Published:Updated:

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

மகசூல்ஆர்.குமரேசன் - எஸ்.சாய்தர்மராஜ்

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

மகசூல்ஆர்.குமரேசன் - எஸ்.சாய்தர்மராஜ்

Published:Updated:
காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

‘நமது வேளாண் உற்பத்தி முறை, இயற்கையைச் சார்ந்தது. இயற்கை வழியில் அமைந்தது. பெரும்பாலான விவசாயிகளுக்குத் தங்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள் பிற பொருள்களை விளைய வைக்கக்கூடிய அளவுக்கு நிலம் இருந்தது. காளைகள், பசுக்கள், ஆடுகள், கோழிகள் வைத்திருந்தனர்.

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

வேளாண்மைக்குத் தேவையான விதைகளைத் தங்களது நிலத்திலிருந்து சேகரித்து வைத்தார்கள். ஆடு, மாடுகளின் கழிவுகளை உரமாக மாற்றிக்கொண்டார்கள். காட்டோரங்களில், பொது இடங்களில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளைத் திரட்டிப் பசுந்தாள் உரம் தயாரித்தார்கள். இதனால் எந்தப் பொருளுக்கும் யாரையும் சார்ந்திருக்காத தற்சார்பு நிலை இருந்தது. இந்த நிலைதான் விவசாயிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நிலை’ என்று குறிப்பிட்டுள்ளார் கிராமிய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா. 

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

இதே விஷயங்களைக் கடைப்பிடித்து வரும் விவசாயிகள் இன்றும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி. இவர் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான பெரும்பாலான பொருள்களைத் தங்கள் நிலத்திலே இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்து கொள்கிறார். அதோடு, கால்நடைக் கழிவுகளிலிருந்து பஞ்சகவ்யா, மண்புழு உரம் எனத் தயாரித்து விற்பனை செய்தும் வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலூகா, அரளிக்கோட்டை கிராமத்தில்தான் சீதாலட்சுமியின் நிலம் இருக்கிறது. ஒரு மாலை நேரத்தில் தோட்டத்தில் இருந்த சீதாலட்சுமியைச் சந்தித்தோம். மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேச ஆரம்பித்தார் சீதாலட்சுமி.

“விவசாயக் குடும்பத்துல பிறந்ததால சின்ன வயசுலயிருந்தே விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். கல்யாணமாகி வந்த பிறகும் விவசாயத்தை விடலை. என் கணவரும் விவசாயத்துல ரொம்ப ஆர்வமுள்ளவர். முன்னாடி, வீட்டுப் பெரியவங்களோட சேர்ந்து விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். இப்போ பத்து வருஷமா நானும் என் கணவரும் சேர்ந்து விவசாயம் பார்க்குறோம். எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவர் சென்னையில ஒரு தனியார் கம்பெனியில் வேலை பாக்குறாரு. சின்னவர் வக்கீலுக்குப் படிச்சிட்டு இருக்காரு. தோட்டத்துல பெரும்பாலான வேலைகளை நாங்க ரெண்டு பேருமே செஞ்சுடுவோம். ஒரு சில வேலைக்கு மட்டும்தான் ஆளுங்களை வெச்சிக்குவோம்.  

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

பெரியவங்க இருந்தவரைக்கும் இலைதழைகளைப் போட்டு பாரம்பர்ய முறையிலதான் விவசாயம் செஞ்சாங்க. நாங்களும் அதையேதான் கடைப்பிடிச்சுட்டுருக்கோம். இலைதழைகள், தொழுவுரம்னு போட்டுதான் நெல் சாகுபடி செய்வோம். ஒருமுறை காரைக்குடிக்கு வந்த நம்மாழ்வார் ஐயாவைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஒரு தனியார் பண்ணையில மூணு நாள் தங்கியிருந்து அவர் பயிற்சி கொடுத்தாரு.  நானும் அதுல கலந்துகிட்டேன். அதுக்கப்புறம் முழுமையா இயற்கை விவசாயம் செய்றோம். இயற்கை விவசாயம்னு சொல்றதை விடத் ‘தற்சார்பு விவசாயம்’ங்கிறது பொருத்தமா இருக்கும். இயற்கை விவசாய முறைகள்ல எனக்கு வந்த சந்தேகங்களைத் தீர்த்து வெச்சது, குன்றக்குடி கே.வி.கேதான். இப்போ வரைக்கும் எங்களுக்கு ஆலோசனை கொடுத்துட்டு இருக்காங்க” என்ற சீதாலட்சுமி நிலத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார். 

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

“இது மொத்தம் அஞ்சு ஏக்கர். கிணத்துப் பாசனம்தான் இருக்கு. நெல் சாகுபடிதான் பிரதானம். ஒரு ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. தேங்காயை விற்பனை செய்றதில்லை. எண்ணெய் ஆட்டி வீட்டுத் தேவைக்கு வெச்சுக்குவோம். வீட்டுத்தேவை போக மீதமுள்ளதை உறவுக்காரங்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்துடுவோம். பிண்ணாக்கை மாட்டுக்குக் கொடுத்திடுவோம். வருஷத்துக்கு ஒரு தடவை 50 சென்ட்ல நிலக்கடலையும், 50 சென்ட்ல எள்ளும் போடுவோம். இதுவும் வீட்டுத்தேவைக்குத்தான். எண்ணெயைச் சமையலுக்கும், பிண்ணாக்கை மாடுகளுக்கும் வெச்சுக்குவோம். இதுபோக, கொஞ்ச இடத்துல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் போட்டுருக்கோம். அஞ்சு சென்ட் நிலத்துல வாழை இருக்கு. மீதி நிலம் முழுக்க நெல் விவசாயம்தான்.

போன வருஷம் மழை சரியா கிடைக்கலை. அதனால, ரெண்டு ஏக்கர் நிலத்துல மட்டும்தான் நெல் சாகுபடி பண்ணினோம். ஒரு ஏக்கர் நிலத்துல ஆத்தூர் கிச்சலிச்சம்பாவும், ஒரு ஏக்கர் நிலத்துல சீரகச்சம்பாவும் போட்டோம். கிச்சலிச்சம்பா ரகத்துல 32 மூட்டை (60 கிலோ) நெல் கிடைச்சது. சீரகச்சம்பா ரகத்துல 22 மூட்டை நெல் கிடைச்சது. நெல்லை அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்றோம். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். தவிடு, வைக்கோல் மாடுகளுக்கு ஆகிடும். இப்போ, 70 சென்ட் நிலத்துல ஒற்றை நாற்று முறையில குள்ளக்கார் ரக நெல் இருக்கு. இன்னும் இருபது நாள்ல அறுவடைக்கு வந்திடும்” என்ற சீதாலட்சுமி நிறைவாக, 

காய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

“எங்களைப் பொறுத்தவரைக்கும் எதுக்காகவும் யாரையும் எதிர்பார்த்து நிக்கறதில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் இந்த மண் மாதா கொடுத்திடுறா. கைச்செலவுக்குத் தேவையான வருமானத்தை மாடுங்க கொடுத்துடுது. மண்புழு உரம், பஞ்சகவ்யா மூலம் மாசம் முப்பதாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. நெல் மூலமா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. திட்டமிட்டு விவசாயம் செஞ்சா, விவசாயத்தைவிட லாபமான தொழில் எதுவும் கிடையாது” என்று சொல்லியபடி விடைகொடுத்தார். 

தொடர்புக்கு, சீதாலட்சுமி, செல்போன் : 80567 50448

பாரம்பர்ய நெல் சாகுபடி

யற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் முறை குறித்துச் சீதாலட்சுமி சொல்லிய விஷயங்கள் இங்கே...

நாற்றங்காலுக்கான நிலத்தைச் சமப்படுத்தி 3 அடி அகலம், 20 அடி நீளத்தில் இரண்டு மேட்டுப் பாத்திகளை (ஒரு ஏக்கர் விதைப்புக்கு) அமைக்க வேண்டும். பாத்திகளில் மூன்று அங்குல உயரத்துக்கு எருவைக் கொட்ட வேண்டும். அதற்கு மேல், மூன்று அங்குல உயரத்துக்கு மண்புழு உரத்தை இட்டு, விதைநெல்லைத் தூவி, வைக்கோல் கொண்டு மூட வேண்டும். பூவாளியால் தண்ணீர் தெளித்துவந்தால், 18 நாள்களில் நாற்று தயாராகிவிடும். நாற்றுகள் வளர்ந்து கொண்டிருக்கும்போதே நடவு வயலைத் தயார் செய்துவிட வேண்டும்.

ஒரு ஏக்கர் வயலுக்கு மூன்று டிராக்டர் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டிப் பரப்பி ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு ஒரு டன் மண்புழு உரத்தைக் கொட்டிப் பரப்பி மூன்று முறை உழ வேண்டும். பிறகு வயல் முழுவதும் இலை, தழைகளைப் போட்டு மிதித்துவிட வேண்டும். பிறகு நிலத்தை மட்டப்படுத்த வேண்டும். தண்ணீர் பாயும் வாய்மடைக்கு அருகே ஒரு பள்ளம் பறித்து, அதில் தினமும் மாட்டுச் சாணத்தைக் கொட்டி வைக்க வேண்டும். இந்தக் குழியில் நிறைந்து பாயும் தண்ணீர் வயலுக்குத் தேவையான சத்துகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

நிலத்தைச் சேறாக்கி 18 நாள்கள் முதல் 20 நாள்கள் வயதுகொண்ட நாற்றை நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து பாசனம் செய்து வர வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்க வேண்டும். பயிர்களுக்கு ஊட்டம் தேவைப்பட்டால் பஞ்சகவ்யா கொடுக்கலாம். ஆனால், பால் பிடித்த பிறகு பஞ்சகவ்யா கொடுக்கக்கூடாது. அந்த நேரத்தில் தேமோர்க்கரைசலைப் பயன்படுத்தலாம். வயலில் ஆங்காங்கே விளக்குப்பொறிகளையும் பறவை தாங்கிகளையும் அமைத்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அவற்றையும் மீறி பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.

முப்பதாயிரம் ரூபாய் லாபம்!

நா
ட்டு மாடுகள் வளர்ப்பு பற்றிப் பேசிய சீதாலட்சுமியின் கணவர் வெள்ளைச்சாமி, “எங்ககிட்ட நாப்பது நாட்டு மாடுங்க இருக்கு. மாடுகளை மேய்க்கிறதும் எங்களுக்குப் பெரிய வேலையில்லை. தினமும் காலையில அவுத்து விட்டா, அதுங்களா போய் மேய்ஞ்சிட்டுச் சாயங்காலம் தொழுவத்துக்கு வந்திடும். வெள்ளாமை நேரத்துல மட்டும் ஒரு ஆள் அழைச்சுட்டுப் போவோம். ராத்திரியில மாடுகளைத் தொழுவத்துல கட்டி வைக்கோல் போடுவோம். தவிடு, பிண்ணாக்கு கலந்த தண்ணி எப்பவும் இருக்கும். தவிடும், பிண்ணாக்கும் எங்ககிட்ட இருக்கறதால அதுக்கான செலவு இல்லை. எல்லாமே புலிக்குளம் மாடுங்க. இந்த ரகம், ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்றது. எங்க காளையும் ஜல்லிக்கட்டுல கலந்துகிட்டு ஏகப்பட்ட பரிசுகளை வாங்கியிருக்கு.

நாங்க மாடுகள்ல பால் கறந்து விற்பனை செய்றதில்லை. வீட்டுத்தேவைக்கும் பஞ்சகவ்யா தயாரிக்கிறதுக்கும் மட்டும்தான் கறப்போம். மீதியைக் கன்னுகுட்டிகளுக்கு விட்டுடுவோம். மாடுகளோட சாணத்துல மண்புழு உரம் தயார் பண்றோம். அதுக்காகச் சாணத்தை வெளியேவும் வாங்கிக்கிறோம். மாசம் அஞ்சு டன் அளவுக்குக் குறையாம மண்புழு உரம் விற்பனையாகுது. விதைக்கிற சமயங்கள்ல மாசம் பத்து டன் அளவுக்குக் கூட விற்பனையாகும். ஒரு கிலோ மண்புழு உரம் எட்டு ரூபாய்னு விற்பனை செய்றோம். அதுமூலமா, மாசம் சராசரியா நாற்பதாயிரம் ரூபாய் கிடைக்கும். பஞ்சகவ்யா விற்பனை மூலமா மாசம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல செலவுகள் போக, முப்பதாயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்குது” என்றார்.

மதிப்புக்கூட்டினால், கூடுதல் லாபம்

ரிசி விற்பனை பற்றிப் பேசிய சீதாலட்சுமி, “நெல்லை அப்படியே விற்பனை செஞ்சா லாபம் குறைவாத்தான் கிடைக்கும். பத்து ரூபாய்க்கு நெல்லை வித்துட்டு, ஆறு ரூபாய் கொடுத்து மாடுகளுக்குத் தவிடு வாங்கணும். அதனால, எங்க நெல்லை அரைச்சுத் தவிட்டை எடுத்து வெச்சுக்கிட்டு அரிசியை விற்பனை செய்றோம். வருஷத்துக்கு மூணாயிரம் கிலோவுக்குக் குறையாம நெல் கிடைக்கும். அதை அரிசியாக்குறப்போ ஆயிரத்து ஐந்நூறு கிலோ கிடைக்கும். எங்க வீட்டுத் தேவைக்காக வருஷத்துக்கு முந்நூறு கிலோ அரிசி எடுத்து வெச்சுக்கிட்டு மீதி ஆயிரத்து இருநூறு கிலோ அரிசியைக் கிலோ 80 ரூபாய்னு விற்பனை செஞ்சிடுவோம். இது மூலமா 96 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாடுகளுக்குப் போதுமான தவிடும் கிடைச்சிடுது” என்றார்.