Published:Updated:

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

புறாபாண்டி - படங்கள்:எல்.ராஜேந்திரன், ஆர்.எம்.முத்துராஜ்ஓவியம்: வேல்

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

புறாபாண்டி - படங்கள்:எல்.ராஜேந்திரன், ஆர்.எம்.முத்துராஜ்ஓவியம்: வேல்

Published:Updated:
நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

‘‘தமிழ்நாடு மாநில மருத்துவப் பயிர்கள் வாரியத்தின் செயல்பாடுகள் என்ன, இதில் யாரெல்லாம் உறுப்பினராக முடியும்?’’

எம்.வெங்கடேஷன், சுகாதார ஆய்வாளர் (ஓய்வு), வந்தவாசி.


தமிழ்நாடு மாநில (மூலிகை) மருத்துவப் பயிர்கள் வாரியத்தின் அலுவலர் பதில் சொல்கிறார். 

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

‘‘மருத்துவக் குணம்கொண்ட பயிர்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மருத்துவப் பயிர்களின் அருமை கருதி தேசிய மருத்துவப் பயிர்கள் வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவப் பயிர்கள் வாரியம் என்ற அமைப்புச் செயல்படுகிறது. கற்றாழை, வேம்பு, துளசி, கருவேலம் உள்பட மொத்தம் 92 வகையான மூலிகைத் தாவரங்களுக்கு 30 முதல் 50% வரை மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!மருத்துவப் பயிர்கள் தொடர்பான அனைத்தையும் ஒருங்கிணைப்பது, பாரம்பர்ய மருத்துவத் துறையை வளர்க்கத் தேவையான கொள்கைகளை உருவாக்குவது, வருமானம் ஈட்டக்கூடிய பயிர்களைப் பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருள்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்படப் பல தகவல்களை மூலிகைப் பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்துச் சொல்வதுதான், இந்த வாரியத்தின் பணி.

மருத்துவப் பயிர்களைப் பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காகத் தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்துச் சென்னையில் உள்ள, மாநில மருத்துவத் தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். இங்கு பெறப்பட்ட திட்ட அறிக்கையானது, தேசிய மருத்துவப் பயிர்கள் வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும். மூலிகைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள், விளைபொருளை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், வாரியம் வழிகாட்டி வருகிறது.

தமிழக மூலிகைத் தாவர வாரியத்தில், மூலிகை சார்ந்து செயல்பட்டு வரும் விவசாயிகள், மூலிகை சேகரிப்போர், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில் அதிபர்கள், மருந்து உற்பத்தியாளர்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயனடைகின்றன. இதன்படி, தமிழக மூலிகை வாரியத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கான பதிவு குறித்த அறிவிப்பு, ஆண்டுதோறும் நாளிதழ்களில் வெளியிடப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள், உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன், தமிழக மாநில மூலிகைத் தாவர வாரியத்திற்கு, நேரிலோ, தபாலிலோ விண்ணப்பித்து, உறுப்பினராகலாம்.

இந்த உறுப்பினர் பதிவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தமிழகத் தோட்டக்கலை, விவசாயம் மற்றும் வனத்துறைகளில், மூலிகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் உறுப்பினராகலாம்.’’
 
தொடர்புக்கு, செயலர், மாநில மருத்துவப் பயிர்கள் வாரியம், இந்திய மருத்துவத் துறை இயக்குநரகம், அரும்பாக்கம், சென்னை-600 106.
தொலைபேசி எண்: 044 2622 2565/ 26214844.


‘‘புடலைச் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளோம். அது சம்பந்தமான தகவல்களைச் சொல்லுங்கள்?’’

கே.காளியம்மாள், கிணத்துக்கடவு.


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி காய்கறி விவசாயி, ‘கேத்தனூர்’ பழனிச்சாமி பதில் சொல்கிறார். 

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

‘‘புடலையில் பல நாட்டு ரகங்கள் உண்டு. இதில் குட்டை, வரி, நீளப் புடலைதான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பாம்பு புடலை என்று சொல்லப்படும், நீளப்புடலைதான் இதில் சுவை நிறைந்தது. ஆனால், விளைச்சல் குறைவாக இருக்கும். மற்றபடி சாகுபடி முறை, அனைத்து ரகங்களுக்கும் ஒன்றுதான். நன்றாக உழவு செய்த நிலத்தில், கல்தூண்களை ஊன்றிக் கம்பிகளைக் கட்டி, பந்தல் அமைக்க வேண்டும். ஒருமுறை கல்பந்தல் அமைத்துவிட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும்.

புடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும்போது முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாள்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். 

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், செடியின் தூர்களில் அரை லிட்டர் கடலைப் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்புமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்துச் செடிகள்மீதும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் நன்றாகத் தெளிக்க வேண்டும்.

நடவிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவினி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். இதைத் தெளித்துவந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுகள் இருக்காது. 26, 27-ம் நாள்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளைக் கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாகக் கெட்டியான காடா நூலைக் கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம்.

திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். 60-ம் நாளில் 100 மில்லி அரப்புமோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை நடவு செய்த 65-ம் நாளிலிருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாள்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு கிலோ புடலை ரூ.30 முதல் 15 வரை சூழ்நிலைக்குத் தக்கபடி விற்பனையாகிறது. ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 40 டன் என்றாலும், ரூ.6 லட்சம் வருமானம் கிடைத்துவிடும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99439 79791.

நீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.