Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள் 

ஆமணக்குச் சாகுபடி


நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 6-ம் தேதி ‘பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்’, 7-ம் தேதி ‘சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்’, 12-ம் தேதி ‘கறவை மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான தீர்வு மேலாண்மை’, 13-ம் தேதி ‘கெண்டை மீன் வளர்ப்பு’, 19-ம் தேதி ‘கொடிவகைக் காய்கறிகள் வளர்ப்பு’, 20-ம் தேதி ‘நிலக்கடலை, எள் மற்றும் ஆமணக்குச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345. 

தண்டோரா

பழப்பொருள்கள் தயாரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மே 29, 30-ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட பழப்பொருள்கள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

இயற்கை விவசாய முறைகள்


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூன் 12-ம் தேதி ‘சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு’, 14-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 21-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 27 மற்றும் 28-ம் தேதி ‘ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் (சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை) அருகே உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரியில் மே 25, 26, 27 ஆகிய தேதிகளில் ‘உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு’ நடைபெற இருந்தது. தற்போது ஜூன் 8, 9, 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்டணப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 29-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.  

தண்டோரா

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 5-ம் தேதி ‘நெற்பயிரில் பூச்சி மேலாண்மை’, 6-ம் தேதி ‘உளுந்து மற்றும் துவரைச் சாகுபடி’, 7-ம் தேதி ‘மழைக்காலக் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு’ 12-ம் தேதி ‘மதிப்புக்கூட்டல் உணவுத் தயாரிப்பில் இயந்திரங்களின் பங்கு’, 13-ம் தேதி ‘கிப்ட்-திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளது.

மேலும், ஜூன் 6-ம் தேதி ‘சிறுதானிய மதிப்புக்கூட்டல்’, 20-ம் தேதி ‘மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி’, பயறுவகைச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகியவை கட்டணப் பயிற்சியாக நடைபெற உள்ளன. கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

இயற்கை வேளாண்மை

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூன் 9-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை’, ஜூன் 23-ம் தேதி ‘தேனீ வளர்த்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம். 

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.