இந்திய உணவு கழகம் சார்பில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார். பின்னர் பத்திரிகையார் சந்திப்பில் பேசும்போது,

‘‘தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 886 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்கிறது. வரும் ஜூன் மாதம் வரை இந்த மையங்கள் செயல்படும். நடப்பாண்டு கரீப் பருவத்தில் கடந்த மே 3-ம் தேதி வரை 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல், 2.88 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மண்டலத்தில் 3 அல்லது 4 மாதங்களுக்குத் தேவையான 10.41 லட்சம் மெட்ரிக் டன் உணவு பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் அளவு கொண்ட கிடங்குகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 36.83 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் தேவைப்படுகிறது.

பொதுவிநியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் நாடு முழுவதும் 2 கோடியே 62 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் 6.39 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தப் போலி ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளன. மானியமாக வழங்கப்படும் உணவு பொருள்கள் உண்மையிலேயே யாருக்குப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களுக்குச் சென்றடைகிறது. தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு இயந்திரம் மூலம் உணவு பொருள்கள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.