Published:Updated:

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!
பிரீமியம் ஸ்டோரி
பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

ஆசிரியரின் அசத்தல் விவசாயம்...மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

ஆசிரியரின் அசத்தல் விவசாயம்...மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!
பிரீமியம் ஸ்டோரி
பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

ன்சுலின் சுரப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு... இயற்கை முறையில் விளைந்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களைத்தான் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படி நோயைக் கட்டுக்குள் வைப்பதற்காகப் பாரம்பர்ய அரிசியைச் சாப்பிட ஆரம்பித்த ஆசிரியர் ஒருவர், இயற்கை விவசாயத்தின்மீது ஈர்க்கப்பட்டு விவசாயம் செய்து வருகிறார். அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய வெலிங்டன் ராஜா. இவர் இயற்கை முறையில் பாரம்பர்ய ரகமான பூங்கார் நெல்லைச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்துள்ளார்.  

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

நான்குனேரியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னார்புரம் கிராமத்தில்தான் வெலிங்டன் ராஜா விவசாயம் செய்துவருகிறார். நாம் முன்கூட்டியே அவரிடம் சொல்லியிருந்ததால் வயலில் நம்மை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவரைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார்.

“அப்பா முன்னாடி விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தாங்க. அப்புறம் மளிகைக்கடை ஆரம்பிச்சார். அதுல நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிக்கவும் விவசாயத்தை விட்டுட்டார். நான் படிப்பு முடிச்சுட்டு ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்து இப்போ இருபது வருஷம் ஆகிடுச்சு. ஏழு வருஷத்துக்கு முன்னாடி விவசாயத்த ஆரம்பிச்சேன். ரசாயன உரம் பயன்படுத்தி ரசகதலி ரக வாழையைச் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். அப்பாதான் கூடமாட ஒத்தாசையா இருந்தார். என்னோட அண்ணன் தமிழ்ச்செல்வன் ஏசு சபையில ஃபாதர். அவர் வள்ளியூர் பல்நோக்கு சமூகசேவை மையத்துல இயக்குநரா இருக்கார். அதோடு இயற்கை விவசாயத்துல பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சுட்டுருக்கார். அவர் அடிக்கடி என்கிட்ட இயற்கை விவசாயம் பத்திப் பேசுவார். இடுபொருள் தயாரிப்பெல்லாம்கூட சொல்லிக்கொடுத்தார். ஆனா, அவர் சொன்னப்போலாம் எனக்கு இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை வரலை” என்ற வெலிங்டன் ராஜா தொடர்ந்தார்...  

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

“எனக்கு 12 வருஷமா சர்க்கரை வியாதி இருக்கு. அதுக்கு மாத்திரைகள் சாப்பிட்டிட்டுருக்கேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி, ரொம்ப உடம்பு சரியில்லாமப் படுத்தப் படுக்கையாயிட்டேன். அந்தச் சமயத்துல என் அண்ணன் தமிழ்ச்செல்வன்... பணகுடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சமுத்திரபாண்டி மகேஷ்வரனை என் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தார். அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள். அப்போ சமுத்திரபாண்டி மகேஷ்வரன் என் வியாதிகளைப் பத்திக் கேட்டுட்டு... ‘48 நாள்கள், காலையிலயும் சாயங்காலமும் 200 மில்லி அளவு நாட்டுமாட்டுச் சிறுநீரைக் குடிங்க. சர்க்கரை வியாதி கட்டுப்படும். நோயால் ஏற்பட்ட மற்ற பாதிப்புகளும் குறைஞ்சுடும்’னு சொன்னார். நானும் அதுபோலச் செய்ய ஆரம்பிச்சேன். இதோட பூங்கார், கருத்தக்கார் ரக அரிசியில் சமைச்ச உணவைச் சாப்பிட ஆரம்பிச்சேன். அதுல நல்ல மாற்றம் தெரிஞ்சுச்சு. அதன்பிறகு அலோபதி மாத்திரைகளையும் நிறுத்திட்டேன். இப்போ வரைக்கும் எந்தப் பாதிப்புமே வரலை. அதுக்கப்புறம்தான் எனக்குப் பாரம்பர்ய நெல், இயற்கை விவசாயம் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு.

பிறகு சமுத்திரபாண்டி மகேஷ்வரனோட தோட்டத்துக்குப் போய்ப் பார்த்து இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் தோட்டத்துல வாழையும், ஆத்தூர் கிச்சிலிச்சம்பா நெல்லும் செழிப்பா வளர்ந்துருந்துச்சு. எனக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி மேல ஆசை வந்ததால, அவர்கிட்ட இருந்து பூங்கார் ரக விதைநெல்லை அன்னிக்கே வாங்கிட்டு வந்துட்டேன். அப்பாகிட்ட இயற்கை விவசாயம் பத்திச் சொன்னதும் அவரும் ஏத்துக்கிட்டார். போன பிப்ரவரி மாசம் பூங்கார் ரக நெல்லை விதைச்சோம். அதுல நல்ல மகசூல் கிடைச்சுருக்கு” என்று தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன வெலிங்டன் ராஜா தொடர்ந்தார்.  

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

“எங்களுக்கு மொத்தம் 4 ஏக்கர் 25 சென்ட் நிலம் இருக்கு. மணல் கலந்த களிமண் நிலம். அதுல ஒரு ஏக்கர் நிலத்துல பூங்கார் நெல் போட்டு, இப்போ அறுவடைக்குத் தயாரா இருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல நிலக்கடலையும் ஒரு ஏக்கர் நிலத்துல தென்னையும் இருக்கு. தென்னைக்கு ஊடுபயிராக மா இருக்கு. கால் ஏக்கர் நிலத்துல உளுந்து இருக்கு. மீதி ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செஞ்சு வெச்சுருக்கோம். இயற்கை விவசாயத்துல இறங்கி முதல் முறையா பூங்கார் நெல்லைத்தான் சாகுபடி செஞ்சோம். முதல் பிரசவம்போல அறுவடைக்காக ஆவலாகக் காத்துட்டுருக்கோம்.

‘வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பர்ய விவசாயிகள் சங்க’த்துல நானும் உறுப்பினராச் சேர்ந்துருக்கேன். மொத்தம் 40 விவசாயிகள் சங்கத்துல இருக்கோம். அறுவடையான பூங்கார் நெல்லை அரிசியா அரைச்சு சங்கத்து மூலமாதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற வெலிங்டன் ராஜா நிறைவாக,

“இந்தமுறை பலதானிய விதைப்புச் செய்யாம விதைச்சுட்டேன். அடுத்தமுறை பலதானிய விதைப்பு செஞ்சு நெல் விதைக்கலாம்னு இருக்கேன். இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சப்போ எங்க தோட்டத்துல வேலை செய்றவங்களே ஒரு மாதிரியாத்தான் பார்த்தாங்க. இப்போ நல்லா விளைஞ்சு நிற்கிறதைப் பார்த்ததும் அவங்களே ஆச்சர்யப்படுறாங்க. அடுத்தமுறை காட்டுயானம் ரக நெல்லை விதைக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஆரோக்கிய வெலிங்டன் ராஜா, செல்போன்: 94860 79716. 

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் பூங்கார் ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஆரோக்கிய வெலிங்டன் ராஜா கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

சம்பா, இடைச்சம்பா, கார், இடைக்கார் ஆகிய பட்டங்களுக்கு ஏற்ற ரகம் பூங்கார். இதன் வயது 80 முதல் 90 நாள்கள். தேர்வு செய்த நிலத்தை இரண்டு முறை உழுது ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு 2 டிராக்டர் அளவு மட்கிய சாணத்தை நிலத்தில் கொட்டிப் பரப்பி ஓர் உழவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் பரப்பில் நடவு செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 10 கிலோ பூங்கார் விதைநெல்லை 3 மணி நேரம் நிழலில் உலர்த்தி, ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றிக் கிளற வேண்டும்.

இப்படிச் செய்யும்போது தூசிகள், பொக்குகள் மேலே மிதக்கும். அவற்றை அகற்றிவிட்டு 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து... ஒரு சணல் சாக்கினுள் கொட்டி இறுக்கமாகக் கட்டி வைத்து விட வேண்டும். 5 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து சாக்கின்மீது தெளித்து வைக்கோலைக் கொண்டு மூடி ஒருநாள் வைத்திருந்தால், நெல் விதைகளில் லேசாக முளைப்பு எடுக்கும். இதனை நாற்றங்காலில் தூவி விதைக்க வேண்டும். விதைத்த 3, 10 மற்றும் 19-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

20 முதல் 22-ம் நாளுக்குள் நாற்றங்காலிலிருந்து நாற்றைப் பிடுங்கி, வயலில் நடவு செய்து விட வேண்டும். வயலில் நடவு செய்வதற்கு முன், 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து அக்கரைசலில் நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்க வைத்து எடுத்து 10 நிமிடங்கள் நிழலில் வைத்திருந்து முக்கால் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40-ம் நாள்களில்... 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்சகவ்யா மற்றும் 200 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 20 மற்றும் 30-ம் நாள்களில் களைகளை அகற்ற வேண்டும். 25 மற்றும் 40-ம் நாள்களில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்து விட வேண்டும். 80 முதல் 90-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம்.

வருமானக் கணக்கு

றுவடை முடிந்தபிறகு நம்மைத் தொடர்புகொண்ட ஆரோக்கிய வெலிங்டன் ராஜா, “ஒரு ஏக்கர் நிலத்துல 1,813 கிலோ நெல் கிடைச்சது. இதைப் புழுங்கல் அரிசியா அரைச்சதுல 1,251 கிலோ அரிசி கிடைச்சுருக்கு. ஒரு கிலோ அரிசியை 75 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அந்தக்கணக்குல பார்த்தா 93,825 ரூபாய் வருமானம் கிடைக்கும். விதைப்புல இருந்து அரிசியா அரைச்சது வரை 27,450 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதைக்கழிச்சா 66,375 ரூபாய் லாபமா நிக்கும். வைக்கோலை அடியுரமா நிலத்திலயே போட்டுட்டேன்” என்றார்.

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

மூலிகைப் பூச்சிவிரட்டி

வே
ப்பிலை, அரளி இலை, சோற்றுக் கற்றாழை மடல், பப்பாளி இலை, ஆமணக்கு இலை, ஆடாதொடை இலை, எருக்கன் இலை, நொச்சி இலை, ஊமத்தன் இலை, சுண்டைக்காய் இலை ஆகியவற்றில் தலா 2 கிலோ அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். இதனுடன், தலா அரைக்கிலோ இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கால் கிலோ பூண்டு ஆகியவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கிப் போட வேண்டும். இவை மூழ்கும் அளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீர் ஊற்றிப் பாத்திரத்தை மூடி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இப்படி 4 முறை கொதிக்கவிட்டு இறக்கி, 48 மணி நேரம் வரை வைத்திருந்து வடிகட்டினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தயார்.