அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதக்குலத்தை ஆட்சி செய்யும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘தொழில்நுட்பம் என்பது இருமுனைக்கத்தி’ என்பார் அறிவியல் அறிஞர் ஓடம் (Eugene P.Odum). அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதகுலத்தைத் தழைக்க வைக்கவும் செய்யும், ஒரேயடியாக அழிக்கவும் செய்யும். உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology) என்ற பெயரில், மரபணு மாற்று முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மனிதக் குல நன்மையைக் காட்டிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபநோக்கே முந்தி நிற்பதுதான் வேதனை.

ஏற்கெனவே, மரபுப் பொறியியல் (Genetic Engineering), வேளாண்மை மற்றும் காடு வளர்ப்பில், மரபணு மாற்றத்தில் கை வைத்துள்ளது. இதன் மூலம், ஒற்றைப் பயிர்களை உருவாக்கி பல்லுயிர் சூழலுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி வருகிறது.

இந்தப் பயிர்களை வெற்றிகரமாக வளர்க்க உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு, மண்ணை நாசமாக்குகின்றன. மண்ணில் வாழும் எண்ணற்ற உயிர்களுக்கும் வேட்டு வைக்கின்றன. மண்ணுயிர்களும், நுண்ணுயிர்களும் அழிந்தால் மண்ணின் நலமே அழிந்துவிடும். மண்ணின் நலம் அழிந்தால், மனிதக்குலமே அழிந்துவிடும் என்ற தொலைநோக்குப் பார்வை இல்லாமல்... ஆபத்தான விளையாட்டுக்களில் விஞ்ஞானிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருவது, கவலைக்குரிய விஷயமே.

ஆனால், மனிதக் குலமும், பல்லுயிர்களும் செழிப்பதற்காக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முன்னெடுக்கும் விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மரபின் தொடர்ச்சியாகத்தான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய மண்புழு ஆராய்ச்சியைத் தொடங்கினேன். பெரிய திட்டத்துடன் எல்லாம் நான் மண்புழு ஆராய்ச்சியில் இறங்கவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்றுதான். வாழ்வில் சாதிக்க வேண்டுமானால், திறந்த மனோபாவம் அவசியம். உலகம் போகும் பாதைதான் சரி என்று நினைத்து, மாற்று வழிகளுக்கு மதிப்பளிக்கவில்லையெனில், வாழ்க்கை அளிக்கும் வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடும். முதுகலை அறிவியலில் நான் மீனைப் பற்றியும், எம்.பில் படிப்பில் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றியும்தான் அதிகம் கவனம் செலுத்தினேன். பிறகு, மேற்படிப்புக்கான சூழலில்லை என்பதால், சென்னைப் புதுக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தேன்.

1979- ஆண்டு, மாணவர் கலிமுர் ரஹ்மான், ஆய்வுப் படிப்புக்கு வழிகாட்டும்படி என்னை அணுகினார். எங்கள் துறையில் சொல்லிக் கொள்ளும்படி ஆய்வுகள் ஏதும் அப்போது நடக்கவில்லை. துறைத்தலைவர் பேராசிரியர் முகமது மைதீன் அவர்களை அணுகி விஷயத்தைச் சொன்னேன். அவர் கனடா நாட்டில் பணிபுரிந்தவர். ‘தன்னுடைய துறையில் முறையான ஆய்வுகள் இல்லை’ என்ற வருத்தம் அவருக்கும் இருந்தது. அவர் என்னிடம், ‘ஓர் ஆய்வுக்குத் திட்டமிடுங்கள்’ என்று சொன்னார். அதே யோசனையோடு, என் அறைக்குத் திரும்பினேன். அங்கு இந்திய விலங்கினப் பண்பியல் சங்கத்தின் (Ethological Society of India) சார்பில் சில மாதங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு கருத்தரங்குக்கான அழைப்புக் கடிதம் இருந்தது. அதைப் பார்த்தவுடன், விலங்கினப் பண்பியல் சம்பந்தமாகவே ஓர் ஆய்வைத் தொடங்கலாமே என்று, நானும் அந்த மாணவரும் முடிவு செய்தோம். விலங்கினப் பண்பியல், செயல்பாடுகளைக் குறித்துத்தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

தொடர்ந்து, நானும் அந்த மாணவரும் எங்கள் கல்லூரி ஆய்வகத்துக்குச் சென்றோம். அங்கே பணிபுரிந்த புஹாரி என்பவரிடம், ‘நம்ம லேப்ல உயிருள்ள மாதிரி(Specimen) என்னப்பா இருக்கு?’ என்றேன். அவர், ‘மண்புழுதான் சார் இருக்கு’ என்றார். ‘சரி, மண்புழுவை வைத்தே ஆராய்ச்சியைத் தொடங்கிவிடலாம்’ என்று முடிவு செய்தோம். அன்றைக்கு ஆரம்பித்த ஆராய்ச்சிதான், என்னை உலகம் முழுக்கத் தெரிந்த மனிதனாக மாற்றியிருக்கிறது.

நான் யாருக்கு நன்றி சொல்வது, அந்த மாணவருக்கா, துறைத்தலைவருக்கா, புஹாரிக்கா, மண்புழுக்களுக்கா அல்லது எல்லோருக்குமா? என்னைப் பொறுத்தவரை வாழ்வு நமக்குக் காட்டும் திசையை அறிந்து கொள்ள நாம் தயாராக இருந்தால், நமக்கான பாதையில் நிச்சயம் பயணிக்கலாம். மண்புழு ஆராய்ச்சியில், மேல்மட்ட மற்றும் நடுமட்டப் புழுக்கள் குறித்துத் தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபட்ட சூழலில்... 1992-ம் ஆண்டில் ‘மண்புழுத் தொழில்நுட்பம்’ என்ற பொருள்படும் ‘Vermitech’ என்ற வார்த்தையை உருவாக்கிப் பயன்படுத்த தொடங்கினேன் (‘வெர்மஸ்’ என்றால் ‘புழு’, ‘டெக்’ என்றால் ‘தொழில்நுட்பம்’). அப்போது எங்களுடைய ஆய்வுகளை வீடியோ டேப்பில் பதிவு செய்து ஐ.நா சபையின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துக்கு (FAO) அனுப்பினோம்.

அதன்பிறகு, எஃப்.ஏ.ஓ தன்னுடைய ஆய்வறிக்கைகளில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியது. இன்று உலகம் முழுக்க அந்தச் சொல் பயன்பாட்டில் உள்ளது. அது வெறும் சொல் மட்டுமல்ல, ‘மண் நலம் காக்கும் மந்திரம்’ என்பதே என்னுடைய புரிதல்.

இதுகுறித்த கடிதத்தினை டாக்டர் அப்துல்கலாம், குடியரசு தலைவராக இருந்தபோது கொடுத்தோம். மத்திய வேளாண் அமைச்சகம் தொடங்கி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு, அதை அனுப்பி வைத்தார். மண்நலம் பேணுவதில் மண்புழுவின் பங்கு குறித்து ஏற்கெனவே பார்த்துள்ளோம். மண்புழுவை வளர்த்து, மட்கக்கூடிய கழிவுகளையும், மண் நலத்தையும் சிறப்பாகக் கையாள்வது ஒருபுறமிருக்க... மண்புழுவின் வாழ்வு சொல்லும் முக்கியத் தத்துவங்களையும் நாம் மனதில் வைக்க வேண்டும்.

‘என்ன ஐயா, ஏதோ சித்தர்கள் தத்துவம் மாதிரி சொல்றீங்களே? மண்புழுவிடமிருந்து கூடவா தத்துவப்பாடம் கத்துக்க முடியும்’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சித்தர்களிடமிருந்து மட்டுமல்ல, இயற்கையின் எல்லா அம்சங்களிடமிருந்துமே, நம் வாழ்வுக்கான தத்துவங்கள் கிடைத்தபடியே உள்ளன. அப்படித்தான் மண்புழுவின் வாழ்க்கை மூலமாக மூன்று முக்கியமான தத்துவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதைப் பற்றி விளக்குகிறேன், பொறுமையாகக் கேளுங்கள்.

நமக்கு விரல்களைப் படைத்த இயற்கை, விரல்களுக்குள் எலும்பையும் படைத்து வலு சேர்த்திருக்கிறது. உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு மண்ணில் துளையிடத் தொடங்குங்கள். எவ்வளவு நேரம் உங்களால் துளையிட முடியும்? ஐந்து நிமிடம்... பத்து நிமிடம்? ‘அய்யோ! விரல் வலிக்குதுப்பா, இதுக்குமேல என்னால முடியாது’ என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், எலும்பே இல்லாத மண்புழு, தொடர்ந்து மண்ணில் துளையிடுகிறது, சுரங்கம் அமைக்கிறது. எவ்வளவு கடினமான பணியையும், சோர்ந்து போகாமல் தொடர்ந்து செய்வோமானால், வெற்றி நிச்சயம் என்பதுதான் மண்புழு சொல்லும் முதல் தத்துவம். ‘இயற்கை விவசாயம் செய்கிறேன், மண்ணை வளப்படுத்துகிறேன்’ என்று களமிறங்கும் பலர் சில காலத்துக்குப் பிறகு காணாமல் போய் விடுகின்றனர். அதனால், இயற்கை வேளாண் முறைகள் கதைக்குதவாது என்று அர்த்தமல்ல. நமக்குப் பொறுமையில்லை என்பதுதான் உண்மை. பொறுமையுடனும், கற்றுக் கொள்ளும் மனோபாவத்துடனும் இயற்கை வேளாண்மையை அணுகிப் பாருங்கள், நிச்சயம் பலன் கிடைக்கும்.

மண்புழு கற்றுத்தரும் இரண்டாவது தத்துவம், ‘தீமைகளைத் தீண்டவிடாதே’ என்பதுதான். மண்புழுவுக்கு அருகில் அமிலம், உப்பு, ஸ்பிரிட், ஆல்கஹால், பூச்சிக்கொல்லி ஆகியவற்றைக் கொண்டு சென்றால், ‘அட போப்பா, எனக்கு வேற வேலை இருக்கு’ என்று விலகிவிடும். அதிக வெளிச்சம்கூட மண்புழுவுக்கு ஆகாது. காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள் சொல்லும் நீதியைப்போல, தீமை தன்னைத் தீண்டவிடாமல் மண்புழு வாழ்கிறது. மண்ணுக்கும் உயிருண்டு என்ற புரிதல் இல்லாமல், இவ்வளவு ரசாயன விஷங்களைக் கொட்டி, மண்ணுயிர்களை நாம் காலி செய்கிறோம். மண்ணுக்குத் தீங்கு செய்யும் விஷயங்களை விவசாயத்தில் தவிர்த்தாலே, மண்நலம் காப்பதில் பாதிக் கிணறு தாண்டி விடலாம்.

மண்புழு சொல்லும் மூன்றாவது முக்கியத்தத்துவம், ‘பயனற்றவற்றை, பயனுள்ளவையாக்குவது’. மண்புழுவிடம் குப்பைகளைக் கொண்டு சேர்த்தால், அவற்றை மண்புழு எருவாக மாற்றிவிடும். நம் வாழ்க்கையிலும் சரி, மண்நலம் காப்பதிலும் சரி, பயனற்றவை என்று நாம் கருதும் எத்தனையோ பொருள்களைக் கொஞ்சம் மாற்றினால், உண்மையில் அவை நமக்கு நன்மையையே செய்கின்றன. பளபளப்பாகப் பைகளிலும், டப்பாக்களிலும் அடைத்து விற்கப்படும் வேதி உரங்களாலோ, பூச்சிக்கொல்லிகளாலோ... நமக்கோ, மண்ணுக்கோ பயனுண்டா என யோசியுங்கள். சாணமோ, மட்கும் குப்பைகளோ, உயிர்மக் கழிவுகளோ பார்ப்பதற்குப் பயனற்ற பொருள்களைப் போலத்தான் தோன்றும். ஆனால், கொஞ்சம் சிரத்தை எடுத்தோமானால், அவையெல்லாம் மண்ணுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யும் பொருள்களாக மாறிவிடும்.

இந்த மூன்று தத்துவங்களையும் மனதில் நிறுத்தி மண்நலம் காப்போம் வாருங்கள். முக்கியமாக, இரண்டாவது தத்துவம் சொல்வதுபோல, நஞ்சுரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கண்டு, மண்ணுக்கும், நமக்கும் ‘குட்பை’ சொல்லிவிட்டு நம் வயலைவிட்டுக் கிளம்பும் மண்புழுக்களை... நம் செல்லப் பிராணிகளைப்போல அழைத்து வந்து அவற்றை வளர்த்தெடுப்பதும், அவற்றின் மூலம் மண்நலம் பேணும் செயல்களில் கவனம் செலுத்துவதும் அவசியம். இவை குறித்து வரும் இதழ்களில் பார்ப்போம். அதுவரை ‘இந்தப் பணிகள் நம்மை மட்டுமல்ல, நம் வருங்காலச் சந்ததிகளையும் காப்பாற்றும்’ என்ற சிந்தனையை உங்கள் மனதில் ஊற விடுங்கள்.

-முயற்சி தொடரும்.

மரபணு மாற்றும் செல்வந்தனின் வீடும்!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை என்னைப் போன்றவர்கள் எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, அவை மண்நலனைக் கெடுக்கின்றன என்பதுதான். விளைச்சலை அதிகரிப்பதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்... அந்த விதைகளிலிருந்து வளரும் செடிகளின் இலைகள் மற்றும் இதர பகுதிகள் போன்றவை மண்ணுக்கும், மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் எவ்விதமான தீங்கு செய்கின்றன என்பதை ஆய்வு செய்வதில்லை. ஒருவேளை ஆய்வு செய்தால்கூட, அந்த ஆய்வு முடிவுகளை அறிவிப்பதில்லை.

ஒட்டுப்பயிர்கள் ஒரேயினத்தைச் சார்ந்த வெவ்வேறு வகைகளாகத்தான் கலக்கின்றன. இது காலங்காலமாக நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம். இவற்றால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், சம்பந்தமேயில்லாத உயிர்களின் மரபணுக்களை, பயிர்களில் திணிக்கும் தறிகெட்ட வேலையை மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் செய்கிறது. ஒவ்வொரு ஜீனுக்கும் (மரபுக்கும்) ஒரு என்சைம் உண்டு என்று அறிவியல் நம்புகிறது. என்சைம் என்பது புரதச்சத்து. சம்பந்தமேயில்லாத மரபணுவை, இன்னொரு பயிரில் புகுத்தும்போது, புரதச்சத்துக் குழப்பம் ஏற்பட்டு, பயிர்களின் தன்மையே மாறிவிடும் வாய்ப்புண்டு. ‘ஜீன் ஜம்பிங்’ என்று சொல்லப்படும் மரபணுத்தாவல், சுற்றியுள்ள பயிர்களில் அதிகரிக்கும் வாய்ப்புண்டு.

தங்கம், வைரம்... என பொக்கிஷம் நிறைந்த ஒரு செல்வந்தனின் வீடு திறந்து கிடந்தால் என்ன நடக்கும். அதேபோலத்தான் மரபணுக்களைத் திறந்து வைப்பது பல்வேறு தீங்குகளுக்கு வித்திடும். இது மனிதர்களையும், விலங்குகளையும் பாதிப்பது ஒருபுறமிருக்க, மண்ணையும், மண்ணில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புண்டு. எந்தவிதமான பாதிப்புக்களை உண்டாக்கும் என்பது பற்றிக்கூட நம் விஞ்ஞானிகளிடம் எந்தத் தரவுகளும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், கண்மண் தெரியாமல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு வக்காலத்து வாங்குவது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதைப் போலத்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மண்புழுவுக்கு மரியாதை!

அண்மையில் சீனா நாட்டில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச மண்புழு மாநாட்டில், ‘மண்புழு விஞ்ஞானி’ பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், ‘உலக மண்புழு சூழல் அமைப்பின்’ (World Earthworm Industry Federation) துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதோடு நீண்ட நாட்களாக மண்புழு சம்பந்தமான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காகச் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்துக்கும் மண் நலத்துக்கும் முக்கியப் பங்காற்றிவரும் மண்புழு பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல; பெருமைப்படத்தக்கதும்கூட.

மண்புழு உரத்துக்கு நிகராகுமா?

‘வெர்மி காஸ்டிங்’ (Vermi Casting) என்று சொல்லப்படும் மண்புழுக்கட்டிகள், உண்மையில் மண்புழுவின் கழிவுகளே. இலை, தழை, உயிர்மக் கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை உண்டு, அவற்றைச் செரித்து, மண்ணுக்குகந்த, ஊட்டச்சத்து மிகுந்த மண்புழுக்கட்டிகளாக மாற்றும் மகத்தான பணியை நம் தோழர் மண்புழு செய்கிறார். மண்புழுக்கட்டிகளில் என்.பி.கே (NPK) என்று சொல்லப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் போன்ற ஊட்டங்கள் இருப்பதைத் தாண்டி, நுண்ணூட்டச் சத்துக்களான போரான், தாமிரம், மாலிப்டினம், துத்தநாகம் போன்றவையும் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, மண்ணுக்கு நன்மை செய்யும் ஏராளமான நுண்ணுயிர்களும் மண்புழுக்கட்டிகளில் காணப்படுகின்றன.

என்.பி.கே மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் வேதி உரங்களிலேயே உள்ளன என்று சிலர் வாதிடலாம். ஆனால், மண்புழுக்கட்டிகளிலுள்ள ஏராளமான, பல வகைப்பட்ட நுண்ணுயிர்களை எந்தக் கடையில் வாங்க முடியும். மேலும் வேதி உரங்களால் கிடைக்கும் சத்துக்கும், மண்புழுக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் காசைக் கொட்டி வாங்கினாலும், மண்புழுக்கட்டிகளுடன் எந்த வேதியுரமும் போட்டி போட முடியாது என்பதே உண்மை.