண்தானே. அப்படியிருக்கும்போது மண்ணுக்குத் தேங்காயின்மீது உரிமையில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

பறிக்காமல் மரத்தில் முற்றிய தேங்காய் கீழே விழுந்து உடைகிறது. உள்ளிருக்கும் தேங்காய் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. தேங்காய்மட்டை தண்ணீரை இருத்தி வைத்து நுண்ணுயிர்கள் வளர ஏதுவான சூழலை உருவாக்குகிறது. பிறகு அந்த மட்டை நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டு, மட்காக மாறுகிறது. அந்த மட்கு மண்ணை வளப்படுத்துகிறது. இப்போது சொல்லுங்கள்... தென்னைக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து மட்டைகள் மற்றும் தேங்காய் ஆகியவற்றால் வளமடையும் மண்ணுக்குத் தேங்காயின்மீது உரிமை உண்டுதானே. எதைக் கொடுக்கிறோமோ, அதுவே திரும்பக் கிடைக்கிறது. மண் எதிர்பாராமல் செய்த உதவிக்குத் தென்னை பதிலுதவி செய்கிறது. இப்படித் தென்னை புரிந்து வைத்திருக்கும் இயற்கையின் மகத்தான இந்த விதியை, நாம் புரிந்துகொண்டுள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் பதில். நாம் உண்ண உணவு கொடுக்கும் மண்ணுக்கு நாம் செய்கிற கைம்மாறு என்ன என்று யோசியுங்கள்.

இந்த விஷயத்தைச் சொல்லும்போது, எனக்கு உருது மொழியிலுள்ள கஜல் பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ள வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. வட மாநிலங்களில் நடக்கும் கூட்டங்களில் பேசும்போது, இந்த வரிகளை நான் மேற்கோள் காட்டுவதுண்டு.

‘கருணை ஏதும் காட்டாதீர்கள்
என்னிடம்...
அதுவே நீங்கள் காட்டும் பெருங்கருணை!
நீங்கள் கருணைகாட்ட விரும்பினால்
தயவு செய்து
என்னை வாழவிடுங்கள்!’ - என்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த அந்த வரிகள். செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட மண்ணின் குரலாய் பொருந்தி ஒலிக்கின்றன, இந்த வரிகள்.

மண்ணை வாழவைக்க, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் வளர ஏதுவான சூழலை உருவாக்கினாலே போதும். அதாவது நுண்ணுயிர்களுக்கு உணவளிக்க வேண்டும். இலை, தழைகள், சாணம், எரு, விலங்குக்கழிவுகள் போன்ற கரிமப் பொருள்களை (Organic Matter) அதிகம் கொடுக்கக் கொடுக்க, நுண்ணுயிர்கள் செயல்படத்தொடங்கி மண்ணில் மட்கு அதிகமாகும். அதனால், மண் நலம் அதிகரிக்கும்.

மண்ணின் வளத்துக்கும், நுண்ணூட்டச் சுழற்சிக்கும் ஏராளமான நுண்ணிய முதுகெலும்பற்ற மண் உயிர்கள் பங்காற்றினாலும்... கறையானும், மண்புழுக்களும் அவற்றில் தனித்து நிற்கின்றன. குறிப்பாக, ‘மண்ணின் நாடி மண்புழு’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு, மண்புழுக்களின் பங்கு, மண் நலனில் மிக முக்கியமானதாக இருக்கிறது.

மண்ணில் வசிக்கும் மண்புழுக்கள், தங்களின் இயல்பான இயக்கத்தால்... மண்ணின் பௌதீக, ரசாயன மாற்றத்துக்குக் காரணமாகின்றன. இதனால், மண்வளம் அதிகரித்து, பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மண்புழுவின் கழிவான மண்புழுக்கட்டிகள் ஏராளமான நுண்ணுயிர்கள் வசிக்கும் இல்லங்களாக மாறுகின்றன.

மண்புழுக்கள் உள்ள மண்... பாக்டீரியா, பூஞ்சைகள், ஒருசெல் உயிரினங்கள், பூச்சிகள், சிலந்திகள், மரவட்டைகள் உள்படப் பல உயிரினங்கள் ஆரோக்கியமாக வாழ ஏதுவாக இருக்கிறது. அதனால்தான் மண்புழுக்கள் இருந்தாலே மண்ணின் சூழல் நன்றாக உள்ளது என்றும், மண் நலமாக உள்ளது என்றும் கூறுகிறேன்.

பூமியின் வரலாற்றில், தொடக்கக் காலத்திலேயே உருவாகிவிட்டதாகக் கருதப்படும் மண்புழுக்கள், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மண்ணை உழுது, நுண்ணூட்டங்களின் சுழற்சிக்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளன. மண்புழுக்கள் வளமான மண்ணை உருவாக்குவதால்தான், மனிதகுலம் தழைத்து வருகிறது. இப்படி மண் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடும் மண்புழுக்களுக்கு, நாம் எந்த விருதையும் கொடுத்துக் கௌரவிக்க வேண்டாம். அந்தக் கஜல் பாடலில் சொன்னதுபோல, அவற்றை வாழவிட்டாலே போதும். அதற்கு மண்புழுக்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோமோ, அதனடிப்படை யிலேயே அதற்கு முக்கியத்துவம் தருவோம். மண்புழுவை நாம் எப்படிப் புரிந்து வைத்துள்ளோம்? பொதுவாக அனைவரும் அதைப் புழு வகையைச் சார்ந்த ஓர் உயிரினம் என்றுதான் பார்ப்போம். விலங்கியல் மாணவருக்கு, அதை அறுத்துப் பார்க்கப் பயன்படும் ஓர் உயிரினம். மீன் பிடிப்பவருக்கோ அது தூண்டிலில் மாட்டப் பயன்படும் மீன்களுக்கான இரை. உண்மையில் மண்புழுவைப் பற்றி நாம் புரிந்து வைத்துள்ளது, மிகக் குறைவுதான். குறிப்பாக, உழுவதற்கு டிராக்டரையும், உரத்துக்கு ரசாயனங்களையும் நம்பியுள்ள நவீன விவசாயி... எந்தப் பணமும் வாங்காமல், பாடுபட்டு மண்ணை உழுது வளப்படுத்தி வைக்கும் மண்புழுவைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் இருப்பது, இன்றைய வேளாண்மையின் அறியாமைதான்.

‘பேரறிஞர்’ அரிஸ்டாட்டில், ‘பூமியின் குடல்கள்’ என்று மண்புழுக்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட்ட சார்லஸ் டார்வின், 1881-ம் ஆண்டிலேயே மண்புழுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து... ‘மண்ணில் இறந்து கிடக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைச் சிதைப்பதிலும், மண் அமைப்பைப் பராமரிப்பதிலும், மண்ணுக்குள் காற்றோட்டத்தை உருவாக்குவதிலும், மண் வளத்தைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன’ என்று நிரூபித்தார். அவருக்குப் பிறகும் மண்புழுக்கள் குறித்து ஏராளமான ஆய்வுகள் இன்று வரை நடந்து வருகின்றன.

மண்புழுக்கள் செய்யும் பணிகளைப் பொறுத்து அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல்மட்டப் புழுக்கள் (Epigeics), நடுமட்டப் புழுக்கள் (Anecics) மற்றும் அடிமட்டப் புழுக்கள் (Endogeics) என்பதே அந்த வகைப்பாடு.

மேல்மட்டம் மற்றும் நடுமட்டம், நடுமட்டம் மற்றும் அடிமட்டம், மேல்மட்டம் மற்றும் அடிமட்டம் ஆகிய மண்பகுதிகளுக்கு இடையிலும் மண்புழுக்கள் இருக்கலாம். ஆனால், மண்புழுக்களின் வேலைகளை நாம் எளிதில் புரிந்துகொள்ள மூன்று முக்கிய வகைப்பாடுகளை மனதில் கொண்டாலே போதுமானது.

நல்ல வளமுள்ள, மூடாக்குள்ள மண்ணின் மேற்பரப்பில் காணப்படும் மண்புழுக்கள் மேல்மட்டப் புழுக்களாகும். சாணி அள்ளும்போது அதிலிருந்து சிறிய சிவப்புப் புழுக்கள் ஓடுவதைப் பார்த்திருப்போம், அவைதான் மேல்மட்ட மண்புழுக்கள். இவைதான் உயிர்மக் கழிவுகளை எருவாக மாற்றும் வேலையைச் செய்கின்றன. இரண்டாவதாக உள்ளவை நடுமட்டப் புழுக்கள்.

இவை செங்குத்தாகச் செயல்படக்கூடியவை. இவை மண்ணில் மேலும், கீழுமாகத் தொடர்ந்து பயணப்பட்டுக் காற்றோட்டத்தையும், மண்ணில் நீர் இறங்குவதையும் உறுதி செய்கின்றன. இந்தப் புழுக்கள்தான் அதிக மண்புழுக் கட்டிகளை உருவாக்குகின்றன. மண்ணின் மேற்பரப்புக்கும் வேருக்குமிடையில் இவற்றின் செயல்பாட்டால் நுண்ணூட்டச்சுழற்சியும், நுண்ணுயிர்கள் பெருக்கமும் நடக்கின்றன. அடுத்ததாக உள்ள அடிமட்டப் புழுக்கள் குறுக்கு மறுக்காக, கிடைத்தளத்தில் இயங்கக்கூடியவை. இவை மண்ணை உட்கொண்டு அதிலுள்ள உயிர்ச்சத்துகளை வேதிமாற்றம் செய்து, மண்புழுக்கட்டிகளை உருவாக்குகின்றன. சில நேரங்களில் மேலே வந்தும், இவை பெரிய மண்புழுக் கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த அடிமட்டப் புழுக்களே மண்ணை மென்மையாக்குகின்றன.

இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள எளிமையான உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன். நல்ல பசியுடன் ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் இருக்கையில் அமர்ந்தவுடன், டேபிளைச் சுத்தம் செய்ய ஒருவர் வருகிறார். டேபிள் சுத்தமானவுடன், ‘ஐயா, என்ன சாப்பிடுறீங்க’ என்று கேட்டு ஆர்டர் எடுக்கச் சர்வர் வருகிறார். நாம், ‘தோசை’ என்று சொன்னால், அங்கிருந்தபடியே, ‘ஐயாவுக்கு ஒரு தோசை’ என்று குரல் எழுப்புகிறார். உள்ளே சமையலறையில் இருக்கும் மாஸ்டர் பதமாகத் தோசையைச் சுடுகிறார். தோசை தயாரானவுடன், சர்வர் உள்ளே சென்று, எடுத்து வருகிறார். தோசையைச் சாப்பிட்டுவிட்டுக் காபியை ஆர்டர் செய்தால், சர்வர் மீண்டும் உள்ளே சென்று காபியைக் கொண்டு வருகிறார். டேபிளைச் சுத்தம் செய்வது ஒருவர். டேபிளுக்கும், சமையலறைக்குமாகச் சென்று வருபவர் ஒருவர். சமையலறையில் நாம் கேட்பதைச் சமைத்துத் தருபவர் ஒருவர் என மூன்று பேர் ஹோட்டல் நல்லபடியே நடக்கத் துணைபுரிகிறார்கள்.

இவர்களில், சமையலறையில் உணவு தயாரிக்கும் மாஸ்டரைப் போல மேல்மட்டப் புழுக்கள் செயல்படுகின்றன. அவை எருவைத் தயாரிக்கின்றன. மண்ணுக்குள்ளேயும், வெளியேயும் போய் வரும் நடுமட்டப் புழுக்கள் சர்வரைப் போலச் செயல்படுகின்றன. அவைதான் தண்ணீரையும், காற்றையும், நுண்ணூட்டத்தையும் மண்ணுக்குள் கொண்டு செல்கின்றன. டேபிளைச் சுத்தம் செய்பவரைப்போல, அடிமட்டப் புழுக்கள் மண்ணைச் சுத்தம்செய்து, வளமான மண்ணை உருவாக்குகின்றன. ஒருவேளை, ஹோட்டலுக்குச் சென்ற நமக்கு அவ்வளவாகப் பசியில்லை என்று குளிர்பானம் மட்டும் ஆர்டர் செய்தால், அதைச் சர்வரே குளிர்பதனப் பெட்டியிலிருந்து கொண்டு வந்து கொடுத்துவிடுவார். அங்கே மாஸ்டருக்கு வேலையில்லை. அதைப் போலவே வானம் பார்த்த பூமியில், ஈரப்பதம் இல்லாமையால் மேல்மட்டப் புழுக்கள் இருப்பதில்லை. அவற்றின் வேலையை நடுமட்டப் புழுக்கள்தான் செய்கின்றன. இப்படி மூன்று வகைப் புழுக்களும் சேர்ந்தே மண் நலமாக வாழப் பணிபுரிகின்றன.

மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதில் மண்புழுக்களின் பங்கு மிக முக்கியமானது. மண்புழுக்களின் நலமே, மண்ணின் நலம் என்ற புரிதலோடு, மண்புழுக்களை, நம் குழந்தைகளை வளர்ப்பதைப்போல அன்போடும் அக்கறையோடும் பராமரிப்போம் வாருங்கள்!

-முயற்சி தொடரும்.

மண்நலன் காக்கும் புளியங்குடி புதல்வர்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புளியங்குடி இயற்கை புதல்வர்கள்தான், கோமதிநாயகம் மற்றும் அந்தோணிசாமி ஆகியோர். இவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த முன்னோடி இயற்கை விவசாயிகள். இருவருமே என்னுடைய நீண்டகால நண்பர்கள். தற்சார்பை நோக்கி அவர்கள் பயணப்படத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 1980-களிலேயே இயற்கை வேளாண்மைக்கு மாறிய இருவரும், கரும்பு, நெல், வாழை, பயறு வகைகள், பூக்கள், காய்கறிகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, எலுமிச்சை... எனத் தொட்ட அனைத்துப் பயிர்களிலும் விளைச்சலையும், தரத்தையும் வெகுவாகக் கூட்டி, நவீன வேளாண் வல்லுநர்களை வியக்க வைத்தவர்கள்.

அந்தோணிசாமி ஒட்டு எலுமிச்சையை உருவாக்கியவர். அவருடைய பண்ணையில், ஆண்டு முழுக்கப் பூ, காய், பழம் என அனைத்துக் கட்டத்திலும் உள்ள எலுமிச்சை மரங்களை நான் பார்த்திருக்கிறேன். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கரும்பில் சமீபத்தில் 26-வது தாம்பு கரும்பை அறுவடை செய்துள்ளார். அவருடைய கரும்பு வயல் ஆண்டு முழுக்கப் பசுமையாக இருக்கும். பூச்சிகளை அங்கே பார்க்க முடியாது. கரும்புச் சாற்றிலிருந்து, அவரே வெல்லம் காய்ச்சி நல்ல விலைக்கு விற்கவும் செய்கிறார். சமீபத்தில் அவருடன் பேசியபோது, ‘என் பண்ணையில் 1986-ம் ஆண்டில், 0.8% என்ற அளவில் இருந்த மண்ணின் கரிம அளவு (Organic Matter), தற்போது 1.45% என்ற அளவில் உள்ளது. தேசிய அளவில் வெல்லத்தில் சுக்ரோஸ் அளவு 60% அளவுதான், ஆனால் நான் தயாரிக்கும் வெல்லத்தில் அது 94% அளவாக உள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

கோமதிநாயகம், ஓய்வுபெற்ற ஆசிரியர். அவர் தற்போது பயிரிட்டுள்ள எலுமிச்சையின் மணம், பிழிதிறன் அளவு ஆகியவை சாதாரண எலுமிச்சையைவிடச் சிறந்து விளங்குகிறது. இப்படிக் கோமதிநாயகம், அந்தோணிசாமி ஆகியோரின் பண்ணையில் எது போட்டாலும் சிறப்பாக விளைவதற்குக் காரணம்... அவர்கள் மூடாக்கு, இயற்கை இடுபொருள்களைக் கொடுத்துப் பாரம்பர்ய வேளாண்முறைகளின் மூலம் மண்ணின் நலத்தைத் தொடர்ந்து பேணுவதுதான். அவர்கள் பணி மேலும் சிறப்படைந்து இயற்கை விவசாயத்துக்கு வரும் இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கட்டும்.

தொடர்புக்கு, செல்போன்:

கோமதிநாயகம்: 75981 33235

அந்தோணிசாமி: 99429 79141